Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

இன்று துவங்கும் தென்மேற்கு பருவமழை… தமிழகத்தில் கனமழை வெளுக்கும்.. லேட்டஸ்ட் வானிலை அப்டேட்!

Southwest Monsoon : அந்தமான் கடல் பகுதியில் தென்மேற்கு பருவமழை 2025 மே 13ஆம் தேதியான இன்று துவங்குகிறது. எப்போதுமே, தென்மேற்கு பருவமழை மே மாதம் கடைசி வாரத்தில் தொடங்கும். ஆனால், 2025ல் தென்மேற்கு பருவமழை முன்கூட்டியே தொடங்க உள்ளது. தமிழகத்தை பொறுத்தவரை தென்மேற்கு பருவமழை ஜூன் முதல் வாரத்தில் தொடங்கும் என சொல்லப்படுகிறது.

இன்று துவங்கும் தென்மேற்கு பருவமழை… தமிழகத்தில் கனமழை வெளுக்கும்.. லேட்டஸ்ட் வானிலை அப்டேட்!
தென்மேற்கு பருவமழை (கோப்புப்படம்)Image Source: PTI
umabarkavi-k
Umabarkavi K | Published: 13 May 2025 06:20 AM

சென்னை, மே 13 : அந்தமான கடல், அந்தமான நிகோபர் தீவு மற்றும் தெற்கு வங்கக் கடல் பகுதிகளில் 2025 மே 13ஆம் தேதியான இன்று தென்மேற்கு பருவமழை (southwest monsoon) தொடங்க உள்ளதாக வானிலை மையம் (Tamil Nadu weather Alert) தெரிவித்துள்ளது. இதனையொட்டி, தமிழகத்தில் அடுத்த மூன்று நாட்களுக்கு கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் 2025 மார்ச் மாதத்தில் இருந்தே கோடை வெயில் கொளுத்தி எடுக்கிறது. பல்வேறு மாவட்டங்களில் வெப்பநிலை இயல்பை விட அதிகமாக இருந்தது. 100 டிகிரி வரை வெப்பநிலை பதிவாகி வருகிறது.

இன்று துவங்கும் தென்மேற்கு பருவமழை

இதனால், மதிய நேரத்தில் மக்கள் வெளியே செல்வதை தவிர்த்து வருகின்றனர். தற்போது கத்திரி வெயில் இருப்பதால், வெயிலின் தாக்கம் கடுமையாக உள்ளது. இதற்கிடையில், மழையும் பெய்து வருகிறது. பல்வேறு மாவட்டங்களில் நல்ல மழை பெய்து வருகிறது.

இந்த நிலையில், அடுத்த சில தினங்களுக்கான வானிலை நிலவரத்தை பார்ப்போம். அதாவது, அந்தமான் கடல் மற்றும் அந்தமான நிகோபர் தீவில் தென்மேற்கு பருவமழை 2025 மே 13ஆம் தேதியான இன்று தொடங்குகிறது. எப்போது, மே மாதம் கடைசி வாரத்தில் தென்மேற்கு பருவமழை துவங்கும்.

ஆனால், 2025ல் முன்கூட்டியே தென்மேற்கு பருவமழை தொடங்க உள்ளது. மேலும், 2025 மே 13ஆம் தேதியான இன்று தமிழகத்தில் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது. 2025 மே 14ஆம் தேதி தமிழகத்தில் ஒருசில இடங்களில் மிதமான மழையும், நீலகிரி, கோவை, திருப்பூர், திண்டுக்கல், ஈரோடு, தருமபுரி, கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், சேலம், திருவண்ணாமலை மாவட்டங்களில் கனமழை வெளுக்கும் என வானிலை மையம் கூறியுள்ளது.

தமிழகத்தில் கனமழை வெளுக்கும்

மேலும், 2025 மே 15ஆம் தேதி நீலகிரி, கோவை, ஈரோடு, தருமபுரி, திருப்பத்தூர், கிருஷ்ணகிரி ஆகிய மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. 2025 மே 16ஆம் தேதி கிருஷ்ணகிரி, தருமபுரி, திருப்பத்தூர், வேலுர் ஆகிய மாவட்டங்களில் கனமழை பெய்யும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது.

இதன்பிறகு 2025 மே 18ஆம் தேதி வரை மிதமான மழையே பெய்யும் என கூறப்பட்டுள்ளது. சென்னையை பொறுத்தவரை 2025 மே 13ஆம் தேதியான இன்று வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் அதிகபட்ச வெப்பநிலை 39 டிகிரி செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநைல 29 முதல் 30 டிகிரி செல்சியஸை ஒட்டியும் இருக்கக் கூடும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது. 2025 மே 13ஆம் தேதி முதல் 14ஆம் தேதி வரை தமிழக்ததில் ஓரிரு இடங்களில் அதிகபட்ச வெப்பநைல 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் இயல்பை விட இருக்கக் கூடும் என கூறப்பட்டுள்ளது.

 

தினமும் காலை உணவில் ஏன் ராகியை சேர்க்க வேண்டும்?
தினமும் காலை உணவில் ஏன் ராகியை சேர்க்க வேண்டும்?...
ஆயுதப்படை வீரர்களை சந்தித்த பிரதமர் மோடி.. சொன்னது என்ன?
ஆயுதப்படை வீரர்களை சந்தித்த பிரதமர் மோடி.. சொன்னது என்ன?...
கூலியில் ஆக்‌ஷன் காட்சிகளில் ரஜினி எப்படி நடித்துள்ளார் தெரியுமா?
கூலியில் ஆக்‌ஷன் காட்சிகளில் ரஜினி எப்படி நடித்துள்ளார் தெரியுமா?...
பிஎஃப் கணக்கில் தாமதமாக வட்டி வரவு வைக்கப்படுவது சிக்கலா?
பிஎஃப் கணக்கில் தாமதமாக வட்டி வரவு வைக்கப்படுவது சிக்கலா?...
சிறந்த செரிமானத்திற்கான 7 சிறந்த உணவுகள் என்னென்ன?
சிறந்த செரிமானத்திற்கான 7 சிறந்த உணவுகள் என்னென்ன?...
9 குற்றவாளிகளுக்கும் ஆயுள் தண்டனை.. பொள்ளாச்சி வழக்கில் தீர்ப்பு
9 குற்றவாளிகளுக்கும் ஆயுள் தண்டனை.. பொள்ளாச்சி வழக்கில் தீர்ப்பு...
அகவிலைப்படி உயர்வு தொடர்பாக வெளியான முக்கிய தகவல்!
அகவிலைப்படி உயர்வு தொடர்பாக வெளியான முக்கிய தகவல்!...
45 வெள்ளிக்கிழமை சென்றால் பலன்.. ஈரோடு பெரிய மாரியம்மன் கோயில்!
45 வெள்ளிக்கிழமை சென்றால் பலன்.. ஈரோடு பெரிய மாரியம்மன் கோயில்!...
மாற்றப்பட்ட இறுதிப்போட்டி தேதி! மே 17 முதல் மீண்டும் ஐபிஎல் 2025!
மாற்றப்பட்ட இறுதிப்போட்டி தேதி! மே 17 முதல் மீண்டும் ஐபிஎல் 2025!...
நடிகர் சூரி உடன் நடித்தது மிகவும் பெருமையாக இருக்கிறது...
நடிகர் சூரி உடன் நடித்தது மிகவும் பெருமையாக இருக்கிறது......
கோடை வெயிலின் தாக்கம்: தமிழ்நாட்டில் காய்கறி விலை அதிகரிப்பு..!
கோடை வெயிலின் தாக்கம்: தமிழ்நாட்டில் காய்கறி விலை அதிகரிப்பு..!...