தக் லைஃப் படம் பார்க்கும் போது உங்களுக்கு புரியும்… சர்ச்சைகளுக்கு முற்றுப்புள்ளி வைத்த நடிகை த்ரிஷா
இயக்குநர் மணிரத்னம் இயக்கத்தில் உருவாகியுள்ள தக் லைஃப் படத்தின் ட்ரெய்லர் வெளியானதில் இருந்தே த்ரிஷா கிருஷ்ணன் வைரலாகி வருகிறார். இந்த நிலையில் நேற்று நடந்த படத்தின் இசை வெளியீட்டு விழாவில் நடிகை த்ரிஷா இந்த சர்ச்சைகளுக்கு எல்லாம் பதிலளிக்கும் விதமாக பேசியுள்ளார்.

கடந்த சில தினங்களாக நடிகை த்ரிஷா கிருஷ்ணன் குறித்து சமூக வலைதளத்தில் அதிகமாக பேசப்படுகிறது. இதற்கு காரணம் தக் லைப் படத்தின் ட்ரெய்லர் தான். இந்த தக் லைஃப் படத்தை இயக்குநர் மணிரத்னம் இயக்கியுள்ளார். இதில் நாயகன்களாக நடிகர்கள் கமல் ஹாசன் மற்றும் சிலம்பரசன் ஆகியோர் நடித்துள்ளனர். இவர்களுடன் இணைந்து நடிகர்கள் த்ரிஷா கிருஷ்ணன், அபிராமி, சான்யா மல்கோத்ரா, ஐஸ்வர்யா லட்சுமி, அசோக் செல்வன், ஜோஜூ ஜார்ஜ், நாசர், வடிவுக்கரசி என பலர் இந்தப் படத்தில் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளனர். படத்தின் அறிவிப்பு வெளியானதில் இருந்தே படம் தொடர்பான அப்டேட்கள் தொடர்ந்து வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்று வருகின்றது. இந்த நிலையில் கடந்த 17-ம் தேதி மே மாதம் 2025-ம் ஆண்டு படத்தின் ட்ரெய்லர் வெளியானது.
படத்தின் ட்ரெய்லர் வெளியாவதற்கு முன்பு படத்தின் நடிகர்கள் வைத்து கமல் ஹாசனுக்கு அபிராமி ஜோடி மற்றும் சிம்புவிற்கு த்ரிஷா ஜோடி என்று ரசிகர்கள் நினைத்துக்கொண்டிருந்தனர். இதனை உறுதி செய்யும் விதமாக முன்னதாக படத்தின் செய்தியாளர்கள் சந்திப்பு நடந்தபோது நடிகை த்ரிஷா பேசியது வைரலானது.
செய்தியாளர்கள் சந்திப்பில் நடிகை த்ரிஷா பேசியது:
இந்த தக் லைஃப் படத்திற்கு இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்துள்ள நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு செய்தியாளர்கள் சந்திப்பு ஒன்றை நடத்திய படக்குழு அதில் படத்தில் இருந்து ஜிங்குச்சா என்ற பாடலின் லிரிக்கள் வீடியோவை வெளியிட்டது. அந்த விழாவில் நடிகை த்ரிஷா பேசியதாவது, விண்ணைத்தாண்டி வருவாயா படத்திற்கு பிறகு ரசிகர்கள் நானும் சிம்புவும் எப்போ சேர்ந்து நடிப்போம்னு கேட்டுட்டே இருந்தாங்க.
இப்போ நாங்க ரெண்டு பேரும் இந்தப் படத்தில் சேர்ந்து நடிச்சு இருக்கோம். இந்த தக் லைஃப் படத்தில நீங்க கண்டிப்பா ஒரு மேஜிக்க பாப்பீங்க. உங்க எல்லாருக்கும் அது பிடிக்கும் என்று கூறினார். இதானால் நடிகை த்ரிஷா சிம்புவிற்குதான் ஜோடியாக தக் லைஃப் படத்தில் நடித்துள்ளார் என்று ரசிகர்கள் உறுதியாக நம்பினர்.
கமலுடம் ரொமாஸ் காட்சியில் நடித்த த்ரிஷா:
இந்த நிலையில் தக் லைஃப் படத்தின் ட்ரெய்லரைப் பார்த்த ரசிகர்கள் மிகவும் அதிர்ச்சிக்கு ஆளாகினர். காரணம் ட்ரெய்லரில் நடிகர் கமல் ஹாசனுடன் நடிகை த்ரிஷா ரொமான்ஸ் காட்சிகளில் நடித்திருப்பது தெரியவந்தது. இதனைப் பார்த்த ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்து சமூக வலைதளத்தில் இதனை பேசுபொருளாக மாற்றினர்.
த்ரிஷா கிருஷ்ணன் இன்ஸ்டா போஸ்ட்:
View this post on Instagram
இன்னும் சிலர் தன்னை விட 30 வயது அதிகம் உள்ள நபருடன் நடிகை த்ரிஷா ரொமான்ஸ் செய்வதைப் பார்க்க வெறுப்பாக உள்ளது என்றும் கமெண்ட் செய்து வந்தனர். இதனை சூடுபிடிக்க வைக்கும் விதமாக ட்ரெய்லர் வெளியான அடுத்த இரண்டு நாட்களில் தக் லைஃப் படத்தில் நடிகை த்ரிஷாவின் சுகர் பேபி பாடலை வெளியிட்டது படக்குழு.
சர்ச்சைகளுக்கு முற்றுப்புள்ளி வைத்த த்ரிஷா:
இப்படி தொடர்ந்து சர்ச்சைகளில் சிக்கி வந்த நடிகை த்ரிஷா நேற்று தக் லைஃப் படத்தின் இசை வெளியீட்டு விழாவில் பேசும் போது, நீங்கள் ட்ரெய்லரில் பார்த்தது 2 நிமிடக் காட்சியைத் தான் 2 மணி நேரம் படத்தைப் பார்த்தப் பிறகு இது என்ன மாதிரியான படம் என்பது உங்களுக்குப் புரியும் என்று தெரிவித்துள்ளார். இது தற்போது வைரலாகி வருகின்றது.