Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

மே 16-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் சூரி, சந்தானம், யோகி பாபு படங்கள்… யாரோடது முதல்ல பாப்பீங்க?

Theatre Release This Week: தமிழ் சினிமாவில் காமெடி நடிகளாக அறிமுகம் ஆகி தற்போது நாயன்கன்களாக வலம் வருபவர்கள் நடிகர்கள் யோகி பாபு, சூரி மற்றும் சந்தானம். இவர்கள் காமெடி கதாப்பாத்திரத்தில் நடித்த படங்கள் ஒரே நாளில் வெளியாகி இருந்தாலும் தற்போது முன்னணி கதாப்பாத்திரத்தில் நடித்தப் படங்கள் ஒரே நாளில் போட்டில் போட உள்ளது.

மே 16-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் சூரி, சந்தானம், யோகி பாபு படங்கள்… யாரோடது முதல்ல பாப்பீங்க?
படங்கள்Image Source: social media
vinothini-aandisamy
Vinothini Aandisamy | Published: 13 May 2025 11:00 AM

டிடி நெக்ஸ்ட் லெவல்: இயக்குநர் பிரேம் ஆனந்த் இயக்கத்தில் ஹாரர் காமெடி பாணியில் உருவாகியுள்ள படம் டிடி நெக்ஸ்ட் லெவல். இந்தப் படத்தில் நாயகனாக நடிகர் சந்தானம் (Actor Santhanam) நடித்துள்ளார். இவருடன் இணைந்து நடிகர்கள் கீத்திகா திவாரி, செல்வராகவன், கௌதம் வாசுதேவ் மேனன், நிழல்கள் ரவி, கஸ்தூரி சங்கர், ரெடின் கிங்ஸ்லி, யாஷிகா ஆனந்த், ராஜேந்திரன், லொள்ளு சபா மாறன் என பலர் இந்தப் படத்தில் நடித்துள்ளனர். இந்தப் படத்தை நடிகர் ஆர்யாவின் தயாரிப்பு நிறுவனமான தி ஷோ பீப்பில் தயாரித்துள்ளது. முன்னதாக படத்தின் ட்ரெய்லர் இணையத்தில் வெளியாகி வைரலானது. படத்தில் நடிகர் சந்தானம் தயாரிப்பாளர்களுக்கு பிடிக்காத விமர்சகராக நடித்துள்ளார். அதில் காமெடி திகில் என அனைத்தும் கலந்து படம் வருகின்ற மே மாதம் 16-ம் தேதி 2025-ம் ஆண்டு திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

ஜோரா கைய தட்டுங்க: நடிகர் யோகி பாபு தற்போது கோலிவுட்டில் காமெடி மற்றும் நாயகன் என இரண்டு கதாப்பாத்திரத்திலும் மாறிமாறி நடித்து வருகிறார். இந்த நிலையில் இவர் தற்போது நாயகனாக நடித்தப் படம் ஜோரா கைய தட்டுங்க. இந்தப் படத்தை இயக்குநர் வினேஷ் மில்லினியம் இயக்கி உள்ளார்.

இந்தப் படத்தில் நடிகர் யோகி பாபுவுடன் இணைந்து நடிகர்கள் ஹரிஸ் பேரடி, வாசந்தி, ஜாஹிர் அலி, மணிமாறன். சாந்தி தேவி என பலர் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளனர். மேஜிக் கலைஞரின் வாழ்க்கையை மையமாக வைத்து இந்தப் படம் உருவாகியுள்ளது. படம் வருகின்ற மே மாதம் 16-ம் தேதி 2025-ம் ஆண்டு திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

மாமன்: இயக்குநர் பிரசாந்த் பாண்டியராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் மாமன். இவர் முன்னதாக இயக்கி விலங்கு என்ற வெப் சீரிஸ் ரசிகர்களிடையே மாபெரும் வரவேற்பைப் பெற்றது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் தற்போது நடிகர் சூரி நடிப்பில் மாமன் படத்தை இயக்கியுள்ளார்.

