Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்வீடியோ

நீலகிரி சுற்றுலா தலங்கள் மூடல்.. காரணம் இதுதான்..!

Nilgiri Red Alert: தமிழகத்தில் தீவிரமடைந்துள்ள பருவமழையால் நீலகிரி மாவட்டத்திற்கு செவ்வரி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. தொட்டபெட்டா மற்றும் பைன் காடு போன்ற முக்கிய சுற்றுலாத் தலங்கள் 2025 மே 25 அன்று மூடப்படுகின்றன. சுற்றுலா பயணிகளின் பாதுகாப்பு கருதி இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

நீலகிரி சுற்றுலா தலங்கள் மூடல்.. காரணம் இதுதான்..!
நீலகிரி சுற்றுலா தலங்கள் மூடல்Image Source: pinrest
sivasankari-bose
Sivasankari Bose | Published: 25 May 2025 06:29 AM

நீலகிரி மே 25: தமிழகத்தில் பருவமழை (Monsoon in Tamil Nadu) தீவிரமடைந்துள்ள நிலையில், நீலகிரி (Nilgiri)  மாவட்டத்திற்கு ரெட் அலர்ட் (Red Alert) விடுக்கப்பட்டுள்ளது. கனமழையால் சுற்றுலா பயணிகளின் (Tourist) பாதுகாப்பை கருத்தில் கொண்டு, 2025 மே 25 அன்று தொட்டபெட்டா மற்றும் பைன் பாரஸ்ட் (Dodapetta and Pine Forest) சுற்றுலா தலங்கள் ஒரு நாள் மூடப்படுகின்றன. இதை மாவட்ட நிர்வாகம் அறிவித்து, பொதுமக்கள் எச்சரிக்கையுடன் இருக்குமாறு கேட்டுக்கொண்டுள்ளது. நீலகிரியில் மலையேற்ற சவாரியும் மூன்று நாட்களுக்கு தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது. கோவை, நீலகிரி உள்ளிட்ட பகுதிகளில் தொடர் கனமழை பெய்து வருகிறது. இந்த நிலையை எதிர்கொள்வதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரமாக எடுக்கப்பட்டுள்ளன.

மழையால் நீலகிரி சுற்றுலா தலங்கள் மூடல்

நீலகிரி மாவட்டத்திற்கு இந்திய வானிலை ஆய்வு மையம் ரெட் அலர்ட் அறிவித்ததை தொடர்ந்து, மாவட்டத்தில் உள்ள முக்கிய சுற்றுலா தலங்கள் ஒன்று நாளையன்று (மே 25) மூடப்படுகின்றன. குறிப்பாக தொட்டபெட்டா மற்றும் பைன் பாரஸ்ட் பகுதிகள் சுற்றுலா பயணிகளுக்காக ஒரு நாள் வரை திறக்கப்படாது என மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.

மே 25 தொட்டபெட்டா, பைன் பாரஸ்ட் அனுமதி இல்லை

தொடர்ந்து தமிழகத்தில் பருவமழை தொடங்கியுள்ள நிலையில், கோவை, நீலகிரி உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. பயணிகளின் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு இந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

மலையேற்ற சவாரி மூன்று நாட்களுக்கு தற்காலிகமாக நிறுத்தம்

மேலும், நீலகிரியில் நடைபெறும் மலையேற்ற சவாரி (Horse Ride) ஆகியவை மூன்று நாட்களுக்கு தற்காலிகமாக நிறுத்தப்படுவதாகவும், மாவட்ட ஆட்சியர் லட்சுமி பவ்யா தண்ணீரு அறிவித்துள்ளார். சுற்றுலா பயணிகள் தேவையான முன்னெச்சரிக்கைகளை எடுத்து பயணத்தை திட்டமிடுமாறு அதிகாரிகள் கேட்டுக் கொண்டுள்ளனர்.

