வளிமண்டல கீழடுக்கு சுழற்சியால் மழைக்கு வாய்ப்பு.. எங்கெங்கு தெரியுமா?

Tamil Nadu Weather Update: தென்னிந்தியாவில் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக தென்தமிழக கடலோர மாவட்டங்களில் சில இடங்களில் லேசான மழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மீனவர்களுக்கு எச்சரிக்கை எதுவும் இல்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வளிமண்டல கீழடுக்கு சுழற்சியால் மழைக்கு வாய்ப்பு.. எங்கெங்கு தெரியுமா?

மழை பெய்யும் வாய்ப்பு

Published: 

14 Mar 2026 16:27 PM

 IST

சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள சமீபத்திய வானிலை அறிக்கையில், தென்னிந்திய பகுதிகளின் மேல் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த வளிமண்டல மாற்றத்தினால் தமிழகத்தின் சில பகுதிகளில் மழைக்கு வாய்ப்பு உருவாகியுள்ளது. குறிப்பாக தென்தமிழக கடலோர மாவட்டங்களில் இன்று ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது. அதே சமயம், தமிழகத்தின் பெரும்பாலான பகுதிகள், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும் என்றும் கூறப்பட்டுள்ளது.

அடுத்த சில நாட்களுக்கு மழை முன்னறிவிப்பு

வானிலை மையத்தின் கணிப்பின்படி, 15-03-2026 அன்று தென்தமிழக கடலோர மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மிக லேசான மழை பெய்யக்கூடும். இதைத் தவிர ஏனைய தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவ வாய்ப்பு உள்ளது. தொடர்ந்து 16-03-2026 அன்று நீலகிரி மற்றும் தென்தமிழக மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

17-03-2026 அன்று தென்தமிழகம், வடஉள்தமிழக மாவட்டங்கள், டெல்டா மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடிமின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. ஆனால் ஏனைய தமிழகம் மற்றும் புதுவை பகுதிகளில் வறண்ட வானிலை நீடிக்கக்கூடும்.

18-03-2026 அன்று தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் இடிமின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். தொடர்ந்து 19-03-2026 அன்று ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக கூறப்பட்டுள்ளது. மேலும் 20-03-2026 அன்று தமிழக கடலோர மாவட்டங்கள், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும் என்றும், ஏனைய மாவட்டங்களில் வறண்ட வானிலை நிலவக்கூடும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதிகபட்ச வெப்பநிலை பற்றிய முன்னறிவிப்பு

அடுத்த சில நாட்களுக்கு அதிகபட்ச வெப்பநிலை மாற்றம் குறித்தும் வானிலை மையம் தகவல் வெளியிட்டுள்ளது. அதன்படி 14-03-2026 மற்றும் 15-03-2026 ஆகிய நாட்களில் தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் அதிகபட்ச வெப்பநிலையில் குறிப்பிடத்தக்க மாற்றம் இருக்க வாய்ப்பு குறைவு. இருப்பினும் வெப்பநிலை சற்று உயரக்கூடும் என கணிக்கப்பட்டுள்ளது.

ஆனால் 16-03-2026 முதல் 18-03-2026 வரை தமிழகத்தில் அதிகபட்ச வெப்பநிலை 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் வரை குறையக்கூடும். இதனால் சில பகுதிகளில் வெப்பநிலை சற்று தணிவடையும் நிலை உருவாகலாம் என்றும் கூறப்பட்டுள்ளது. மேலும் 14 மற்றும் 15 ஆம் தேதிகளில் வெப்பநிலை இயல்பை விட சற்று அதிகமாக இருக்கக்கூடும். அதே நேரத்தில் 16 முதல் 18 ஆம் தேதி வரை வெப்பநிலை இயல்பை விட சற்றுக் குறைவாக இருக்க வாய்ப்பு இருப்பதாகவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

குறைந்தபட்ச வெப்பநிலை நிலவரம்

குறைந்தபட்ச வெப்பநிலை மாற்றம் குறித்து வெளியிடப்பட்ட தகவலின்படி, 14-03-2026 முதல் 18-03-2026 வரை தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் குறைந்தபட்ச வெப்பநிலையில் பெரிய மாற்றம் ஏற்படும் வாய்ப்பு இல்லை. எனினும் சில இடங்களில் வெப்பநிலை சற்று உயரக்கூடும்.

மேலும் இயல்பு நிலையை ஒப்பிடுகையில் தமிழகத்தின் ஓரிரு இடங்களில் குறைந்தபட்ச வெப்பநிலை சற்று அதிகமாக இருக்கக்கூடும். ஆனால் பெரும்பாலான தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் குறைந்தபட்ச வெப்பநிலை இயல்பை ஒட்டி இருக்கக்கூடும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளுக்கான வானிலை

சென்னை மற்றும் அதன் புறநகர் பகுதிகளுக்கான வானிலை முன்னறிவிப்பில், இன்று (14-03-2026) வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் என கூறப்பட்டுள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 33 முதல் 34 டிகிரி செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 24 முதல் 25 டிகிரி செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.

அதேபோல் நாளை (15-03-2026) கூட சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டாரங்களில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 33-34 டிகிரி செல்சியஸாகவும், குறைந்தபட்ச வெப்பநிலை 24-25 டிகிரி செல்சியஸாகவும் இருக்கக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Follow Us
Related Stories
திமுகவின் பித்தலாட்ட நாடகம் ஒருபோதும் எடுபடாது – கருத்துக்கணிப்புகள் குறித்து எடப்பாடி பழனிசாமி கருத்து..
வெற்றிப்பெற்று நேராக பனையூர் வாருங்கள்.. நான் காத்திருப்பேன் – வேட்பாளர்களுக்கு விஜய் அறிவுரை..
மாவட்ட தேர்தல் அதிகாரிகளுடன் தலைமை தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் முக்கிய ஆலோசனை..
உழைப்பாளர் தினம்.. வாழ்த்து சொன்ன முதல்வர் ஸ்டாலின் – அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி..
மே 2-ஆம் தேதி 8 மாவட்டங்களுக்கு கனமழை அலர்ட்… எந்தெந்த மாவட்டங்கள் தெரியுமா?
சென்னை மெட்ரோ ரயிலில் முக்கிய மாற்றம்.. நாளை முதல் சிங்கார சென்னை அட்டை மட்டுமே செல்லுபடியாகும்..
புற்றுநோயால் பாதிக்கப்பட்ட மனைவிக்காக பைக்கையே ஆம்புலன்ஸாக மாற்றிய கணவர் - நெகிழ்ச்சி சம்பவம்
560 நாட்களாக செல்போன் டவர் மீது ஏறி போராட்டம் நடத்திய விவசாயி
ஹிமாச்சல் பிரதேசத்தின் மலைப்பகுதிகளை பாதுகாக்கும் உள்ளூர் தெய்வம்..
காலநிலை மாற்றத்தால் பாதிக்கப்படும் நாடுகளில் இந்தியா 9வது இடம்..