Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

அரியர் இருக்கா உங்களுக்கு? கடைசி சான்ஸ் இதுதான்.. வெளியான அறிவிப்பு!

Anna University : அண்ணா பல்கலைக்கழகம் மற்றும் அதனின் இணைப்பு பெற்ற கல்லூரிகளில் பயின்று குறிப்பிட்ட கால உச்சவரம்பை கடந்த அரியர்ஸ் வைத்திருக்கும் மாணவர்கள், சிறப்பு தேர்வு எழுத அனுமதிக்கப்படுவதாக அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது. இதற்கு 2025 மே 17ஆம் தேதி விண்ணப்பப் பதிவு தொடங்குகிறது.

அரியர் இருக்கா உங்களுக்கு?  கடைசி சான்ஸ் இதுதான்..  வெளியான அறிவிப்பு!
அண்ணா பல்கலைக்கழகம்Image Source: X
umabarkavi-k
Umabarkavi K | Updated On: 13 May 2025 06:52 AM

சென்னை, மே 13 : பொறியியல் கல்லூரிகளில் குறிப்பிட்ட கால உச்சவரம்பை கடந்த அரியர் பாடங்களை நிலுவையில் வைத்திருப்பவர்கள் சிறப்பு தேர்வுகளை எழுதலாம் என அண்ணா பல்கலைக்கழகம் (Anna University) அறிவித்துள்ளது. இது அண்ணா பல்கலைக்கழக மாணவர்களுக்கு மட்டுமில்லாமல், அதனின் கீழ் இணப்பு பெற்ற பொறியியல் கல்லூரிகளில் பயிலும் மாணவர்களுக்கு பொருந்தும். எனேவே, அரியர் வைத்திருக்கும் மாணவர்கள் கடைசி வாய்ப்பாக இதனை பயன்படுத்திக் கொள்ளுங்கள்.  மாணவர்களுக்கு  அரியர் தேர்வு எழுதுவதற்கு குறிப்பிட்டவரை கால வரம்பு இருக்கிறது.

அரியர் இருக்கா உங்களுக்கு?

இதற்குள் அரியர் வைக்கும் மாணவர்கள் தேர்வு  எழுத வேண்டும். இல்லையென்றால், அரியர்  பெண்டிங்கிலே இருந்து வருவதாக தெரிகிறது. இந்த நிலையில், அண்ணா பல்கலைக்கழகம் முக்கிய அறிவிப்பை வெளியிட்டு இருக்கிறது. குறிப்பாக, அரியர் வைத்திருப்போருக்கு சூப்பரான அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

அதன்படி,  அரியர் வைத்திபவர்களுக்கு சிறப்பு தேர்வு எழுதலாம் என அண்ணா பல்கலைக்கழகம்  அறிவித்துள்ளது. இதுகுறித்து அண்ணா பல்கலைக்கழகம் வெளியிட்ட அறிவிப்பின்படி, அண்ணா பல்கலைக்கழகம் மற்றும் அதனின் இணைப்பு கல்லூரிகளில் பயின்று பல்கலைக்கழக காலவரம்பின்படி, அரியர்ஸ் எழுதுவதற்கான கால அளவை கடந்த மாணவர்கள் சிறப்பு தேர்வு எழுத அனுமதிக்கப்படுகிறது.

அண்ணா பல்கலைக்கழகம் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு

2025 ஏப்ரல், மே பருவத்தேர்வை ஜூன் அல்லது ஜூலை 2025ல் எழுத அனுமதிக்கப்படுகிறது. மாணவர்கள் பதிவு எண்ணிக்கையின்படி, பல்வேறு மாவட்டங்களில் சிறப்பு தேர்வுகள் நடத்தப்படும். சென்னை, விழுப்புரம், ஆரணி, சேலம், ஈரோடு, கோவை, திருச்சி, மதுரை, திருநெல்வேலி, நாகர்கோவில் ஆகிய மையங்களில் மாணவர்களின் எண்ணிக்கையின்படி தேர்வு நடத்தப்படும்.

