San Rechal Death: மிஸ் டார்க் குயின்..! மாடல் சான் ரேச்சல் பண நஷ்டத்தால் தற்கொலை..!
Puducherry Model San Rechal's Suicide: புதுச்சேரியைச் சேர்ந்த 25 வயதான மாடல் சான் ரேச்சல் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பண நஷ்டம் காரணமாக தூக்க மாத்திரை சாப்பிட்டதாகக் கூறப்பட்டாலும், காவல்துறை சான் ரேச்சலுக்கும் அவரது கணவருக்கும் ஏதேனும் பிரச்சினையா என்று விசாரணை நடத்தி வருகின்றனர்.

சான் ரேச்சல்
புதுச்சேரி, ஜுலை 14: புதுச்சேரியை (Puducherry) சேர்ந்த மாடலான வெறும் 25 வயதே ஆன சான் ரேச்சல் தற்கொலை (Suicide) செய்துகொண்ட சம்பவம் அவரது ரசிகர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பண நஷ்டத்தால்தான் தூக்க மாத்திரைகளை உட்கொண்டு சான் ரேச்சல் (San Rechal) இத்தகைய முடிவை எடுத்ததாக காவல்துறையினர் தெரிவித்தாலும், வேறு ஏதேனும் காரணம் இருக்கலாம் என்று கூறி விசாரணையை தீவிரமாக நடத்தி வருகின்றனர். இவரது மறைவை ஒட்டி சமூக ஊடகங்களில் அவரது ரசிகர்கள் சோகமான பதிவுகளை பதிவிட்டு இரங்கலை தெரிவித்து வருகின்றனர். புதுச்சேரியை அடுத்த காராமணிகுப்பம் பகுதியில் வசித்து வந்தவர் 25 வயதான சங்கரபிரியா. இவர் மாடலிங் துறையில் ஏற்பட்ட ஆர்வத்தின் காரணமாக சங்கர பிரியா என்ற பெயரை சான் ரேச்சல் என மாற்றி கொண்டுள்ளார். சான் ரேச்சல் கடந்த 2024ம் ஆண்டு சத்யா என்பவரை திருமணம் செய்து கொண்டு புதுச்சேரியில் உள்ள 100 அடி சாலையில் தனது குடும்பத்துடன் வசித்து வந்துள்ளார்.
மாடலிங் துறைக்கு வெள்ளை, மாநிறம் முக்கியம் இல்லை கருப்பும் ஒரு அழகுதான் என்பதை நிரூபிக்க ஆசைப்பட்டார். எனவே கருப்பு நிறம் கொண்ட சான் ரேச்சல் தனது பலவீனத்தை பலமாகி மாடலிங் மூலம், 2020 மிஸ் புதுச்சேரி, 2019 மிஸ் பெஸ்ட் ஆட்டிட்யூட், 2019 மிஸ் டார்க் குயின் தமிழ்நாடு, 2022 குயின் ஆஃப் மெட்ராஸ், 2023 மிஸ் ஆப்பிரிக்கா கோல்டன் இந்தியா போட்டியில் 2வது இடம் என பல விருதுகளை வென்றுள்ளார். இது மட்டுமின்றி சான் ரேச்சல் மாடலிங் துறைக்கு வரும் ஆர்வமுள்ள பெண்களுக்கு பயிற்சியும் கொடுத்து வந்துள்ளார்.
சான் ரேச்சலின் இன்ஸ்டாகிராம் பக்கம்:
இப்படியான சூழ்நிலையில், கடந்த 2025 ஜூன் 6ம் தேதி தனது தந்தை வீட்டுக்கு வந்த சான் ரேச்சல் அதிக அளவில் தூக்கம் மாத்திரைகளை உட்கொண்டுள்ளார். இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த அவரது சகோதரர் கௌதம் ரேச்சலை புதுச்சேரி அரசு மருத்துவமனையில் அனுமதித்து சிகிச்சை அளித்து வந்தனர். அப்போது, அங்கு சிகிச்சை பெற பிடிக்காததால் யாரிடமும் சொல்லாமல் சான் ரேச்சல் தனது தந்தை வீட்டில் இருந்த உடமைகளை எடுத்து கொண்டு தனது கணவர் வீட்டுக்கு மீண்டும் சென்றுள்ளார். கணவர் வீட்டிற்கு சென்ற 2 நாட்களில் சான் ரேச்சல் கை மற்றும் கால்கள் வீக்கம் அடைய தொடங்கியுள்ளது.
இதையடுத்து, மூலகுலம் பகுதியில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில், சான் ரேச்சலின் 2 கிட்னியும் செயலிழந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். தொடர்ந்து, சான் ரேச்சல் மேல் சிகிச்சைகாக ஜிப்மர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், தீவிர சிகிச்சை பெற்று வந்த போதிலும் நேற்று முன் தினம் அதாவது 2025 ஜூலை 12ம் தேதி இரவு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
ALSO READ: பயணிகளின் பாதுகாப்பு.. ரயில்களில் வரும் பெரிய மாற்றம்.. ரயில்வே எடுத்த முடிவு!
போலீசார் விசாரணை:
சான் ரேச்சல் உடலை உடற்கூறு ஆய்வுகாக அரசு மருத்துவமனைக்கு காவல்துறையினர் அனுப்பி வைத்தனர். இதையடுத்து, ரேச்சலின் தந்தை காந்தி உருளையான்பேட்டை காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் காவல்துறையினர் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தினர்.
சான் ரேச்சல் கடந்த சில ஆண்டுகளாக பேஷன் நிகழ்ச்சிகளை நடத்த பல பேரிடம் கடன் பெற்றுள்ளார். இதனால், பல நஷ்டங்கள் ஏற்பட்டுள்ள நிலையில் தனது கணவரிடம் கூட கூறாமல் மன உளைச்சலில் இருந்துள்ளார். தொடர்ந்து, தனது மரணத்திற்கு என் கணவரோ, மாமியாரோ காரணம் இல்லை என கடிதம் எழுதி வைத்து தற்கொலைக்கு முயற்சி செய்துள்ளார். இருப்பினும், சான் ரேச்சலுக்கும் அவரது கணவருக்கும் ஏதேனும் பிரச்சினையா அல்லது வேறு ஏதாவது காரணமா என்று கோணத்தில் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
தற்கொலை எந்தவொரு பிரச்சனைக்கும் தீர்வு தராது.. இதுமாதிரியான முடிவுகளை என்றே நினைக்க வேண்டாம், இது உங்களை அழிப்பது மட்டுமின்றி, உங்கள் குடும்பத்தையும் உருகுலைக்கும்..
ஸ்னேஹா சுவிஸ் டே கேர் சென்டர்
முகவரி: # 11, பார்க் வியூ சாலை, பிஷப் கார்டன், ராஜா அண்ணாமலை புரம், சென்னை, தமிழ்நாடு 600028 தொலைபேசி: 044 2464 0050