HBD Actor Karthi: பருத்திவீரன் டூ மெய்யழகன்… ஹேப்பி பர்த்டே கார்த்தி!
Actor Karthi: தமிழ் சினிமாவில் தொடர்ந்து மக்களுக்கு பிடித்த மாதிரியான கதைகளை தேர்வு செய்து நடித்து வருபவர் நடிகர் கார்த்தி. இவர் இன்று தனது தனது 48-வது பிறனத நாளை கொண்டாடி வருகிறார். இந்த நிலையில் அவருக்கு பிரபலங்களும் ரசிகர்களும் தங்களது பிறந்த நாள் வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.

தமிழ் சினிமாவில் பழம்பெரும் நடிகர் சிவக்குமாரின் இளைய மகன் தான் நடிகர் கார்த்தி. நடிகர் சூர்யா இவரது அண்ணன். இது சினிமா ரசிகர்கள் அனைவருக்கும் தெரிந்த விசயம் தான். இந்த நிலையில் நடிகர் கார்த்தி தமிழ் சினிமாவில் நடிரகார அறிமுகம் ஆவதற்கு முன்பு பிரபல இயக்குநர் மணிரத்னத்திடம் உதவி இயக்குநராக பணியாற்றியுள்ளார். அந்த அனுபவம் குறித்து பல இடங்களில் நடிகர் கார்த்தி பேசியுள்ளார். மேலும் மணிரத்னத்திடம் ஆயுத எழுத்து படத்தில் உதவி இயக்குநராக பணியாற்றியபோது கூட்டத்தில் ஒரு நபராக நடிகர் கார்த்தி அமர்ந்திருக்கும் புகைப்படங்களும் அவ்வப்போது இணையதளத்தில் வைரலாகி வருவது வழக்கம். தமிழ் சினிமாவில் உதவி இயக்குநராக வந்து தற்போது முன்னணி நடிகராக மாறியுள்ள நடிகர் கார்த்தியின் சினிமா பயணத்தை தற்போது பார்க்கலாம்.
பருத்திவீரனின் நாயகனாக அறிமுகம் ஆன கார்த்தி:
இயக்குநர் அமீர் இயக்கத்தில் கடந்த 2007-ம் ஆண்டு திரையரங்குகளில் வெளியான பருத்திவீரன் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் நாயகனாக அறிமுகம் ஆனார் நடிகர் கார்த்தி. இந்தப் படத்தில் நடிகை பிரியாமணி நாயகியாக நடித்து இருந்தார். இவர்களுடன் இணைந்து நடிகர்கள் சரவணன், பொன்வண்ணன், கஞ்சா கருப்பு, சுஜாதா என பலர் இந்தப் படத்தில் நடித்திருந்தனர்.
இந்தப் படத்திற்கு இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா இசையமைத்திருந்தார். படத்தில் பாடல்கள் அனைத்தும் சூப்பர் டூப்பர் ஹிட் அடித்தது. மேலும் படமும் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது குறிப்பிடத்தக்கது. தான் நடித்த முதல் படத்திலேயே நடிகர் கார்த்தி தமிழ் சினிமா ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றார் கார்த்தி.
கிராமத்து நாயகன் டூ சாக்லேட் பாய்:
கிராமத்து இளைஞனாக தமிழ் சினிமாவில் அறிமுகம் ஆன கார்த்தி அதனைத் தொடர்ந்து இயக்குநர் செல்வராகவன் இயக்கத்தில் கடந்த 2010-ம் ஆண்டு வெளியான ஆயிரத்தில் ஒருவன் படத்தில் நடித்தார். இந்தப் படமும் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது குறிப்பிடத்தக்கது. இதனைத் தொடர்ந்து இவர் சிட்டி பையனாக நடிக்கத் தொடங்கினார் நடிகர் கார்த்தி.
2010-ம் ஆண்டு இயக்குநர் லிங்குசாமி இயக்கத்தில் வெளியான பையா படத்தின் மூலம் சிட்டி பையனாக நடித்தார். கிராமத்து இளைஞனாக தோன்றி சிட்டி பையனாக ரசிகர்களை கிரங்க அடித்தார் நடிகர் கார்த்தி. குறிப்பாக இவர் பருத்திவீரன் படத்தில் நடித்த போதே ரசிகைகள் எண்ணிக்கை அதிகரித்த நிலையில் சிட்டி பையனாக நடித்தபோது ரசிகைகளின் எண்ணிக்கை அதிகரித்தது குறிப்பிடத்தக்கது.
நடிகர் கார்த்தியின் இன்ஸ்டா பதிவு:
View this post on Instagram
ஹிட் நாயகனாக மாறிய நடிகர் கார்த்தி:
தொடர்ந்து நடிகர் கார்த்தி நடிக்கும் படங்கள் ஹிட் அடித்து வருகிறது. நடிகர் கார்த்தி நடிப்பில் இதுவரை வெளியான பருத்திவீரன், ஆயிரத்தில் ஒருவன், பையா, நான் மகான் அல்ல, சிறுத்தை, மெட்ராஸ், தோழா, தீரன் அதிகாரம் ஒன்று, கடைக்குட்டி சிங்கம், கைதி, சுல்தான், பொன்னியின் செல்வன், சர்தார் மற்றும் மெய்யழகன் படங்கள் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது குறிப்பிடத்தக்கது.
மெய்யழகன் கார்த்திக்கு இன்று பிறந்த நாள்:
நடிகர் கார்த்தி நடிப்பில் இறுதியாக திரையரங்குகளில் வெளியான படம் மெய்யழகன். இந்தப் படம் தமிழ் ரசிகர்கள் மட்டும் இன்றி பான் இந்திய அளவில் ரசிகர்களிடையே வரவேற்பைப் பெற்றது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் இன்று 25-ம் தேதி மே மாதம் 2025-ம் ஆண்டு மெய்யழகன் கார்த்தி தனது 48-வது பிறந்த நாளை கொண்டாடி வருகிறார்.