நோட் பண்ணிகோங்க மக்களே..! இனி இந்த 5 ரயில்கள் தாம்பரத்தில் இருந்து இயக்கப்படும்.. எழும்பூருக்கு வராது..

Egmore Station Work: எழும்பூர் ரயில் நிலையத்தில் மறுசீரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வரும் காரணத்தால் தேஜஸ், குருவாயூர் உட்பட 5 விரைவு ரயில்கள் ஜூன் 20 ஆம் தேதி முதல் தாம்பரத்தில் இருந்து இயக்கப்படும் என தெற்கு ரயில்வே தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நோட் பண்ணிகோங்க மக்களே..! இனி இந்த 5 ரயில்கள் தாம்பரத்தில் இருந்து இயக்கப்படும்.. எழும்பூருக்கு வராது..

கோப்பு புகைப்படம்

Published: 

14 Jun 2025 20:09 PM

சென்னை எழும்பூர் ரயில் (Egmore Railway Station) நிலையத்தில் சீரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில் சென்னை எழும்பூரில் இருந்து புறப்படும் சில ரயில்கள் தாம்பரத்தில் இருந்து இயக்கப்படும் என தெற்கு ரயில்வே (Southern Railways) தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மிகவும் பழமை வாய்ந்த மற்றும் பிரபலமான ரயில் நிலையங்களில் ஒன்றாக சென்னை எழும்பூர் ரயில் நிலையம் திகழ்கிறது. சென்னை எழும்பூர் ரயில் நிலையத்திலிருந்து தமிழகத்திற்கு மற்றும் பிற மாநிலங்களுக்கும் ரயில்கள் இயக்கப்படுகிறது. அந்த வகையில் எழும்பூர் ரயில் நிலையத்தில் ரூபாய் 734.91 கோடி மதிப்பில் சீரமைப்பு பணிகள் நடந்து வருகின்றது. முக்கியமாக நடை மேம்பாலம் அமைக்க ஆரம்ப கட்டப் பணிகள் தொடங்கப்பட்டுள்ளது. இதனால் எழும்பூர் ரயில் நிலையத்திலிருந்து புறப்படக்கூடிய சில ரயில்கள் ஜூன் 20ஆம் தேதி முதல் ஆகஸ்ட் மாதம் 18 ஆம் தேதி வரை தாம்பரத்தில் இருந்து இயக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

5 விரைவு ரயில் சேவையில் மாற்றம்:


முன்னதாக எழும்பூர் மற்றும் புதுச்சேரி இடையே இயங்கி வந்த புறநகர் ரயில் கடற்கரை ரயில் நிலையத்திலிருந்து புறப்படும் எனவும் டெல்லி மற்றும் எழும்பூர் ரயில் நிலையத்திற்கு இடையே இருந்த கிராண்ட் ட்ரங்க் ரயில் சென்ட்ரல் ரயில் நிலையத்திலிருந்து இயக்கப்படும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது. அதனை தொடர்ந்து தற்போது சென்னை மதுரை தேஜஸ் எக்ஸ்பிரஸ், குருவாயூர் உள்ளிட்ட ஐந்து விரைவு ரயில்கள் தாம்பரத்திலிருந்து புறப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த மாற்றம் ஜூன் 20 ஆம் தேதி முதல் அமலுக்கு வர உள்ளது. அதாவது சென்னை எக்மோர் மதுரை தேஜஸ் விரைவு ரயில் தாம்பரத்திலிருந்து காலை 6.22 மணிக்கு புறப்படும் எனவும் அதேபோல் மீண்டும் இரவு 9.25 மணிக்கு வந்தடையும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை எழும்பூர் மன்னார்குடி வரை இயங்கும் மண்ணை விரைவு ரயில் ஜூன் 2025 முதல் ஆகஸ்ட் 18 2025 வரை தாம்பரத்திலிருந்து இரவு 11:22 மணியளவில் புறப்படும் எனவும் மறுநாள் காலை ஐந்து மணிக்கு சென்னை தாம்பரத்திற்கு வந்தடையும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது

சென்னை எழும்பூரில் இருந்து திருச்செந்தூர் வரை செல்லும் செந்தூர் விரைவு ரயில் தாம்பரத்தில் இருந்து புறப்பட்டு மீண்டும் தாம்பரத்திற்கே வந்தடையும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. எழும்பூர் ரயில் நிலையத்திற்கு இந்த ரயில் வராது என குறிப்பிடப்பட்டுள்ளது.

சென்னை எழும்பூரில் இருந்து குருவாயூர் வரை செல்லும் குருவாயூர் விரைவு ரயில் தாம்பரத்தில் இருந்து காலை 10:47 மணிக்கு புறப்படும் எனவும் அதே போல் மாலை 7.45 மணிக்கு தாம்பரத்திற்கு வந்தடையும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.