பிங்க் ஆட்டோக்களில் ஆண்கள் இருந்தால் நடவடிக்கை.. அதிகாரிகள் எச்சரிக்கை!
Pink Auto Chennai : பிங்க் ஆட்டோவில் ஆண்கள் பயணித்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று போக்குவரத்து துறை அதிகாரிகள் எச்சரித்துள்ளனர். மேலும், சம்பந்தப்பட்ட ஆட்டோக்கள் பறிமுதல் செய்யப்படும் என்று அதிகாரிகள் கூறியுள்ளனர். பிங்க் ஆட்டோவில் ஆண்கள் பயணிப்பதாக புகார்கள் எழுந்த நிலையில், நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

பிங்க் ஆட்டோ
சென்னை, மே 23 : பெண்களுக்கான பிங்க் ஆட்டோவில் (Pink auto)ஆண்கள் பயணித்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என போக்குவரத்து துறை அதிகாரிகள் எச்சரிககை விடுத்துள்ளனர். விதிகளை மீறும் ஆட்டோக்கள் பறிமுதல் செய்யப்படும் என்றும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். பெண்களின் பாதுகாப்பிற்காக தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. மேலும், பெண்களின் பாதுகாப்புக்காக புதிய திட்டங்களையும் தமிழக அரசு செயல்படுத்தி வருகிறது. அதனை மேலும், வலுப்படுத்த வேண்டும் என்பதற்காக ஒரு புதிய முன்னெடுப்பாக பிங்க் நில ஆட்டோக்களை தமிழக அரசு அறிமுகப்படுத்த திட்டமிட்டது. பெண்கள் மக்கள் பயணிக்கும் வகையில், அவர்களுக்கு பிரத்யேகமாக இளஞ்சிவப்பு ஆட்டோக்களை அறிமுகப்படுத்த திட்டமிட்டது.
பிங்க் ஆட்டோவில் ஆண்கள்
இதற்ககாக பலகட்ட ஆலோசனைகள் நடந்தது. இந்த நிலையில், 2025 மார்ச் 8ஆம் தேதி முதல்வர் மு.க.ஸ்டாலின் சென்னையில் பெண்களுக்கான இளஞ்சிவப்பு ஆட்டோ சேவையை தொடங்கி வைத்தார். இது பெண்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்று வருகிறது. பிங்க் நிற ஆட்டோக்களில் ஜிபிஎஸ் கருவிகள், பனிக் பட்டன் போன்ற பாதுகாப்பு அம்சங்களுடன் உள்ளன.
இதற்னெ சென்னையில் உள்ள 250 பெண்களுக்கு தலா ஒரு ரூ.1 லட்சம் தமிழக அரசு மானியமாக வழங்கியது. இந்த ஆட்டோ சேவை தொடங்கப்பட்டதை அடுத்து, பெண்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்று வருகிறது. இதற்கிடையில், பிங்க் நில ஆட்டோக்களின் ஆண்கள் பயணிப்பதாக புகார்கள் எழுந்த வண்ணம் உள்ளன.
அண்மையில் கூட, பிங்க் ஆட்டோ ஒன்றை ஆண் ஒருவர் ஓட்டிச் சென்றது பெரும் விவாதத்தை கிளப்பியது. தன்னுடைய மனைவிக்கு உடல்நிலை சரியில்லாத காரணத்தால் பிங்க் ஆட்டோ ஓட்டியதாக அந்த நபர் விளக்கம் அளித்தார். அதனை தொடர்ந்து, சென்னையில் பல்வேறு இடங்களில் ஆண்கள் பிங்க் ஆட்டோவை ஓட்டுவதாக புகார்கள் எழுந்து வருகிறது.
எச்சரிச்கை விடுத்த அதிகாரிகள்
ஆண்கள் பிங்க் ஆட்டோவை ஓட்டக் கூடாது என்றும் அப்படி செய்தால் இந்த திட்டத்தின் அடிப்படை நோக்கமே சிதைக்கப்படுவதாக பெண்கள் கூறி வருகின்றனர். இந்த புகாரை தொடர்ந்து, போக்குவரத்து துறை அதிகாரிகள் முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளனர். அதாவது, பெண்களுக்கான பிங்க் ஆட்டோவில் ஆண்கள் பயணித்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என போக்குவரத்து துறை அதிகாரிகள் எச்சரிககை விடுத்துள்ளனர்.
இதுகுறித்து போக்குவரத்து அதிகாரி ஒருவர் கூறுகையில், “பிங்க் நி ஆட்டோக்களில் விதிமீறும் நபர்களை பிடித்து வருகிறோம். நாங்கள் இதுவரை மூன்று அட்டோக்களை பறிமுதல் செய்துள்ளோம். மேலும், சில ஆட்டோக்களுக்கு அபராதம் விதித்துள்ளோம். எனவே, பிங்க் ஆட்டோவில் விதிகள் மீறப்பட்டால் நடவடிக்கை எடுக்கப்படும். மேலும், சம்பந்தப்பட்ட ஆட்டோ பறிமுதல் செய்யப்படும்” என்று தெரிவித்தார்.