AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்பொழுதுபோக்குவெப் ஸ்டோரிஸ்லைஃப்ஸ்டைல்வணிகம்டெக்னாலஜிஇந்தியாஆன்மீகம்உலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரி

நா.த.க வேட்பாளர் கார்த்திகா கைது: விஜய் அரசுக்கு மு.க.ஸ்டாலின், கனிமொழி, எடப்பாடி பழனிசாமி கடும் கண்டனம்!

NTK Karthika Arrest: கார்த்திகாவின் கைது நடவடிக்கைக்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், திமுக நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி மற்றும் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி உள்ளிட்ட அரசியல் தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர். எதிர்க்கட்சியினரை ஒடுக்கும் வகையில் தமிழக வெற்றிக் கழக அரசு செயல்படுவதாகவும் அவர்கள் விமர்சித்துள்ளனர்.

நா.த.க வேட்பாளர் கார்த்திகா கைது: விஜய் அரசுக்கு மு.க.ஸ்டாலின், கனிமொழி, எடப்பாடி பழனிசாமி கடும் கண்டனம்!
கோப்பு புகைப்படம்
Aarthi Govindaraman
Aarthi Govindaraman | Published: 20 Oct 2026 15:34 PM IST

அக்டோபர் 20, 2026: தாராபுரம் தொகுதி இடைத்தேர்தலின்போது காவல் நிலையத்தை முற்றுகையிட முயன்றதாக தொடரப்பட்ட வழக்கில், நாம் தமிழர் கட்சி வேட்பாளர் கார்த்திகா அக்டோபர் 20ஆம் தேதி கைது செய்யப்பட்டார். இந்த கைது நடவடிக்கைக்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், திமுக நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி மற்றும் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி உள்ளிட்ட அரசியல் தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர். எதிர்க்கட்சியினரை ஒடுக்கும் வகையில் தமிழக வெற்றிக் கழக அரசு செயல்படுவதாகவும் அவர்கள் விமர்சித்துள்ளனர்.

மு.க.ஸ்டாலின் கடும் கண்டனம்


இதுகுறித்து தனது சமூக வலைதளப் பக்கத்தில் பதிவிட்டுள்ள திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், இடைத்தேர்தலின்போது தொடரப்பட்ட வழக்கைக் காரணம் காட்டி கார்த்திகாவைக் கைது செய்திருப்பது வன்மையான கண்டனத்திற்குரியது எனத் தெரிவித்துள்ளார்.

மேலும், ஒடுக்கப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த பெண்கள் பொதுவாழ்க்கையில் ஈடுபடுவதை ஊக்குவிக்க வேண்டும் என்றும், அவர்களைக் கைது செய்து அச்சுறுத்துவதன் மூலம் அரசு எதைச் சாதிக்கப் போகிறது என்றும் கேள்வி எழுப்பியுள்ளார். கடந்த காலங்களில் கார்த்திகா திமுகவையும் அதன் தலைவர்களையும் விமர்சித்தபோதும், ஜனநாயக வழியில் பதிலளித்ததாகக் குறிப்பிட்ட அவர், தற்போது எதிர்க்கட்சியினரை ஒடுக்கும் நோக்கில் அரசு செயல்படுவதாகக் குற்றம்சாட்டியுள்ளார்.

மேலும் படிக்க: Fan Boy சம்பவம் – ‘ஜெயிலர் 2’ பார்க்க முழு திரையரங்கையும் முன்பதிவு செய்த சஞ்சு சாம்சன்!

மேலும், ஜாமீனில் வெளிவரக்கூடிய சாதாரண வழக்குகளில் கைது நடவடிக்கைகளை மேற்கொள்ளும் காவல்துறை அதிகாரிகள் நீதிமன்றக் கண்டனத்திற்கு ஆளாக நேரிடும் என்றும் எச்சரித்துள்ளார். கார்த்திகா மற்றும் அவரது கட்சியினரை நிபந்தனையின்றி விடுதலை செய்ய வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார்.

எம்.பி கனிமொழி கண்டனம்:


திமுக நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழியும் கார்த்திகா கைது நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளார். கொள்கை முரண்பாடுகள் இருந்தாலும், ஜனநாயக வழியிலேயே விமர்சனங்களை முன்வைக்க வேண்டும் என்றும், தமிழக வெற்றிக் கழக அரசு எதிர்க்கட்சிகளை ஒடுக்கும் நோக்கில் செயல்படுவதாகவும் அவர் குற்றம்சாட்டியுள்ளார்.

தமிழகத்தில் சட்டம் ஒழுங்குச் சீர்கேடு, மின்வெட்டு, விலைவாசி உயர்வு உள்ளிட்ட பிரச்சினைகளால் மக்கள் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், மாற்றுக் கட்சியினரை ஒடுக்குவதில் கவனம் செலுத்தாமல் மக்களின் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

மேலும் படிக்க: திருச்செந்தூர் முருகன் கோயில் சொத்தில் அர்ச்சகர் கைவரிசை.. காட்டிக் கொடுத்த 3- ஆம் கண்.. அடுத்து நடந்த தரமான சம்பவம்!

எடப்பாடி பழனிசாமி விமர்சனம்

அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமியும் கார்த்திகா கைது நடவடிக்கைக்குக் கண்டனம் தெரிவித்துள்ளார். தமிழக வெற்றிக் கழக அரசு பாசிசப் போக்கைக் கையாள்வது வெட்கக்கேடானது என அவர் விமர்சித்துள்ளார்.

 

Follow Us