சென்னையில் கனமழை தொடருமா? டெல்டாவுக்கு முக்கிய அலர்ட்.. வெதர்மேன் அப்டேட்!

Tamil Nadu Weather Today : சென்னையில் தொடர்ந்து மூன்று நாட்களாக கனமழை பெய்து வரும் நிலையில், இன்று (2025 ஆகஸ்ட் 23) மிதமான மழை பெய்யக் கூடும் என தமிழ்நாடு வெதர்மேன் தெரிவித்துள்ளார். மேலும், மதுரை, சிவகங்கை உள்ளிட்ட மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

சென்னையில் கனமழை தொடருமா? டெல்டாவுக்கு முக்கிய அலர்ட்.. வெதர்மேன் அப்டேட்!

தமிழ்நாடு வெதர்மேன்

Updated On: 

23 Aug 2025 13:57 PM

சென்னை, ஆகஸ்ட் 23 : சென்னையில் 2025 ஆகஸ்ட் 23ஆம் தேதியான இன்று மிதமான மழையே (Chennai Weather Today) பெய்யக் கூடும் என தமிழ்நாடு வெதர்மேன் (Tamil Nadu Weatherman) பிரதீப் ஜான் தெரிவித்துள்ளார். மேலும், இன்று சிவகங்கை, மதுரை, கடலூர், டெல்டா மாவட்டங்களில் இடி, மின்லுடன் கனமழை பெய்யக் கூடும் எனவும் வெதர்மேன் தெரிவித்துள்ளார். தமிழகம் முழுவதும் பல்வேறு மாவட்டங்களில் கடந்த இரண்டு நாட்களாக மழை பெய்து வருகிறது. கடந்த வாரம் முழுவதும் தமிழகத்தில் வெயில் வாட்டி வதைத்தது. இந்த நிலையில், தற்போது தமிழகம் முழுவதுமே பரவலாக மழை பெய்து வருகிறது. குறிப்பாக, சென்னையில் மூன்று நாட்களாக தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. சென்னை மட்டுமின்றி அதன் புறநகரிலும் மழை பெய்து வருகிறது. கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக சென்னை ஒக்கியம், துரைப்பாக்கத்தில் 19.5 செ.மீ மழை பதிவாகி இருக்கிறதுஇதனால், பல்வேறு இடங்களில் மழைநீர் தேங்கியுள்ளது. மழைநீரை அகற்றும் பணிகளும் மும்முரமாக நடந்து வருகிறது.

தற்போது கூட, வானம் மேகமூட்டத்துடன் இருக்கிறது. எனவே, இன்றும் மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில், இதுகுறித்து தமிழ்நாடு வெதர்மேன் தனது எக்ஸ் தளத்தில் பகிர்ந்துள்ளார். அதாவது, “வட தமிழக மாவட்டங்களில் வேலூர், ராணிப்பேட்டை, சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்களில் நேற்று மழை வெளுத்து வாங்கியது. இன்று மழை தென் தமிழகத்தில் பெய்யும் என எதிர்பார்க்கலாம். மேலும், சேலம், தருமபுரி, நாமக்கல், கள்ளக்குறிச்சி, பெரம்பலூர், அரியலூர், சிவகங்கை, புதுக்கோட்டை, மதுரை, கடலூர் மற்றும டெல்டா மாவட்டங்களில் இன்று கனமழை பெய்யக் கூடும்.

Also Read : சென்னையில் 12 செ.மீ மழை.. 10 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை..

வெதர்மேன் அலர்ட்


சென்னையை பொறுத்தரை, இன்று இனிமையான நாளாக இருக்கும். வெப்பநிலை 31 முதல் 33 டிகிரி செல்சியஸ் இருக்கும். இன்று மழைக்கு சிறிய பிரேக் இருக்கலாம். மதுரை பாளையங்கோம்டை பெல்ட்டில் வெப்பநிலை 37 முதல் 38 டிகிரி செல்சியஸ் இருக்கும். பெங்களூருவில் இரவில் சில இடங்களில் மிதமான மழை பெய்யும்,. மும்பையிலும் மிதமான மழை பெய்யும்.

Also Read : 100 டிகிரி பாரன்ஹீட்டை கடந்து பதிவாகும் வெப்பநிலை.. அடுத்த 7 நாட்களுக்கு எப்படி இருக்கும்?

ஹைதராபாத்தில் வறண்டை வானிலை நிலவும்” என கூறினார். முன்னதாக, அவர் கூறுகையில், “கடந்த 1996ஆம் ஆண்டு புயல் சின்னம் உருவாகி கனமழை பெய்த போது தான், சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு மாவட்டங்களில் மூன்று நாட்கள் கனமழை பெய்தது.

அதன்பிறகு தற்போது, சென்னையில் அடுத்தடுத்து கனமழை பதிவாகி இருக்கிறது” என தெரிவித்தார்.   இதற்கிடையில், நாகை, திருவாரூர், தஞ்சை, கடலூர், மயிலாடுதுறை, சிவகங்கை, ராமநாதபுரம் உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களில் 2025 ஆகஸ்ட் 23ஆம் தேதியான இன்று கனமழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.