நடிகர் சூரி உடன் நடித்தது மிகவும் பெருமையாக இருக்கிறது – ஐஸ்வர்யா லட்சுமி நெகிழ்ச்சி
Actress Aishwarya Lekshmi: மலையாள சினிமாவில் நடிகையாக அறிமுகம் ஆகி தமிழ், தெலுங்கு, மலையாளம் என தொடர்ந்து நடித்து வருகிறார் நடிகை ஐஸ்வர்யா லட்சுமி. தற்போது இவர் நடிகர் சூரிக்கு நாயகியாக மாமன் படத்தில் நடித்துள்ளார். அதுகுறித்து அவர் படத்தின் விழாவில் பேசியது தற்போது வைரலாகி வருகின்றது.

மலையாள சினிமாவில் கடந்த 2017-ம் ஆண்டு நஞ்சுகளுடே நாட்டில் ஓரிடவேலா என்ற படத்தின் மூலம் நடிகையாக அறிமுகம் ஆனார் ஐஸ்வர்யா லட்சுமி (Aishwarya Lekshmi). இந்தப் படத்தை இயக்குநர் அல்தாஃப் சலிம் இயக்கி இருந்த நிலையில் படத்தில் நாயகனாக நடித்து இருந்தார். அதனை தொடர்ந்து 2017-ம் ஆண்டே மாயநதி என்ற படத்திலும் நடித்தார். அதில் நாயகனாக நடிகர் டொவினோ தாமஸ் நடித்திருந்தார். இந்தப் படத்தின் மூலம் மலையாள சினிமா மட்டும் இன்றி தமிழ் சினிமா ரசிகர்களிடையேயும் நடிகை ஐஸ்வர்யா லட்சுமி கவனம் பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது. அதனை தொடர்ந்து 2019-ம் ஆண்டு வரை மலையாள சினிமாவில் நடித்து வந்த நடிகை ஐஸ்வர்யா லட்சுமி 2019-ம் ஆண்டு இறுதியில் தமிழ் சினிமாவில் ஆக்ஷன் என்ற படத்தின் மூலம் நடிகையாக அறிமுகம் ஆனார்.
விஷால் நாயகனாக நடித்த இந்தப் படத்தில் விஷால் நாயகனாக நடித்த இந்தப் படத்தில் இவர்களுடன் இணைந்து நடிகர்கள் தமன்னா பாட்டியா, அகன்ஷா பூரி, ராம்கி, சாயா சிங், யோகி பாபு மற்றும் கபீர் துஹான் சிங் ஆகியோர் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்திருந்தனர். இந்தப் படம் ரசிகர்களிடையே கலவையான விமர்சனத்தைப் பெற்றது.
இந்தப் படத்தை தொடர்ந்து தமிழில் நடிகை ஐஸ்வர்யா லட்சுமி ஜகமே தந்திரம், புத்தம் புது காலை, கார்கி, கேப்டன், பொன்னியின் செல்வன் மற்றும் கட்டா குஸ்தி ஆகிய படங்களில் நடித்தார். கட்டா குஸ்தி படம் ஐஸ்வர்யா லட்சுமியை தமிழ் சினிமா ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றுத் தந்தது.
இதனைத் தொடர்ந்து 2024-ம் ஆண்டு இறுதியில் நடிகர் அசோக் செல்வனுடன் இணைந்து பொன் ஒன்று கண்டேன் என்ற படத்தில் நடித்தார். இந்தப் படம் ரசிகர்களிடையே கலவையான விமர்சனத்தைப் பெற்றது. இந்த நிலையில் தற்போது நடிகை ஐஸ்வர்யா லட்சுமி தக் லைஃப் மற்றும் மாமன் ஆகிய படங்களில் நடித்துள்ளார்.
நடிகை ஐஸ்வர்யா லட்சுமியின் இன்ஸ்டா பதிவு:
View this post on Instagram
இந்த நிலையில் தக் லைஃப் படம் ஜூன் மாதம் 5-ம் தேதி 2025-ம் ஆண்டு திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. அதே போல மாமன் படம் வருகின்ற மே மாதம் 16-ம் தேதி 2025-ம் ஆண்டு திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இந்த நிலையில் மாமன் பட விழாவில் நடிகை ஐஸ்வர்யா லட்சுமி பேசியது தற்போது வைரலாகி வருகின்றது.
அதில் அவர் பேசியதாவது, முதல்ல மாமன் படத்தில் நடிக்கிறேன்னு சொன்னப்போ எல்லாரும் ஏன் என்று கேட்டார்கள். நல்லா யோசிச்சுதான் பன்றியான்னு கேட்டாங்க. சூரிக்கு ஜோடியா எப்படி பன்றனு பல கேள்விகள எழுப்பினாங்க. ஆனா என்ன பொருத்தவரை சூரி ஒரு மிகப்பெரிய நடிகர்.
அவரோட நான் சேர்ந்து நடிச்சது மிகவும் பெருமையான விசயம் எனக்கு. இந்த மாதிரி ஒரு மனிதர் கூட நான் நடித்தது எனக்கு மிகவும் மகிழ்ச்சியான ஒன்று. அவர் மிகவும் நேர்மையான மனிதர், மரியாதையுடன் அனைவரையும் நடத்தக்கூடியவர், அனைவர் மீதும் மிகுந்த பாசம் காட்டக்கூடியவர் என்று சூரி குறித்து புகழ்ந்து பேசினார் நடிகை ஐஸ்வர்யா லட்சுமி.