AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

Seeman : காமராஜர் 50 படங்கள் நடித்து முதலமைச்சராக வரவில்லை.. விஜயை சாடிய சீமான்!

Seeman React to Vijay Compared to Kamarajar | தமிழக வெற்றிக் கழகம் சார்பில் சமீபத்தில் மாணவர்களுக்கு கல்வி விருது வழங்கும் விழா நடைபெற்றது. இதில் ஆசிரியர் ஒருவர் விஜயை, இளைய காமராஜர் என்று கூறியிருந்தார். இது குறித்து நாம் தமிழர் கட்சி தலைவர் சீமான் பேசியுள்ளார்.

Seeman : காமராஜர் 50 படங்கள் நடித்து முதலமைச்சராக வரவில்லை.. விஜயை சாடிய சீமான்!
சீமான்
Vinalin Sweety
Vinalin Sweety | Updated On: 13 Jun 2025 09:46 AM IST

சென்னை, ஜூன் 02 : காமராஜர் 50 திரைப்படங்கள் நடித்து முதலமைச்சராக வரவில்லை. அரசியலுக்கு வரவில்லை என்று நாம் தமிழர் கட்சி (NTK – Naam Tamilar Katchi) தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார். தமிழக வெற்றிக் கழகம் (TVK – Tamilaga Vetri Kazhagam) சார்பில் நடைபெற்ற மாணவர்களுக்கு கல்வி விருது வழங்கும் விழாவில், அக்கட்சியின் தலைவர் விஜயை இளைய காமராஜர் என ஆசிரியர் ஒருவர் கூறியது குறித்து எழுப்பப்பட்ட கேள்விக்கு அவர் இவ்வாறு பதில் அளித்துள்ளார். இந்த நிலையில், விஜய் குறித்த கேள்விக்கு சீமானின் பதில் என்ன என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.

காமராஜர் 50 திரைப்படங்கள் நடித்து முதலமைச்சராக வரவில்லை – சீமான்

நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் சென்னையில் நேற்று (ஜூன் 1, 2025) செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவரிடம் மாணவர்களுக்கு கல்வி விருது வழங்கும் விழாவில், விஜயை இளைய காமராஜர் என ஆசிரியர் ஒருவர் கூறியது குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. இதற்கு பதில் அளித்த சீமான், இளைய காமராஜர் என்று சொன்னவருக்கு காமராஜர் யார் என்றே தெரியாது. அந்த ஆசிரியர் என்ன படித்தாரோ, காமராஜரை படிக்கவில்லை என்று கூறினார்.

சண்டை என்றால் தனித்துதான் போட்டியிடுவேன் – சீமான்

இது குறித்து தொடர்ந்து பேசிய அவர், காமராஜர் 50 திரைப்படங்கள் நடித்து முதலமைச்சராக வரவில்லை. அரசியலுக்கு வரவில்லை என்று கூறினார். மேலும், நான் யாருடனும் கூட்டு சேரவில்லை. சாப்பாட்டில் மட்டும்தான் கூட்டு பொறியல். சண்டை என்றால் தனித்துதான் போட்டியிடுவேன் என்று தெரிவித்துள்ளார்.

மாணவர்களுக்கு கல்வி விருது வழங்கும் விழா நடத்திய தவெக

தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் கடந்த இரண்டு ஆண்டுகளாக 10 மற்றும் 12 ஆம் வகுப்பில் அதிக மதிப்பெண் பெற்று தேர்வில் வெற்றி பெற்ற மாணவர்களை பாராட்டும் வகையில் கல்வி விருது வழங்கி வருகிறார். அந்த வகையில், 2025-ல் தேர்ச்சி பெற்ற மாணவர்களை சந்தித்து அவர் விருது வழங்கினார். இந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற ஆசிரியர் ஒருவர், விஜய்யை இளைய காமராஜர் என்று கூறியிருந்தார்.

Follow Us