புதுக்கோட்டையில் அதிர்ச்சி.. பள்ளி கழிவறையை சுத்தம் செய்த மாணவர்கள்.. அதிரடி நடவடிக்கை
Pudukottai Goverment School Student Clean Toilet : புதுக்கோட்டையில் உள்ள அரசுப் பள்ளியில் மாணவர்கள் கழிவறையை சுத்தம் செய்த வீடியோ சமூக வலைதளங்களில் வெளியானது. இதனை அடுத்து, மாவட்ட கல்வி அலுவலர் சம்பந்தப்பட்ட பள்ளிக்கு சென்று விசாரணை நடத்தி இருக்கிறார்.

புதுக்கோட்டை பள்ளி
புதுக்கோட்டை, ஜூலை 13 : புதுக்கோட்டையில் பள்ளி கழிவறையை மாணவர்கள் சுத்தம் செய்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வெளியானது. இதனை அடுத்து, முதன்மை கல்வி அலுவலர் அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளது. தமிழகத்தில் பள்ளிகளை மேம்படுத்தவும், மாணவர்களின் கற்றல் திறனை அதிகரிக்கவும் பள்ளிக்கல்வித்துறை பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. மேலும், பாடங்களை தாண்டி மாணவர்களுக்கு சுய ஒழுக்கம், விழிப்புணர்வு போன்றவற்றை கற்று தருகிறது. இப்படியான அரசுப் பள்ளிகளில் படிக்கும் மாணவர்களை மெழுகேற்ற பள்ளிக்கல்வித்துறை நடவடிக்கை எடுத்து வருகிறது. அதே நேரத்தில், பள்ளிகளில் மாணர்களை தூய்மை பணிகளில் ஈடுபட வைப்பது, கழிவறையை சுத்தம் செய்ய வைப்பது உள்ளிட்ட சம்பவங்கள் தொடர் நடந்து வருகிறது.
இதுபோன்ற சம்பவங்களை தடுக்க பெற்றோர் வலியுறுத்தி வருகின்றனர். அப்படி இருந்தும் இதுபோன்ற அவலங்கள் தொடர் கதையாகி வருகிறது. அந்த வகையில், புதுக்கோட்டையில் உள்ள பள்ளியில் மாணவர்கள் கழிவறையை சுத்தம் செய்த வீடியோ வெளியாகி உள்ளது. புதுக்கோட்டை மாவட்டம் தேக்காட்டூர் நமணசமுத்திரம் ஊராட்சியில் தொடக்கப்பள்ளி ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில் சுற்றுவட்டார பகுதியில் உள்ள மாணவர்கள் படித்து வருகின்றனர். இந்த பள்ளியின் தலைமை ஆசிரியராக கலா என்பவர் பணியாற்றி வருகிறார். இந்த பள்ளியில் இவர் 18 ஆண்டுகளாக பணியாற்றி வருவதாக தெரிகிறது.
Also Read : பள்ளிகளில் ’ப’ வடிவில் இருக்கை வசதி.. நிறுத்தி வைத்ததா பள்ளிக்கல்வித்துறை? உண்மை என்ன?
பள்ளி கழிவறை சுத்தம் செய்த மாணவர்கள்
இந்த நிலையல், இந்த பள்ளிகளில் படிக்கும் மாணவர்கள் கழிவறையை சுத்தம் செய்துள்ளனர். இதனை அங்கிருந்த மர்ம நபர் ஒருவர் வீடியோ எடுத்து சமூக வலைதளங்களில் வெளியிட்டுள்ளார். இந்த சம்பவம் 2025 ஜூலை 10ஆம் தேதி நடந்துள்ளது.
வீடியோ வெளியாகி பரவியதை அடுத்து, புதுக்கோட்டை மாவட்ட முதன்மை கல்வி அலுவலகர் சண்முகம் விசாரணை மேற்கொண்டார். பள்ளிக்கு சென்று விசாரணை மேற்கொண்டு இருக்கிறார். அப்போது, உள்ளூர் மக்கள் மாணவர்கள் கழிவறை சுத்தம் செய்தது உண்மை தான் என கூறி இருக்கின்றனர்.
மேலும், மாணவர்கள் பள்ளியை தூய்மைப்படுத்தும் பணியை செய்து வருவதாகவும் கூறியுள்ளனர். தொடர்ந்து, மாணவர்கள் கழிவறையை சுத்தம் செய்தது தொடர்பாக பள்ளியின் தலைமை ஆசிரியர் கலா விளக்கம் அளிக்க வேண்டும் என மாவட்ட கல்வி அலுவலர் உத்தரவிட்டார்.
Also Read : தமிழகத்தில் பள்ளி செல்லாத குழந்தைகள் கணக்கெடுப்பு எப்போது தொடக்கம்?
அதன்படி, ஆசிரியர் கமலா கூறுகையில், பள்ளியில் கழிவறையை சுத்தம் செய்வதற்கு ஆட்கள் இருக்கின்றனர். தன் மீது பள்ளியின் சமையலருக்கும் கால்புணர்ச்சியால் மாணவர்களை இதுபோன்று செய்ய வைத்து வீடியோ எடுத்து வெளியிட்டதாக அவர் கூறியிருக்கிறார். இதனை கேட்ட மாவட்ட கல்வி அலுவலர், இதுகுறித்து 2025 ஜூலை 14ஆம் தேதி நேரில் விசாரணை நடத்தப்பட்டு சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என கூறினார்.