ராமநாதரபுரத்தில் சோகம்… வேப்பம்பழம் பொறுக்கியபோது மின்னல் தாக்கி அக்கா – தங்கை உயிரிழப்பு!

Ramanathapuram Crime News: ராமநாதபுரம் மாவட்டத்தில் காலை முதல் பரவலாக மழை பெய்து வரும் நிலையில், ஒரே குடும்பத்தை சேர்ந்த அக்காள் மற்றும் தங்கை மின்னல் தாக்கி உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மேலும் போலீசார் இது தொடர்பாக விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

ராமநாதரபுரத்தில் சோகம்... வேப்பம்பழம் பொறுக்கியபோது மின்னல் தாக்கி அக்கா - தங்கை உயிரிழப்பு!

கோப்பு புகைப்படம்

Updated On: 

24 Aug 2025 07:04 AM

ராமநாதபுரம், ஆகஸ்ட் 23, 2025: ராமநாதபுரம் மாவட்டத்தில் அக்காள் மற்றும் தங்கை இருவரும் மின்னல் தாக்கி உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. ராமநாதபுரம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் ஆகஸ்ட் 23 2025 தேதியான இன்று காலை முதலே நல்ல மழை பதிவு இருந்து வருகிறது தமிழகத்தில் அனேக மாவட்டங்களில் கடந்த சில நாட்களாக மிதமான மழை பதிவாகி வருகிறது. அந்த வகையில் ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி அருகே உள்ள வாழவந்தால்புரம் கிராமத்தை சேர்ந்த அக்காள் மற்றும் தங்கை பள்ளி விடுமுறை என்பதால் வேப்பமரத்தடியில் வேப்பங்கொட்டை சேகரிக்க சென்றனர் அப்போது இந்த துயர சம்பவம் நடந்துள்ளது. இந்தியாவில் சமீப காலமாக மின்னல்டாக்கி உயிரிழப்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.

ராமநாதபுரத்தில் மழை:

ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி அருகே நூருல் அமீன் என்பவரின் மகள்கள் சையது ஆஸ்பியா பானு வயது 13 மற்றும் சபிக்கா பானு வயது 9 ஆகும். அஸ்பியா ஒன்பதாம் வகுப்பிலும் சபிக்கா ஐந்தாம் வகுப்பிலும் அருகில் இருக்கக்கூடிய அரசு பள்ளியில் படித்து வந்துள்ளனர். இன்று சனிக்கிழமை என்பதாலும் பள்ளி விடுமுறை என்பதாலும் தனது தாயாருடன் இருவரும் ஊருக்கு வெளியே வந்து வேப்பமரத்தடியில் வேப்பங்கொட்டை சேகரிக்க வந்துள்ளனர். அப்போது கருமேகங்கள் சூழ கடுமையான இடி மின்னல் உடன் கூடிய மழை பெய்து வந்துள்ளது.

மேலும் படிக்க: வங்கக்கடலில் உருவாகும் காற்றழுத்த தாழ்வு பகுதி.. 8 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை

மின்னல் தாக்கி அக்காள் – தங்கை உயிரிழப்பு:

அப்போது எதிர்பாராத விதமாக மின்னல் தாக்கியதில் அக்கா அஸ்வியா மற்றும் தங்கை சபிக்கா இருவருமே சம்பவ இடத்திலேயே சுரண்டு விழுந்தனர். இதனை தொடர்ந்து அவரை அருகில் இருக்கக்கூடிய அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் அங்கு மருத்துவர்கள் அவர்கள் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனர்.

மேலும் படிக்க: த.வெ.க கட்சிக்கு எழுந்த புதிய சிக்கல்.. ஆட்டோ சின்னம் இல்லையாம்.. புதிய சின்னம் தேர்வு செய்ய முனைப்பு..

தகவல் அறிந்த சத்திரக்குடி காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து இருவரின் உடல்களையும் பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். பின்னர் இது தொடர்பாக வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இரண்டு இளம் உயிர்கள் மின்னல் தாக்கி உயிரிழந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது