Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

9 பேரும் குற்றவாளிகள்.. பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை வழக்கில் நீதிமன்றம் தீர்ப்பு!

Pollachi Harassment Case : பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை வழக்கில் கைதான 9 பேரும் குற்றவாளிகள் என கோவை மகிளா நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. கிட்டதட்ட ஆறு ஆண்டுகளுக்கு இந்த வழக்கில் தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. குற்றவாளிகள் 9 பேருக்கும் சாகும் வரை ஆயுள் தண்டனை வழங்க வேண்டும் என அரசு தரப்பில் வாதிடப்பட்டுள்ளது.

9 பேரும் குற்றவாளிகள்.. பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை வழக்கில் நீதிமன்றம் தீர்ப்பு!
பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை வழக்கு
umabarkavi-k
Umabarkavi K | Updated On: 13 May 2025 11:37 AM

கோவை, மே 13 : தமிழ்நாட்டை உலுக்கிய பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை வழக்கில் (Pollachi Harassment Case) குற்றம்சாட்டபட்ட 9 பேரும் குற்றவாளிகள் என தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது.  கோவை மகிளா நீதிமன்ற நீதிபதி நந்தினி தேவி இந்த தீர்ப்பை வழங்கி உள்ளார்.  பரிராஜன், திருநாவுக்கரசு, வசந்த குமார், சதீஷ், மணிவண்ணன், ஹேரன்பால், பாபு, அருளானந்தம், அருண்குமார் ஆகிய 9 பேரும் குற்றவாளிகள் என தீர்ப்பு அளிக்கப்பட்டுள்ளது. கடந்த ஆறு ஆண்டுகளாக இந்த வழக்கு விசாரணை நடத்தப்பட்டு வந்த நிலையில், தற்போது தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. மேலும், 9 குற்றவாளிகளுக்கு உச்சபட்ச தண்டனையாக சாகும் வரை ஆயுள் தண்டனை வழங்க அரசு தரப்பில் வாதிடப்பட்டதாக வழக்கறிஞர் கூறியுள்ளார்.

பொள்ளாச்சி வன்கொடுமை வழக்கில் தீர்ப்பு

மேலும், நண்பகல் 12 மணிக்கு 9   குற்றவாளிகளுக்கான தண்டனை விவரம் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து பேசிய சிபிஐ தரப்பு வழக்கறிஞர், “பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை வழக்கில் 9 பேரும் குற்றவாளிகள் என தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. தண்டனை விவரம் குறித்து குற்றவாளிகளிடம் கேட்கையில், வயது காரணம், திருமணமாகதவர்கள், வயதான பெற்றோர்கள் என காரணமாக கூறி, அவர்கள் குறைந்தப்பட்ச தண்டனையை கோரியுள்ளனர்.

ஆனால், இதற்கு எதிர்த்து அரசு தரப்பில் கடுமையான வாதங்கள் முன்வைக்கப்பட்டுள்ளன. இந்த வழக்கை பொறுத்தவரை, 366டி பிரிவின்படி, பெண்கள் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டது நிரூபனமாகி உள்ளது. மேலும், 3762N -ன்படி, மீண்டும் பாலியல் வன்கொடுமை செய்தது நிரூபிக்கப்பட்டது.

இந்த கொடூர குற்றமாக நீதிமன்றம் கூறியது. எனவே, இந்த 9 குற்றவாளிகளுக்கு சாகும் வரை ஆயுள் தண்டனை வழங்க அரசு தரப்பில் வாதிடப்பட்டது. நண்பகல் 12 மணிக்கு இந்த வழக்கின் தீர்ப்பை நீதிமன்றம் வழங்கும். மேலும், பாதிக்கப்பட்ட பெண்களுக்கு இழப்பீடு வழங்கவும் நீதிபதியிடம் முறையிட்டோம். பாதிக்கப்பட்ட பெண்கள் அனைவரும் தாமாக முன்வந்து சாட்சியளித்தனர். வழக்கில் ஒருவர் கூட பிறழ் சாட்சியாக மாறவில்லை” என்று கூறினார்.

வழக்கின் பின்னணி

2019ஆம் ஆண்டு இளம்பெண்களை மிரட்டி, பாலியல் வன்கொடுமை செய்து வீடியோ எடுத்த சம்பவம் ஒட்டுமொத்த நாட்டையே உலுக்கியது. 2019ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் பொள்ளாச்சி கிழக்கு காவல் நிலையத்தில் இளம்பெண் புகார் அளித்ததை அடுத்து, இந்த சம்பவம் வெளிச்சத்திற்கு வந்தது. முதலில் பொள்ளாச்சி கிழக்கு போலீசார் விசாரித்து வந்த நிலையில், அதன்பிறகு சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டது.

அதன்பிறகு சிபிஐ இந்த வழக்கை கையில் எடுத்தது. அப்போது, இந்த வழக்கில் 2019ஆம் ஆண்டில் 9 பேர் கைது செய்யப்பட்டனர். சபரிராஜன் (32), கே. திருநாவுக்கரசு (34), எம். சதீஷ் (33), டி. வசந்தகுமார் (30), ஆர். மணி (32), மணிவண்ணன் (32), பி. பாபு (33), டி. ஹரோனிமஸ் பால் (32), கே. அருளானந்தம் (39), எம். அருண்குமார் (39) ஆகியோரை கைது செய்தனர்.

இந்ந வழக்கு கோவை மகிளா நீதிமன்றத்தில் நடந்த வந்தது.  பல கட்ட விசாரணைகள் நடந்தது. சிபிஐ குற்றப்பத்திரிகை தாக்குதல் நடந்தது.  இந்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட 9 பேரிடம் 50 கேள்விகள் கேட்கப்பட்டன. இதற்கு அவர்கள் எழுத்துப்பூர்வமாக பதிலளித்தனர். மேலும், இந்த வழக்கில் 40க்கும் மேற்பட்ட சாட்சிகளை நீதிமன்றம் விசாரித்தது. இந்தநிலையில், இந்த வழக்கின் தீர்ப்பு இன்று 2025 மே 13ஆம் தேதி அறிவிக்கப்பட்டது.

பிஎஃப் கணக்கில் தாமதமாக வட்டி வரவு வைக்கப்படுவது சிக்கலா?
பிஎஃப் கணக்கில் தாமதமாக வட்டி வரவு வைக்கப்படுவது சிக்கலா?...
சிறந்த செரிமானத்திற்கான 7 சிறந்த உணவுகள் என்னென்ன?
சிறந்த செரிமானத்திற்கான 7 சிறந்த உணவுகள் என்னென்ன?...
9 குற்றவாளிகளுக்கும் ஆயுள் தண்டனை.. பொள்ளாச்சி வழக்கில் தீர்ப்பு
9 குற்றவாளிகளுக்கும் ஆயுள் தண்டனை.. பொள்ளாச்சி வழக்கில் தீர்ப்பு...
அகவிலைப்படி உயர்வு தொடர்பாக வெளியான முக்கிய தகவல்!
அகவிலைப்படி உயர்வு தொடர்பாக வெளியான முக்கிய தகவல்!...
45 வெள்ளிக்கிழமை சென்றால் பலன்.. ஈரோடு பெரிய மாரியம்மன் கோயில்!
45 வெள்ளிக்கிழமை சென்றால் பலன்.. ஈரோடு பெரிய மாரியம்மன் கோயில்!...
மாற்றப்பட்ட இறுதிப்போட்டி தேதி! மே 17 முதல் மீண்டும் ஐபிஎல் 2025!
மாற்றப்பட்ட இறுதிப்போட்டி தேதி! மே 17 முதல் மீண்டும் ஐபிஎல் 2025!...
நடிகர் சூரி உடன் நடித்தது மிகவும் பெருமையாக இருக்கிறது...
நடிகர் சூரி உடன் நடித்தது மிகவும் பெருமையாக இருக்கிறது......
கோடை வெயிலின் தாக்கம்: தமிழ்நாட்டில் காய்கறி விலை அதிகரிப்பு..!
கோடை வெயிலின் தாக்கம்: தமிழ்நாட்டில் காய்கறி விலை அதிகரிப்பு..!...
ப்ளீஸ்.. இரவில் இதெல்லாம் செய்யாதீங்க.. வாஸ்து சொல்லும் டிப்ஸ்!
ப்ளீஸ்.. இரவில் இதெல்லாம் செய்யாதீங்க.. வாஸ்து சொல்லும் டிப்ஸ்!...
தொடங்கும் தென்மேற்கு பருவமழை.. மழைக்கான வாய்ப்பு எப்படி இருக்கும்
தொடங்கும் தென்மேற்கு பருவமழை.. மழைக்கான வாய்ப்பு எப்படி இருக்கும்...
சிபிஎஸ்இ 12ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியீடு
சிபிஎஸ்இ 12ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியீடு...