தமிழக சட்டம் ஒழுங்கு டிஜிபியாக சந்தீப் ராய் ரத்தோர் நியமனம்.. தேர்தல் ஆணையம் அதிரடி..

New Law and Order DGP: இந்த நிலையில், தமிழ்நாட்டில் சட்டம்-ஒழுங்கு டிஜிபியை தேர்தல் ஆணையம் அதிரடியாக மாற்றி உத்தரவிட்டுள்ளது. தமிழக காவல்துறையின் சட்டம்-ஒழுங்கு டிஜிபியாக சந்தீப் ராய் ரத்தோர் தேர்தல் ஆணையம் தரப்பில் நியமிக்கப்பட்டுள்ளார். இதுவரை பொறுப்பு டிஜிபியாக இருந்த வெங்கட்ராமன் மாற்றப்பட்டுள்ளார்.

தமிழக சட்டம் ஒழுங்கு டிஜிபியாக சந்தீப் ராய் ரத்தோர் நியமனம்.. தேர்தல் ஆணையம் அதிரடி..

கோப்பு புகைப்படம்

Published: 

02 Apr 2026 19:33 PM

 IST

சென்னை, ஏப்ரல் 2, 2026: தமிழகத்தில் வரக்கூடிய ஏப்ரல் 23ஆம் தேதி சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ளது. இதை ஒட்டி, மாநிலத்தில் தேர்தல் நடத்தை விதிகள் அமலில் உள்ளன. இந்த நிலையில், தமிழ்நாட்டில் சட்டம்-ஒழுங்கு டிஜிபியை தேர்தல் ஆணையம் அதிரடியாக மாற்றி உத்தரவிட்டுள்ளது. தமிழக காவல்துறையின் சட்டம்-ஒழுங்கு டிஜிபியாக சந்தீப் ராய் ரத்தோர் தேர்தல் ஆணையம் தரப்பில் நியமிக்கப்பட்டுள்ளார். இதுவரை பொறுப்பு டிஜிபியாக இருந்த வெங்கட்ராமன் மாற்றப்பட்டுள்ளார். புதிய டிஜிபியாக சந்தீப் ராய் ரத்தோர் நியமிக்கப்பட்டுள்ளார்.

புதிய டிஜிபியாக சந்தீப் ராய் ரத்தோர் நியமனம்:

1992ஆம் ஆண்டு பேட்ச் ஐபிஎஸ் அதிகாரியான சந்தீப் ராய் ரத்தோர் தற்போது காவல்துறை பயிற்சி கல்லூரி டிஜிபியாக பணியாற்றி வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.  பல முக்கிய மாவட்டங்களில் காவல் கண்காணிப்பாளர் (SP), ஐஜி, ஏடிஜிபி போன்ற பதவிகளில் பணியாற்றியுள்ளார். தேர்தல் காலங்களில் பாதுகாப்பு ஏற்பாடுகள், கூட்டநிர்வாகம் (crowd control), மற்றும் கலவர தடுப்பு நடவடிக்கைகளில் அனுபவம் பெற்றவர். காவல்துறை பயிற்சி மற்றும் நிர்வாகத்தில் முக்கிய பங்களிப்பு செய்தவர்.

தேர்தல் நேரத்தில் சட்டம்-ஒழுங்கு நிலைமை மிகவும் முக்கியமானது. அதனால், அனுபவமிக்க அதிகாரியாக சந்தீப் ராய் ரத்தோர் நியமிக்கப்பட்டது முக்கியமான மாற்றமாக பார்க்கப்படுகிறது.

மேலும் படிக்க: சாத்தான்குளம் தந்தை மகன் கொலை வழக்கு… 9 பேருக்கான தண்டனை விவரம் ஒத்திவைப்பு..

தமிழகத்தின் சட்டம்-ஒழுங்கு டிஜிபி மட்டுமல்லாமல், மேலும் இரண்டு மாவட்ட ஆட்சியர்கள், இரண்டு காவல் ஆணையர்கள் மற்றும் ஒரு ஐஜி ஆகியோர்களையும் தேர்தல் ஆணையம் மாற்றி உத்தரவிட்டுள்ளது.

2 மாவட்ட ஆட்சியர்கள் மாற்றம்:

அதன்படி, தூத்துக்குடி மாவட்ட ஆட்சியராக இருந்த இளம் பகவத் மாற்றப்பட்டு, புதிய ஆட்சியராக விஷ்ணு மகாஜன் நியமிக்கப்பட்டுள்ளார். சேலம் மாவட்ட ஆட்சியராக இருந்த பிருந்தா தேவி மாற்றப்பட்டு, அருண் தம்புராஜ் நியமிக்கப்பட்டுள்ளார்.

மேலும் படிக்க: தமிழக வானிலை அப்டேட்: எங்கெல்லாம் மழைக்கு வாய்ப்பு..?

அதேபோல், தாம்பரம் மாநகர காவல் ஆணையராக இருந்த அமல்ராஜ் மாற்றப்பட்டு, சஞ்சய் குமார் புதிய ஆணையராக நியமிக்கப்பட்டுள்ளார். மதுரை மாநகர காவல் ஆணையராக இருந்த லோகநாதன் மாற்றப்பட்டு, அபிஷேக் தீக்ஷித் நியமிக்கப்பட்டுள்ளார். மேற்கு மண்டல ஐஜியும் மாற்றப்பட்டு, புதிய ஐஜியாக ரம்யா பாரதி நியமிக்கப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Follow Us
தன்னை கடித்த பாம்பை தைரியமாக பிடித்த முதியவர்
கேர்ள் ஃபிரெண்டுடன் லூட்டி அடிக்கும் குரங்கு - வைரல் வீடியோ
தன் உயிரையும் பொருட்படுத்தாமல் நாயை காப்பாற்றிய பெண்.. இணையத்தில் வைரல்..
தாயின் பக்கெட் லிஸ்டை நிறைவேற்றிய மகன்... இணையத்தில் வைரல்..