தொட்டபெட்டா, பைன் பாரஸ்ட்

தொட்டபெட்டா மற்றும் பைன் காட்டுகள் ஆகியவை, தமிழ்நாட்டின் நீலகிரி மாவட்டத்தில் அமைந்துள்ள ஊட்டியின் முக்கிய சுற்றுலா ஈர்ப்பிடங்களாகும். தொட்டபெட்டா (Doddabetta) என்பது தமிழ்நாட்டின் மிக உயரமான மலைச்சிகரம் ஆகும், இதன் உயரம் 2,637 மீட்டர். இது ஊட்டி நகரத்திலிருந்து சுமார் 9 கிலோமீட்டர் தொலைவில், ஊட்டி-கோத்தகிரி சாலையில் அமைந்துள்ளது. இங்கு உள்ள “டெலிஸ்கோப் ஹவுஸ்” மூலம் சுற்றியுள்ள மலைகளின் அழகிய காட்சிகளை காணலாம்.

பைன் காட்டுகள் (Pine Forest) என்பது ஊட்டி மற்றும் தலக்குண்டா இடையே உள்ள ஒரு புகழ்பெற்ற இயற்கை சுற்றுலா இடமாகும். இது ஊட்டி ரயில்வே நிலையத்திலிருந்து சுமார் 9 கிமீ தொலைவில் உள்ளது. இங்கு உயரமாக வளரும் பைன் மரங்கள், அமைதியான இயற்கை சூழல் மற்றும் புகைப்படக் காட்சிகளுக்காக பிரபலமாக உள்ளது. பல திரைப்படங்கள் இங்கு படமாக்கப்பட்டுள்ளன

கோவை வெடி விபத்து.. என்.ஐ.ஏ நடத்திய விசாரணையில் 4 பேர் கைது..
கோவை வெடி விபத்து.. என்.ஐ.ஏ நடத்திய விசாரணையில் 4 பேர் கைது.....
கார்போஹைட்ரேட்டுகள் அதிகம் சாப்பிட்டால் என்ன ஆகும்? எச்சரிக்கை..!
கார்போஹைட்ரேட்டுகள் அதிகம் சாப்பிட்டால் என்ன ஆகும்? எச்சரிக்கை..!...
கீழடி அகழ்வாராய்ச்சி - தொண்டர்களுக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்
கீழடி அகழ்வாராய்ச்சி - தொண்டர்களுக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்...
சுறாவிடம் சிக்கும் 5 பேர்... ஓடிடியில் காண வேண்டிய படம்!
சுறாவிடம் சிக்கும் 5 பேர்... ஓடிடியில் காண வேண்டிய படம்!...
இந்தோனேசியாவில் வெடித்து சிதறிய எரிமலை - பொதுமக்கள் பாதிப்பு!
இந்தோனேசியாவில் வெடித்து சிதறிய எரிமலை - பொதுமக்கள் பாதிப்பு!...
சென்னை கடற்கரை - திருவண்ணாமலை இடையே பயணிகள் ரயில் ரத்து!
சென்னை கடற்கரை - திருவண்ணாமலை இடையே பயணிகள் ரயில் ரத்து!...
அரசுப்பள்ளிக்கு பேருந்து நன்கொடை கொடுத்த கிராம மக்கள்
அரசுப்பள்ளிக்கு பேருந்து நன்கொடை கொடுத்த கிராம மக்கள்...
நீண்ட நாட்களாக தொல்லை கொடுத்த வந்த கொழுந்தனை தீர்த்துகட்டிய அண்ணி
நீண்ட நாட்களாக தொல்லை கொடுத்த வந்த கொழுந்தனை தீர்த்துகட்டிய அண்ணி...
INDவிற்கு எதிரான 1st டெஸ்ட் போட்டிக்கான ENG அணி அறிவிப்பு!
INDவிற்கு எதிரான 1st டெஸ்ட் போட்டிக்கான ENG அணி அறிவிப்பு!...
பிரதமர் மோடியின் குரோஷியா பயணம் ஏன் முக்கியத்துவம் வாய்ந்தது?
பிரதமர் மோடியின் குரோஷியா பயணம் ஏன் முக்கியத்துவம் வாய்ந்தது?...
தஞ்சை பாபநாசம் ஸ்ரீ சீனிவாச பெருமாள் கோவில் திருக்கல்யாண வைபவம்
தஞ்சை பாபநாசம் ஸ்ரீ சீனிவாச பெருமாள் கோவில் திருக்கல்யாண வைபவம்...