DA Hike : அகவிலைப்படி உயர்வு.. மத்திய அரசு ஊழியர்களுக்கு வெளியான முக்கிய தகவல்!
Dearness Allowance Hike Information for Central Government Employees | மத்திய மற்றும் மாநில அரசு ஊழியர்களுக்கு ஒவ்வொரு ஆண்டும் இரண்டு முறை அகவிலைப்படி உயர்வு வழங்கப்படும். 2025 ஆம் ஆண்டுக்கான முதல் அகவிலைப்படி உயர்வு மார்ச் மாதத்தில் அறிவிக்கப்பட்ட நிலையில், இரண்டாவது அகவிலைப்படி உயர்வு குறித்து தகவல் வெளியாகியுள்ளது.

இந்தியாவில் பணியாற்றும் மத்திய மற்றும் மாநில அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி (DA – Dearness Allowance) உயர்வு வழங்கப்படும். ஒரு ஆண்டுக்கு இரண்டு முறை என 6 மாதங்களுக்கு ஒருமுறை இந்த அகவிலைப்படி உயர்வு வழங்கப்படும். இவ்வாறு அகவிலைப்படி உயர்த்தப்படுவதன் மூலம் ஊழியர்களின் மாத சம்பளமும் உயரும். அகவிலைப்படி உயர்வை பொருத்தவரை மத்திய அரசு ஊழியர்களுக்கு மத்திய அரசும் (Central Government) , மாநில அரசு (State Government) ஊழியர்களுக்கு மாநில அரசுகளும் அறிவிக்கும். அந்த வகையில், தற்போது மத்திய அரசு ஊழியர்களுக்குக்கான அகவிலைப்படி உயர்வு குறித்து முக்கிய அறிவிப்பு ஒன்று வெளியாகியுள்ளது. எது என்ன என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.
ஆண்டுக்கு 2 முறை உயர்த்தப்படும் அகவிலைப்படி உயர்வு
அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்வை பொருத்தவரை ஆண்டுக்கு இரண்டு முறை உயர்த்தப்படும். அதாவது ஜனவரி மாதத்திலும், ஜுலை மாதத்திலும் உயர்த்தப்படு. ஜனவரி முதல் ஜூலை வரையிலான 6 மாதங்களை கணக்கிட்டு ஜுனிலும், ஜூலைன் முதல் டிசம்பர் வரையிலான 6 மாதங்களை கணக்கிட்டு ஜூலையிலும் அகவிலைப்படி உயர்த்தப்படும். அகவிலைப்படி குறித்த அறிவிப்பு முன்னுக்கு பின் இருந்தாலும் அது சரியான நேரத்தில் அமலுக்கு வந்துவிடும். இந்த நிலையில், ஜூலை மாதத்திற்கான அகவிலைப்படி உயர்வு குறித்து மத்திய அரசு முக்கிய அறிவிப்பை வெளியிட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
மத்திய அரசு ஊழியர்களுக்கு வெளியான முக்கிய செய்தி
மார்ச் 2025-ல் அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படியை மத்திய அரசு 2 சதவீதம் உயர்த்தியது. இதன் மூலம் மத்திய அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படி 55 சதவீதமாக உள்ளது. இந்த அகவிலைப்படி உயர்வு ஜனவரி 2025 முதல் அமலுக்கு வந்துள்ளது. 2025 ஆம் ஆண்டுக்கான முதல் அகவிலைப்படி உயர்வு மார்ச் மாதத்தில் அறிவிக்கப்பட்ட நிலையில், இரண்டாவது அகவிலைப்படி உயர்வு ஜூலை மாதத்தில் அறிவிக்கப்படலாம் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.
AICPI (All India Consumer Price Index) குறியீட்டை பொருத்து அகவிலைப்படி உயர்வு நிர்ணயம் செய்யப்படுகிறது. அந்த வகையில் AICPI ஜனவரியில் 143.2 ஆகவும், பிப்ரவரில் 142.8 ஆகவும் மார்ச் மாதத்தில் 143.0 ஆகவும் இருந்தது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில், ஜூலை மாதத்தில் அகவிலைப்படி உயர்வு 3 சதவீதம் வரை உயர்த்தப்படலாம் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. ஒருவேளை பணவீக்கம் குறைந்தால் அகவிலைப்படி சற்று குறைவாகவே உயர்த்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதாவது, 2 சதவீதம் வரை மட்டுமே அகவிலைப்படி உயர்த்தப்படலாம் என கூறப்படுவது குறிப்பிடத்தக்கது.