மாணவர்கள் அரியர் தேர்வுக்கு அண்ணா பல்கலைக்கழக வலைத்தளமான https://coe1.annauniv.edu என்றதில் விண்ணப்பிக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. பதிவு செய்வதற்கான நடைமுறைகள் இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ளன. இதற்கான விண்ணப்ப பதிவு 2025 மே 8ஆம் தேதி காலை 11 மணிக்கு தொடங்குகிறது.

மேலும், 2025 மே 17ஆம் தேதி மாலை 4 மணி வரை மட்டுமே விண்ணப்பிக்க முடியும். தேர்வுக்கான மற்ற அனைத்து விவரங்களும் 2025 மே 27ஆம் தேதி அல்லது அதற்கு பிறகு அண்ணா பல்கலைக்கழக இணையதளத்தில் வெளியாகும். இதனை பார்த்து மாணவர்கள் தெரிந்து கொள்ளலாம்.

எனவே, மாணவர்கள் இந்த கடைசி வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ள வேண்டும். இதற்கிடையில், தமிழகத்தில் பொறியியல் சேர்க்கைக்கான பதிவு நடந்து வருகிறது. 2025 மே 7ஆம் தேதி பொறியியல் சேர்க்கைக்கான விண்ணப்ப பதிவு தொடங்கியது. தற்போதை நிலவரப்படி, மாணவர் பதிவு 1 லட்சத்தை தாண்டியதாக கூறியுள்ளனர்.  மாணவர்கள் 2025 ஜூன் 6ஆம் தேதி வரை www.tneaonline.org என்ற இணையதளத்தில் மாணவர்கள் பதிவு செய்யலாம். அசல் சான்றிதழ்களைப் பதிவேற்றுவதற்கான கடைசி தேதி ஜூன் 9 ஆகும் என்பது குறிப்பிடத்தக்கது.

9 பேரும் குற்றவாளிகள்.. பொள்ளாச்சி வன்கொடுமை வழக்கில் தீர்ப்பு
9 பேரும் குற்றவாளிகள்.. பொள்ளாச்சி வன்கொடுமை வழக்கில் தீர்ப்பு...
TNPSC Group 4 Exam: மாற்றுத்திறனாளிகள் இதை செய்ய வேண்டாம்..!
TNPSC Group 4 Exam: மாற்றுத்திறனாளிகள் இதை செய்ய வேண்டாம்..!...
இந்தியாவில் உயரப்போகும் மருந்துகள் விலை.. காரணம் என்ன?
இந்தியாவில் உயரப்போகும் மருந்துகள் விலை.. காரணம் என்ன?...
காப்பகத்தில் மனநலம் பாதித்த இளைஞரால் சிறுவனுக்கு நேர்ந்த கொடூரம்!
காப்பகத்தில் மனநலம் பாதித்த இளைஞரால் சிறுவனுக்கு நேர்ந்த கொடூரம்!...
வர்த்தகம் குறித்து பேசிய டிரம்ப்.. மறுத்த இந்தியா!
வர்த்தகம் குறித்து பேசிய டிரம்ப்.. மறுத்த இந்தியா!...
ரயிலில் ராமேஸ்வரம் போறீங்களா..? வெளியான முக்கிய அறிவிப்பு...
ரயிலில் ராமேஸ்வரம் போறீங்களா..? வெளியான முக்கிய அறிவிப்பு......
தெலுங்கு படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது எப்படி...
தெலுங்கு படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது எப்படி......
வெம்பக்கோட்டையில் வியக்க வைக்கும் நட்சத்திர அணிகலன் கண்டெடுப்பு.!
வெம்பக்கோட்டையில் வியக்க வைக்கும் நட்சத்திர அணிகலன் கண்டெடுப்பு.!...
ஏர் இந்தியா, இண்டிகோ விமான சேவை இன்று ரத்து!
ஏர் இந்தியா, இண்டிகோ விமான சேவை இன்று ரத்து!...
மிர்ச்சி சிவா நடிப்பில் பறந்து போ படத்தின் ரிலீஸ் தேதி இதுதான்
மிர்ச்சி சிவா நடிப்பில் பறந்து போ படத்தின் ரிலீஸ் தேதி இதுதான்...
மனைவி கொடூர கொலை.. இந்து முன்னணி நிர்வாகி கைது!
மனைவி கொடூர கொலை.. இந்து முன்னணி நிர்வாகி கைது!...