Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

அட்லி – அல்லு அர்ஜுன் படத்தின் ஷூட்டிங் எப்போ தெரியுமா? அப்டேட் இதோ

AA22 x A6: இயக்குநர் அட்லி இயக்கத்தில் நடிகர் அல்லு அர்ஜுன் நடிக்க உள்ளதை கடந்த ஏப்ரல் மாதம் படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்தது. அதனை தொடர்ந்து படத்தின் பணிகள் விறுவிறுப்பாக நடைப்பெற்று வருகின்றது. இந்த நிலையில் படத்தின் ஷூட்டிங் எப்போது என்பது குறித்து தகவல் இணையத்தில் வைரலாகி வருகின்றது.

அட்லி – அல்லு அர்ஜுன் படத்தின் ஷூட்டிங் எப்போ தெரியுமா? அப்டேட் இதோ
அல்லு அர்ஜுன் - அட்லிImage Source: social media
vinothini-aandisamy
Vinothini Aandisamy | Published: 13 May 2025 06:55 AM

தெலுங்கு சினிமாவில் தற்போது முன்னணி நட்சத்திரமாக இருப்பவர் நடிகர் அல்லு அர்ஜுன் (Actor Allu Arjun). இவர் கடந்த 1985-ம் ஆண்டு முதல் குழந்தை நட்சத்திரமாக தெலுங்கு சினிமாவில் நடிக்கத் தொடங்கினார். அதனைத் தொடந்து 2003-ம் ஆண்டு இயக்குநர் ராகவேந்திரா ராவ் இயக்கத்தில் வெளியான கங்கோத்ரி படத்தின் மூலம் தெலுங்கு சினிமாவில் நாயகனாக நடிக்கத் தொடங்கினார். இவரது தந்தை அல்லு அரவிந்த் தெலுங்கு சினிமாவில் மிகப் பெரிய தயரிப்பாளர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் தொடந்து தெலுங்கு படங்களில் நடித்து வந்த நடிகர் அல்லு அர்ஜுனுக்கு சில படங்கள் தென்னிந்திய மொழிகளில் உள்ள ரசிகர்களிடையே வரவேற்பையும் பெறத் தொடங்கியது. குறிப்பாக நடிகர் அல்லு அர்ஜுன் நடிப்பில் இயக்குநர் திருவிக்ரம் ஸ்ரீவாஸ் இயக்கத்தில் 2020-ம் ஆண்டு திரையரங்குகளில் வெளியான படம் ஆலா வைகுந்தபுரமுலூ.

இந்தப் படத்தில் அல்லு அர்ஜுனுக்கு ஜோடியாக நடிகை பூஜா ஹெக்டே நடித்து இருந்தார். இவர்களுடன் இணைந்து இந்தப் படத்தில் ஜெயராம், தபு, சுஷாந்த், நிவேதா பெத்துராஜ், முரளி சர்மா, சச்சின் கெடேகர், சமுத்திரக்கனி, நவ்தீப், சுனில், ஹர்ஷ வர்தன், மற்றும் கோவிந்த் பத்மசூர்யா என பலர் இந்தப் படத்தில் நடித்திருந்தனர்.

நடிகர் அல்லு அர்ஜுனை தென்னிந்திய மொழிகளில் அதிகம் கவனிக்க வைத்த முதல் படம் ஆலா வைகுந்தபிரமுலூ தான். குறிப்பாக இந்தப் படத்தில் வரும் புட்ட பொம்மா பாடல் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது. பலரும் இந்தப் பாடலுக்கு நடனம் ஆடி வீடியோ வெளியிட்டு வந்ததும் குறிப்பிடத்தக்கது.

இந்தப் படத்தை தொடர்ந்து நடிகர் அல்லு அர்ஜுனை பான் இந்திய அளவில் பிரலம் ஆக்கியது புஷ்பா படம் ஆகும் 2021-ம் ஆண்டு இயக்குநர் சுகுமாரன் இயக்கத்தில் நடிகர் அல்லு அர்ஜுன் நாயகனாகவும் நடிகை ராஷ்மிகா மந்தனா நாயகியாகவும் நடித்தப் படம் புஷ்பா. சாதாரண செம்மரம் வெட்டும் கூலி தொழிலாளியான புஷ்பா எப்படி கேங்ஸ்டராக மாறினார் என்பது முதல் பாகம்.

