டிரம்ப் சொன்ன அந்த விஷயம்.. உடனடியாக மறுத்த இந்தியா.. என்ன மேட்டர்?
India Pakistan Ceasefire : வர்த்தகத்தை நிறுத்துவதாக அச்சுறுத்தியதன் மூலம் போர் பதற்றத்தை நிறுத்தியதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் கூறியதை இந்தியா மறுத்துள்ளது. இந்தியாவும் பாகிஸ்தானும் மோதலை நிறுத்தாவிட்டால், அமெரிக்கா அவர்களுடன் எந்த வர்த்தகத்திலும் ஈடுபடாது என்று அமெரிக்க அதிபர் டிரம்ப் தெரிவித்திருக்கிறார்.

வர்த்தகத்தை நிறுத்துவதாக அச்சுறுத்தியதன் மூலம் போர் பதற்றத்தை நிறுத்தியதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் கூறியதை இந்தியா மறுத்துள்ளது. காஷ்மீர் பஹல்காமில் நடந்த பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் கொல்லப்பட்டனர். இந்த தாக்குதலுக்கு சில பயங்கரவாத அமைப்பு பொறுப்பேற்று இருந்தாலும், பாகிஸ்தானுக்கு பங்கு இருப்பதாக இந்தியா குற்றச்சாட்டி உள்ளது. எனவே, பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடி தருவோம் என இந்தியா கூறி வந்தது. அதன்படியே, கடந்த வாரம் பாகிஸ்தான் மீது இந்தியா தாக்குதல் தாக்குதல் நடத்தியது.
வர்த்தகம் குறித்து பேசிய டிரம்ப்
பயங்கரவாத முகாம்களை குறிவைத்து இந்தியா தாக்குதல் நடத்தியது. ஆபரேஷன் சிந்தூர் என்ற நடவடிக்கையில் இந்தியா தாக்குதல் நடத்தியது. இதற்கு பதிலடியாக பாகிஸ்தானும் தாக்குதல் நடத்தியது. ஜம்மு காஷ்மீர், குஜராத் உள்ளிட்ட பல்வேறு நகரங்களில் பாகிஸ்தான் ட்ரோன் தாக்குதலை நடத்தியது.
ஆனால், இந்தியா அதனை முறியடித்தது. மூன்று நாட்களாக நடந்த இந்த மோதலை, அமெரிக்கா தலையீட்டு முடித்து வைத்தது. அதாவது, இந்தியா பாகிஸ்தான் இடையே பேச்சுவார்த்தை நடத்தி போரை முடிவுக்கு கொண்டு வந்தது. இதன் மூலம் ஆபரேஷன் சிந்தூர் ஒத்திவைக்கப்பட்டது.
இதற்கிடையில், இந்தியா பாகிஸ்தான் பிரச்னை குறித்து அமெரிக்க அதிபர் டிரம்ப பல கருத்துகளை கூறியிருக்கிறார். குறிப்பாக, இந்தியாவும் பாகிஸ்தானும் மோதலை நிறுத்தாவிட்டால், அமெரிக்கா அவர்களுடன் எந்த வர்த்தகத்திலும் ஈடுபடாது என்று அமெரிக்க அதிபர் டிரம்ப் தெரிவித்திருக்கிறார்.
என்ன மேட்டர்?
India rebuts the United States’ claim. After Operation Sindoor commenced, US Vice President JD Vance spoke to PM Modi on 9th May. US Secretary of State, Marco Rubio spoke to EAM Dr S Jaishankar on 8th May and 10th May and to NSA Doval on 10th May. There was no reference to trade… pic.twitter.com/3ZIQDARZSG
— ANI (@ANI) May 12, 2025
அவர் கூறுகையில், “இரு நாடுகளுடன் நாங்கள் வர்க்கம் செய்ய போகிறோம் என்று கூறினேன். ஆனால், பதற்றத்தை அவர்கள் தணிக்காவிட்டால் நாங்கள் எந்த வர்த்தகத்தையும் செய்யப் போவதில்லை” என்று கூறினார். இதற்கு இந்தியா மறுத்துள்ளது. அமெரிக்க எந்த விதத்தில் வர்த்தகம் பற்றி எங்கையும் குறிப்பிடவில்லை என்று இந்தியா கூறியுள்ளது.
இந்த விஷயம் குறித்து பிரதமர் மோடி மௌம் காத்ததாக காங்கிரஸ் கூறியுள்ளது. காங்கிரஸ் பொதுச் செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் தனது எக்ஸ் தளத்தில், “டிரம்பின் வர்த்தக பேச்சு குறித்து பிரதமர் மோடி அமைதியாக இருந்தார். அ அமெரிக்காவின் மத்தியஸ்தத்திற்கு இந்தியா ஒப்புக்கொண்டதா?” என்று கேள்வி எழுப்பினார்.