9 குற்றவாளிகளுக்கும் சாகும் வரை சிறை… பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை வழக்கில் தீர்ப்பு!
Pollachi Harassment Case : பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை வழக்கில் குற்றவாளிகளுக்கு 9 பேருக்கும் ஆயுள் தண்டனை விதித்து கோவை மகிளா நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. மேலும், பாதிக்கப்பட்ட எட்டு பெண்களுக்கும் தலா ரூ.10 லட்சம் முதல் ரூ.12 லட்சம் வழங்கவும் கோவை மகிளா நீதிமன்ற நீதிபதி நந்தினி தேவி தீர்ப்பளித்துள்ளார்.

கோவை, மே 13 : பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை (Pollachi Harassment Case) வழக்கில் குற்றவாளிகளுக்கு 9 பேருக்கும் ஆயுள் தண்டனை விதித்து கோவை மகிளா நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. பரிராஜன், திருநாவுக்கரசு, வசந்த குமார், சதீஷ், மணிவண்ணன், ஹேரன்பால், பாபு, அருளானந்தம், அருண்குமார் ஆகிய 9 பேருக்கு சாகும் வரை ஆயுள் தண்டனை விதித்து நீதிபதி நந்தினி தேவி தீர்ப்பளித்துள்ளார். வழக்கின் முதல் குற்றவாளி சபரிராஜனுக்கு 4 ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. மேலும், பாதிக்கப்பட்ட எட்டு பெண்களுக்கும் தலா ரூ.85 லட்சம் வழங்கவும் கோவை மகிளா நீதிமன்ற நீதிபதி நந்தினி தேவி தீர்ப்பளித்துள்ளார். பொள்ளாச்சி பாலியல் வழக்கில் குற்றவாளிகள் 9 பேருக்கு சாகும் வரை ஆயுள் தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.
9 குற்றவாளிகளுக்கும் ஆயுள் தண்டனை
அதன்படி, இந்த வழக்கின் முதல் குற்றவாளியான திருநாவுக்கரசு, மணிவண்ணனுக்கு தலா 5 ஆயுள் தண்டனையும், சபரி ராஜனுக்கு 4 ஆயுள் தண்டனையும், வசந்தகுமாருக்கு 2 ஆயுள் தண்டனையும், சதீஷ், ஹேரன் பாலுக்கு 3 ஆயுள் தண்டனையும், அருண்குமார், பாபு, அருளானந்தம் ஆகியோருக்கு ஒரு ஆயுள் தண்டனையும் விதித்து தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது.
பாதிக்கப்பட்ட பெண்களுக்கு தலா ரூ.10, முதல் 15 லட்சம் வரை இழப்பீடு வழங்க மாவட்ட சட்ட உதவி மையத்துக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. குற்றவாளிகளுக்கு விதித்த அபராதத்தையும் வசூலித்து பாதிக்கப்பட்ட பெண்களுக்கு பிரித்து தர உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும், வலுவான ஆதாரங்கள் இருப்பதால், மேல்முறையீடு சென்றாலும் குற்றவாளிகளுக்கு விதிக்கப்பட்ட தண்டனை உறுதி செய்யப்படும் என சிபிஐ வழக்கறிஞர் சந்திர மோகன் கூறியுள்ளார்.
பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை வழக்கில் தீர்ப்பு
2019 Pollachi sexual assault case: All nine accused held guilty by the Mahila court in Coimbatore, Tamil Nadu
— ANI (@ANI) May 13, 2025
கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் பெண்களை பாலியல் வன்கொடுமை, மிரட்டி, வீடியோ எடுத்துள்ளது ஒட்டுமொத்த தமிழகத்தையே உலுக்கியது. இது தொடர்பாக பாதிக்கப்பட்ட பெண் 2019ஆம் ஆண்டு பொள்ளாச்சி கிழக்கு காவல் நிலையத்தில் புகார் அளித்ததை அடுத்து , வெளிச்சத்திற்கு வந்தது.
அதன்பிறகு, சிபிசிஐடிக்கு மாற்றப்பட்ட சிறிது நாட்களிலேயே, சிபிஐ வசம் சென்றது. இந்த வழக்கு சிபிஐ பல கட்ட விசாரணைகளை நடத்தியது. இந்த வழக்கு கோவை மகிளா நீதிமன்றத்தில் நடந்தது. 40க்கும் மேற்பட்ட சாட்சிகளை நீதிமன்றம் விசாரித்தது. 2024ஆம் ஆண்டு மே மாதம் சிபிஐ தனது முதல் குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்தது.
இப்படி பல கட்டங்களாக விசாரணை நடந்து முடிந்தது. இந்த நிலையில், இந்த வழக்கில் இன்று 2025 மே 13ஆம் தேதி தீர்ப்பு அளிக்கப்பட்டது. இதில் குற்றச்சாட்டப்பட்ட 9 பேருக்கும் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது. தண்டனை பெற்றவர்கள் உயர் நீதிமன்றம் அல்லது உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு. ஆனால், இந்த வழக்கின் தன்மையை பொறுத்து, தீர்ப்பு வழங்கலாம் என்பது குறிப்பிடத்தக்கது.