அட்லி – அல்லு அர்ஜுன் படத்தின் அறிவிப்பு வீடியோ:

இந்தப் படம் ரசிகர்களிடையே மாபெரும் வரவேற்பைப் பெற்றதைத் தொடர்ந்து 2024-ம் ஆண்டு புஷ்பா படத்தி இரண்டாவது பாகம் வெளியானது அதில் கேங்ஸ்டராகவும் கடத்தல் காரணாகவும் இருக்கும் புஷ்பா எப்படி அந்த நாட்டையை ஆட்சி வேண்டும் என்று நினைக்கிறார். இதன் காரணமாக பல பிரச்னைகள் ஏற்படுது அதனை எப்படி சமாளிக்கிறார் என்பது படத்தில் இரண்டாவது பாகம்.

இந்தப் இரண்டு பாகங்களும் பாக்ஸ் ஆபிஸில் மாபெரும் வரவேற்பைப் பெற்றது குறிப்பிடத்தக்கது. இதனை தொடர்ந்து அல்லு அர்ஜுன் தனது 22-வது படத்திற்காக அட்லியுடன் கூட்டணி வைத்தார். இந்தப் படத்தின் படப்பிடிப்பு ஷூட்டிங் மாதம் தொடங்கும் என்றும் சினிமா வட்டாரங்களில் தகவல்கள் தெரிவிக்கின்றது.

கோடை வெயிலின் தாக்கம்: தமிழ்நாட்டில் காய்கறி விலை அதிகரிப்பு..!
கோடை வெயிலின் தாக்கம்: தமிழ்நாட்டில் காய்கறி விலை அதிகரிப்பு..!...
ப்ளீஸ்.. இரவில் இதெல்லாம் செய்யாதீங்க.. வாஸ்து சொல்லும் டிப்ஸ்!
ப்ளீஸ்.. இரவில் இதெல்லாம் செய்யாதீங்க.. வாஸ்து சொல்லும் டிப்ஸ்!...
தொடங்கும் தென்மேற்கு பருவமழை.. மழைக்கான வாய்ப்பு எப்படி இருக்கும்
தொடங்கும் தென்மேற்கு பருவமழை.. மழைக்கான வாய்ப்பு எப்படி இருக்கும்...
சிபிஎஸ்இ 12ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியீடு
சிபிஎஸ்இ 12ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியீடு...
பயங்கரவாதிகள் - இந்தியா ராணுவத்திடையே துப்பாக்கிச்சூடு தாக்குதல்
பயங்கரவாதிகள் - இந்தியா ராணுவத்திடையே துப்பாக்கிச்சூடு தாக்குதல்...
300 முறை சபரிமலை பயணம்.. நம்பியாரின் பக்தி.. பேரன் பகிரும் தகவல்
300 முறை சபரிமலை பயணம்.. நம்பியாரின் பக்தி.. பேரன் பகிரும் தகவல்...
கோடை காலத்தில் குளிர்ச்சியாக இருக்க அவசியம் அணிய வேண்டிய ஆடைகள்!
கோடை காலத்தில் குளிர்ச்சியாக இருக்க அவசியம் அணிய வேண்டிய ஆடைகள்!...
மே 16-ம் தேதி வெளியாகும் சூரி, சந்தானம், யோகி பாபு படங்கள்...
மே 16-ம் தேதி வெளியாகும் சூரி, சந்தானம், யோகி பாபு படங்கள்......
9 பேரும் குற்றவாளிகள்.. பொள்ளாச்சி வன்கொடுமை வழக்கில் தீர்ப்பு
9 பேரும் குற்றவாளிகள்.. பொள்ளாச்சி வன்கொடுமை வழக்கில் தீர்ப்பு...
TNPSC Group 4 Exam: மாற்றுத்திறனாளிகள் இதை செய்ய வேண்டாம்..!
TNPSC Group 4 Exam: மாற்றுத்திறனாளிகள் இதை செய்ய வேண்டாம்..!...
இந்தியாவில் உயரப்போகும் மருந்துகள் விலை.. காரணம் என்ன?
இந்தியாவில் உயரப்போகும் மருந்துகள் விலை.. காரணம் என்ன?...