96 பாகம் 2 படத்தில் விஜய் சேதுபதி நாயகன் இல்லையா? வைரலாகும் தகவல்
96 Movie Part 2: இயக்குநர் பிரேம் குமார் இயக்கத்தில் நடிகர்கள் விஜய் சேதுபதி மற்றும் த்ரிஷா கிருஷ்ணன் முன்னணி கதாப்பாத்திரத்தில் நடித்தப் படம் 96. இந்தப் படம் நல்ல வரவேற்பைப் பெற்ற நிலையில் இந்தப் படத்தின் இரண்டாம் பாகம் எப்போது வரும் என்று ரசிகர்கள் ஆவளுடன் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.

தமிழ் சினிமாவில் கேமரா மேனாக அறிமுகம் ஆகி 96 படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகம் ஆனவர் பிரேம் குமார் (Prem Kumar). இவர் இயக்கிய முதல் படமே ரசிகர்களிடையே மாபெரும் வரவேற்பைப் பெற்றது. பள்ளியில் ஏற்படும் காதலை மையமாக வைத்து பள்ளி அனுபவங்களை மீண்டும் அசைப்போட வைத்தது 96 படம். இந்தப் படத்தைப் பார்த்த பலரும் தங்களது பள்ளி காலத்திற்கு சென்று நினைவுகளை ஓடச் செய்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இந்தப் படம் வெளியான பிறகு தான் பள்ளி மற்றும் கல்லூரிகளில் ரீ யூனியன் என்ற கலாச்சாரம் அதிகரித்தது என்றும் கூட சொல்லாம். அந்த அளவிற்கு இந்தப் படம் தமிழ் ரசிகர்களின் நெஞ்சங்களில் தாக்கத்தை ஏற்படுத்தியது என்பது குறிப்பிடத்தக்கது. இந்தப் படத்தை திரையரங்கில் பார்த்து கண் கலங்காதவர்களை விரல் விட்டு எண்ணிவிடலாம் என்பது போல பலரும் இந்தப் படத்தை திரையரங்குகளில் பார்த்து நெகிழ்ந்தனர்.
இந்தப் படத்தில் நடிகர் விஜய் சேதுபதி நாயகனாகவும் நடிகை த்ரிஷா கிருஷ்ணன் நாயகியாகவும் நடித்திருந்தனர். மேலும் நடிகர்கள ஆதித்யா பாஸ்கர் விஜய் சேதுபதியின் சிறு வயது கதாப்பாத்திரமாகவும் நடிகை கௌரி ஜி கிஷன் நடிகை த்ரிஷாவின் சிறு வயது கதாப்பாத்திரமாகவும் நடித்திருந்தனது குறிப்பிடத்தக்கது.
96 படத்தின் கதை என்ன?
96 பேட்சில் ஒன்றாக பள்ளியில் படித்தவர்கள் ஒரு ரீ யூனியன் மூலம் மீண்டும் சந்தித்துக் கொள்கிறார்கள். அப்போது தங்களது பள்ளி கால நினைவுகளை எல்லாம் மீண்டும் அசைப்போட்டுக் கொள்கிறார்கள். இதில் பள்ளியில் படிக்கும் போது த்ரிஷாவை காதலிக்கும் விஜய் சேதுபதி தங்களது காதல் ஒன்று சேரவில்லை என்றாலும் திருமணம் செய்துக்கொள்ளாமலே இருக்கிறார்.
இதனை ரீ யூனியனில் தெரிந்து கொண்ட த்ரிஷா மிகவும் வேதனை அடைகிறார். விஜய் சேதுபதியின் மனதை மாற்ற முயற்சி செய்யும் நிலையில் அவரே அதனை கைவிட்டுவிட்டு அவர் தன்னை எவ்வளவு காதல் செய்கிறார் என்பதில் மூழ்கி விடுகிறார். பின்பு இருவரும் என்ன செய்தார்கள் என்பதே படத்தின் கதை.
இயக்குநர் பிரேம் குமார் இன்ஸ்டா பதிவு:
View this post on Instagram
96 பாகம் இரண்டில் யார் நாயகன்?
96 படத்தின் பாகம் இரண்டு குறித்து முன்னதாகவே இயக்குநர் அப்டேட் கொடுத்துவிட்டார். அதனால் நிச்சயமாக பாகம் 2 இருக்கு என்பது உறுதி. ஆனால் தற்போது சினிமா வட்டாரங்களில் பரவும் தகவல் என்ன என்றால் பாகம் இரண்டில் ராம் ஜானுவை தேடி சிங்கப்பூர் செல்வது போன்ற காட்சிகள் இருக்கும் என்றும் இதுகுறித்து விஜய் சேதுபதியிடம் இயக்குநர் பிரேம் கூறியபோது அவர் எந்தவித ஆர்வமும் காட்டவில்லை என்று சினிமா வட்டாரங்களில் தகவல்கள் தெரிவிக்கின்றது.
இதன் காரணமாக இரண்டம் பாகத்தில் நடிகர் பிரதீப் ரங்கநாதனை நடிக்க வைக்க இயக்குநர் பிரேம் குமார் யோசித்து வருவதாகவும் சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கின்றது. இது எந்த அளவிற்கு உண்மை என்பது படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் போதே தெரியவரும்.