இந்தப் படத்திற்கு நடிகர் சூரி திரைக்கதை எழுதியுள்ளார். காமெடி நடிகராக தமிழ் சினிமாவில் அறிமுகம் ஆகி அதனைத் தொடர்ந்து நாயகனாக மாறி தற்போது திரைக்கதை ஆசிரியராகவும் தன்னை அறிமுகம் ஆக்கியுள்ளார் நடிகர் சூரி. இந்தப் படத்தில் நடிகர் சூரிக்கு நாயகியாக நடிகை ஐஸ்வர்யா லட்சுமி நடித்துள்ளார்.

இவர்களுடன் இணைந்து இந்தப் படத்தில் நடிகர்கள் ஸ்வாசிகா, ராஜ்கிரண், பால சரவணன், பாபா பாஸ்கர், நிகிலா சங்கர், கீதா கைலாசம், விஜி சந்திரசேகர் ஆகியோர் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளனர். தாய் மாமன் மற்றும் மருமகன் பாசத்தை மையமாக வைத்து எடுக்கப்பட்ட இந்தப் படம் மே மாதம் 16-ம் தேதி 2025-ம் ஆண்டு திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

தினமும் காலை உணவில் ஏன் ராகியை சேர்க்க வேண்டும்?
தினமும் காலை உணவில் ஏன் ராகியை சேர்க்க வேண்டும்?...
ஆயுதப்படை வீரர்களை சந்தித்த பிரதமர் மோடி.. சொன்னது என்ன?
ஆயுதப்படை வீரர்களை சந்தித்த பிரதமர் மோடி.. சொன்னது என்ன?...
கூலியில் ஆக்‌ஷன் காட்சிகளில் ரஜினி எப்படி நடித்துள்ளார் தெரியுமா?
கூலியில் ஆக்‌ஷன் காட்சிகளில் ரஜினி எப்படி நடித்துள்ளார் தெரியுமா?...
பிஎஃப் கணக்கில் தாமதமாக வட்டி வரவு வைக்கப்படுவது சிக்கலா?
பிஎஃப் கணக்கில் தாமதமாக வட்டி வரவு வைக்கப்படுவது சிக்கலா?...
சிறந்த செரிமானத்திற்கான 7 சிறந்த உணவுகள் என்னென்ன?
சிறந்த செரிமானத்திற்கான 7 சிறந்த உணவுகள் என்னென்ன?...
9 குற்றவாளிகளுக்கும் ஆயுள் தண்டனை.. பொள்ளாச்சி வழக்கில் தீர்ப்பு
9 குற்றவாளிகளுக்கும் ஆயுள் தண்டனை.. பொள்ளாச்சி வழக்கில் தீர்ப்பு...
அகவிலைப்படி உயர்வு தொடர்பாக வெளியான முக்கிய தகவல்!
அகவிலைப்படி உயர்வு தொடர்பாக வெளியான முக்கிய தகவல்!...
45 வெள்ளிக்கிழமை சென்றால் பலன்.. ஈரோடு பெரிய மாரியம்மன் கோயில்!
45 வெள்ளிக்கிழமை சென்றால் பலன்.. ஈரோடு பெரிய மாரியம்மன் கோயில்!...
மாற்றப்பட்ட இறுதிப்போட்டி தேதி! மே 17 முதல் மீண்டும் ஐபிஎல் 2025!
மாற்றப்பட்ட இறுதிப்போட்டி தேதி! மே 17 முதல் மீண்டும் ஐபிஎல் 2025!...
நடிகர் சூரி உடன் நடித்தது மிகவும் பெருமையாக இருக்கிறது...
நடிகர் சூரி உடன் நடித்தது மிகவும் பெருமையாக இருக்கிறது......
கோடை வெயிலின் தாக்கம்: தமிழ்நாட்டில் காய்கறி விலை அதிகரிப்பு..!
கோடை வெயிலின் தாக்கம்: தமிழ்நாட்டில் காய்கறி விலை அதிகரிப்பு..!...