Latest Newsவீடியோதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

Covid 19 : அமைச்சர் துரைமுருகனுக்கு கொரோனா தொற்று உறுதி.. மருத்துவமனையில் சிகிச்சை!

Durai Murugan Tests Positive for COVID-19 | உலக அளவில் மீண்டும் தீவிரம் எடுத்துள்ள கொரோனா பரவல் எதிரொலியாக தமிழகத்திலும் தொற்று பரவல் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே செல்கிறது. இந்த நிலையில், தமிழக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகனுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ள நிலையில், அவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

Covid 19 : அமைச்சர் துரைமுருகனுக்கு கொரோனா தொற்று உறுதி.. மருத்துவமனையில் சிகிச்சை!
துரைமுருகன்
vinalin-sweety
Vinalin Sweety | Updated On: 15 Jun 2025 08:00 AM

சென்னை, ஜூன் 07 : உலக அளவில் கொரோனா தொற்று பரவல் (Covid 19 Spread) அதிகரித்து வருகிறது. அந்த வகையில் தமிழகத்திலும் தொற்று எண்ணிக்கை நாளுக்கு நாள் உயர்ந்து வருகிறது. இந்த நிலையில், தமிழக நீர்வளத்துறை அமைச்சர் (Minister of Water Resources) துரைமுருகன் (Durai Murugan) கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளார். இதன் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அவரின் தற்போதைய உடல்நிலை குறித்து விரிவாக பார்க்கலாம்.

உலக அளவில் மீண்டும் தீவிரம் எடுத்த கொரோனா தொற்று பரவல்

2019 ஆம் ஆண்டு முதல் முதலில் சீனாவில் பரவ தொடங்கிய கொரோனா வைரஸ், படிப்படியாக உலகம் முழுவதும் பரவி கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. கொரோனா வைரஸ் பரவல் காரணமாக, ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்ட நிலையில், மக்கள் வீட்டு சிறைக்குள் அடைக்கப்பட்டனர். இதனால், சுமார் இரண்டு ஆண்டு காலம் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலும் பாதிக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து உலகம் மெல்ல மெல்ல அதன் இயல்பு நிலைக்கு திரும்பியது. இந்த நிலையில், தற்போது மீண்டும் கொரோனா பரவல் தொடங்கியுள்ளது.

உலகின் பல்வேறு பகுதிகளில் மீண்டும் கொரோனா தொற்று எண்ணிக்கை உயர தொடங்கியுள்ளது. 2019 ஆம் ஆண்டு பரவ தொடங்கிய கொரோனா தொற்றுக்கு லட்சக்கணக்கான உயிர்கள் பலியான நிலையில், தற்போது ஏற்பட்டுள்ள தொற்று பரவலுக்கும் பொதுமக்கள் பலியாகி வருகின்றனர். அந்த வகையில், நேற்று (ஜூன் 06, 2025) விழுப்புரத்தை சேர்ந்த இளைஞர் ஒருவர் கொரோனா தொற்றால் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

அமைச்சர் துரைமுருகனுக்கு கொரோனா தொற்று உறுதி

இந்த நிலையில், தமிழ்நாடு நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் கொரோனா தொற்று காரணமாக நேற்று (ஜூன் 06, 2025) மருத்துவமனையில் அனுமதிகப்பட்டார். லேசான காய்ச்சல் காரணமாக சென்னை குரோம்பேட்டையில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவருக்கு கொரோனா தொற்று இருப்பதை மருத்துவர்கள் உறுதி செய்துள்ளனர். இந்த நிலையில், மருத்துவர்கள் அவருக்கு தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர்.