நடிகர்கள் சோனியா அகர்வால் – விக்ராந்த் நடிப்பில் வெளியானது வில் பட டீசர்
Will Movie Teaser: நடிகர்கள் சோனியா அகர்வால் மற்றும் விக்ராந்த் முன்னணி கதாப்பாத்திரத்தில் நடித்துள்ள படம் வில். இந்தப் படத்தை இயக்குநர் சிவராமன் இயக்கியுள்ளார். இந்த நிலையில் வில் படத்தின் டீசரை நடிகர் அருண் விஜய் தனது சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

நடிகர்கள் விக்ராந்த் (Actor Vikranth) மற்றும் சோனியா அகர்வால் நடிப்பில் உருவாகியுள்ள வில் படத்தின் டீசரை நடிகர் அருண் விஜய் தனது சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். இயக்குநர் சிவராமன் இயக்கத்தில் உருவாகியுள்ள வில் படம் உண்மையான சம்பவங்களை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது. வழக்கரிஞராக பணியாற்றிய சிவராமன் தான் சந்தித்த வழக்குகளில் அடிப்படையில் இந்தப் படத்தை இயக்கியுள்ளார். நடிகர் விக்ராந்த் இந்தப் படத்தில் காவல் துறை அதிகாரியாக நடித்துள்ள நிலையில் நடிகை சோனியா அகர்வால் இந்தப் படத்தில் நீதிபதியாக நடித்துள்ளார். முழுக்க முழுக்க கோர்ட் ட்ராமாவாக இந்தப் படம் உருவாகியுள்ளது. படத்தினை கோத்தகிரி மற்றும் சென்னை பகுதிகளில் படம்மாக்கியுள்ளனர். இந்தப் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் முன்னதாக வெளியாகி ரசிகர்களிடையே கவனம் பெற்ற நிலையில் தற்போது டீசரைப் படக்குழு வெளியிட்டுள்ளது.
இந்தப் படத்தில் நடிகர்கள் விக்ராந்த் மற்றும் சோனியா அகர்வாலுடன் இணைந்து நடிகர்கள் அலேக்யா, பதம் வேணு குமார், மோகன் ராமன், லொள்ளு சபா சுவாமிநாதன் ஆகியோர் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளனர். படத்திற்கு இசையமைப்பாளர் சௌரப் அகர்வால் இசையமைத்துள்ள நிலையில் படத்தை ஃபுட் ஸ்டெப்ஸ் தயாரிப்பு நிறுவனம் கோத்தாரி மெட்ராஸ் இன்டர்நேஷனலுடன் இணைந்து தயாரித்துள்ளது.
நடிகர் அருண் விஜய் வெளியிட்ட எக்ஸ் தள பதிவு:
Happy to unveil the Teaser of #Will ! A huge shoutout to the incredible Team
Congrats @soniya_agg and @vikranth_offl 👍👏Watch 🔗 https://t.co/o3nfdlMAK7@footsteps__off @dir_sivaraman24 @kotharimadras @editor_dineshg7 @saurabhaggarwal #Starnestmedia@Pro_Velu #Willteaser
— ArunVijay (@arunvijayno1) May 24, 2025
வில் படத்தின் டீசர்:
கோத்தகிரியில் வாழும் நபர் ஒருவர் தனது இரண்டு மகன்களுக்கும் சொத்துகளை சரிசமமாக பிரித்து வைத்துவிட்டு சென்னையில் உள்ள இடத்தை மட்டும் ஒரு பெண்ணிற்கு எழுதி வைத்துள்ளார். அந்த பெண் யார் என்பதைப் பற்றி தொடர்கிறது இந்த படத்தின் டீசர். அதனால் ஏற்படும் பிரச்னைகளை காவல் துறை அதிகாரியாக இருக்கும் விக்ராந்த் விசாரிப்பது போல அந்த டீசரில் காட்டப்பட்டுள்ளது. மேலும் இந்த வழக்கை விசாரிக்கும் நீதிபதியாக நடிகை சோனியா அகர்வால் நடித்துள்ளார்.
நடிகர்கள் விக்ராந்த், சோனியா அகர்வால் இறுதியாக நடித்தப் படங்கள்:
நடிகர் விக்ராந்த் விஜயின் தம்பியாக தமிழ் சினிமாவிற்கு அறிமுகம் ஆகி இருந்தாலும் பெரிய அளவில் அவரால் சாதிக்க முடியவில்லை என்றே சொல்லலாம். அதற்கு விஜயின் தம்பி என்ற ஒரு அழுத்தமும் காரணமாக இருந்தது. இருந்தாலும் தான் நடிக்கும் படங்களில் தனது முழு பங்களிப்பையும் வழங்கி வருகிறார் விக்ராந்த். இவர் இருதியாக நடித்தப் படம் தீபாவளி போனஸ். இந்தப் படம் திரையரங்குகளில் வெளியாகி கலவையான விமர்சனத்தைப் பெற்றது.
நடிகை சோனியா அகர்வால் தமிழ் சினிமாவில் குறைவான படங்களில் மட்டுமே நடித்து இருந்தாலும் இவருக்கு என தனி ரசிகர்கள் பட்டாளம் உள்ளது. இவரது நடிப்பில் வெளியான கோவில், 7 ஜி ரெயின்போ காலனி படங்கள் இன்றும் ரசிகர்களின் மனதில் நீங்காத இடத்தையேப் பிடித்துள்ளது.
இந்த நிலையில் நீண்ட நாட்களாக படங்களில் நடிப்பதில் இருந்து விலகி இருந்த நடிகை சோனியா அகர்வால் தற்போது மீண்டும் படங்களில் தொடர்ந்து நடித்து வருகிறார். அந்த வகையில் இவரது நடிப்பில் இறுதியாக வெளியானது ஷ்… இந்தப் படம் ரசிகர்களிடையே கலவையான விமர்சனத்தைப் பெற்றது குறிப்பிடத்தக்கது.