Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்வீடியோ

உலகின் 4வது பெரிய பொருளாதார நாடாக இந்தியா வளர்ச்சி – ஜப்பானை பின்னுக்கு தள்ளி சாதனை

India Overtakes Japan : இந்தியா ஜப்பானை முந்தி உலகின் நான்காவது பெரிய பொருளாதார நாடாக உயர்ந்துள்ளது. தற்போது 4 டிரில்லியன் டாலர் மதிப்புள்ள பொருளாதாரமாக இந்தியா இருந்தாலும், அடுத்த 2 ஆண்டுகளில் ஜெர்மனியையும் முந்தி மூன்றாவது பெரிய பொருளாதாரமாக மாறும் என நிதி ஆயோக் தலைவர் சுப்ரமணியம் கூறியுள்ளார்.

உலகின் 4வது பெரிய பொருளாதார நாடாக இந்தியா வளர்ச்சி – ஜப்பானை பின்னுக்கு தள்ளி சாதனை
நிதி ஆயோக் தலைமை நிர்வாக அதிகாரி பி.வி.ஆர். சுப்ரமணியம்
karthikeyan-s
Karthikeyan S | Updated On: 25 May 2025 15:42 PM

புதுடெல்லி, மே 19: இந்தியா (India) தற்போது உலகின் நான்காவது பெரிய பொருளாதாரமிக்க நாடாக மாறியுள்ளது என்று நிதி ஆயோக் (NITI Aayog) தலைமை நிர்வாக அதிகாரி பி.வி.ஆர். சுப்ரமணியம் தெரிவித்துள்ளார். ஜப்பானை (Japan) பின்னுக்குத்தள்ளி இந்தியா இந்த இடத்தை அடைந்துள்ளதாக அவர் மகிழ்ச்சி தெரிவித்துள்ளார்.  நிதி ஆயோக் அமைப்பின் 10வது கூட்டத்திற்குப் பிறகு செய்தியாளர்களை சந்தித்த அவர், “நாம் தற்போது 4 டிரில்லியன் அமெரிக்க டாலர் மதிப்புடைய பொருளாதாரமாக முன்னேறி இருக்கிறோம். இந்த தகவல் சர்வதேச நாணய நிதியம் (International Monetary Fund) தரவுகளால் உறுதிப்படுத்தப்பட்டது. அமெரிக்கா, சீனா, ஜெர்மனி ஆகிய மூன்று நாடுகள் மட்டுமே தற்போது இந்தியாவை விட பெரிய பொருளாதாரங்கள்” என்றார்.

நமக்கு முன்னே தற்போது அமெரிக்கா, சீனா மற்றும் ஜெர்மனி ஆகிய நாடுகள் மட்டுமே உள்ளன. மேலும், இவ்விதமான வளர்ச்சி திட்டமிட்டபடி தொடர்ந்தால், இன்னும் 2.5 முதல் 3 ஆண்டுகளில் இந்தியா உலகின் மூன்றாவது பெரிய பொருளாதாரமாக மாறும் என அவர் நம்பிக்கை தெரிவித்தார்.  மேலும் 2.5 முதல் 3 ஆண்டுகளில் இந்தியா ஜெர்மனியையும் முந்தி மூன்றாவது பெரிய பொருளாதாரமாக மாறும் என்றார்.

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் சமீபத்தில் ஆப்பிள் ஐபோன்கள் அமெரிக்காவில் தயாரிக்கப்பட வேண்டும் என்ற கருத்து தொடர்பாகக் கேட்கப்பட்ட கேள்விக்கு பதிலளித்த சுப்ரமணியம், சுங்க வரி தொடர்பான தகவல்கள் உறுதியற்றது. ஆனால், இன்று இந்தியா மிகவும் குறைந்த செலவில் உற்பத்தி செய்யக்கூடிய நாடாக உள்ளது” என்றார். மேலும், சொத்துகள் பணமாக்கும் (Asset Monetisation) திட்டத்தின் இரண்டாம் கட்டம் தயாராகி வருகின்றது என்றும், அதற்கான அறிவிப்பு ஆகஸ்ட் மாதம் வெளியிடப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.

ஜெர்மனியை முந்தும் இந்தியா

 சர்வதேச நாணய நிதியம் வெளியிட்ட ‘World Economic Outlook’ அறிக்கையின் படி, 2025ல் இந்தியாவின் உள்நாட்டு உற்பத்தி 4,187.017 பில்லியன் டாலராக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது, இது ஜப்பானின் 4,186.431 பில்லியன் டாலரை விட அதிகம். இந்தியா தொடர்ந்து உலகின் வேகமாக வளர்ந்து வரும் பெரிய பொருளாதாரமாகவும், அடுத்த இரண்டு ஆண்டுகளில் 6 சதவிகிதத்துக்கும் மேல் வளர்ச்சி காணும் ஒரே நாடாகவும் உள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளது.  மேலும் 2028ல், இந்தியாவின் ஜிடிபி 5,584.476 பில்லியன் டாலராக உயரும் என கணிக்கப்படுகிறது, இதன் மூலம் ஜெர்மனியை முந்தி உலகின் மூன்றாவது பெரிய பொருளாதாரமாக மாறும் வாய்ப்பு அதிகம்.

ஜெர்மனி மற்றும் ஜப்பானில் ஏற்பட்ட பொருளாதார வீழ்ச்சி

ஜெர்மனி பொருளாதார வளர்ச்சி சரிவை சந்தித்துள்ளது. மேலும் 2025 ஆண்டில் எதிர்பார்த்த வளர்ச்சி இல்லை என்றும், 2026 ஆம் ஆண்டு 0.9 சதவிகிதம் வளர்ச்சி மட்டுமே என்றும் கணிக்கப்பட்டுள்ளது. சர்வதேச வர்த்தகத்தில் ஏற்பட்ட மாற்றம் காரணமாக ஜெர்மனி மிகவும் பாதிக்கப்படும் நாடாக இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஜப்பானும் கவலைக்குரிய நிலையிலேயே உள்ளது. மேலும் 2025 மற்றும் 2026 ஆண்டுகளில் 0.6% மட்டுமே பொருளாதார வளர்ச்சி காணப்படும் என அதற்கும் கணிப்புகள் தெரிவிக்கின்றன.

தொடர்ந்து முதலிடத்தில் அமெரிக்கா

அமெரிக்கா தொடர்ந்து உலகின் பொருளாதார வளர்ச்சி மிக்க நாடுகளில் முதல் இடத்தில் இருக்கிறது. 2025 ஆம் ஆண்டு அதன் ஜிடிபி 30,507.217 பில்லியன் டாலராக இருக்கும் என கணிக்கப்படுகிறது. சீனா 19,231.705 பில்லியன்டாலருடன் இரண்டாவது இடத்தில் இருக்கும்.

அதேசமயம், அமெரிக்காவின் வளர்ச்சி வீதம் 2025ல் 1.8% ஆகவும், 2026ல் 1.7% ஆகவும் குறையும் என சர்வதேச நாணய நிதியம் கணித்துள்ளது. மற்ற ஐரோப்பிய யூனியனை சேர்ந்த நாடுகள் 2025ல் 0.8% வளர்ச்சியையும், 2026ல் 1.2% வளர்ச்சியையும் காணும் என எதிர்பார்க்கப்படுகிறது. பிரான்ஸ் 0.6% மற்றும் 1%, ஸ்பெயின் 2.5% மற்றும் 1.8%, இங்கிலாந்து 1.1% மற்றும் 1.4% வளர்ச்சி வீதங்களை எதிர்கொள்கின்றன.

அமெரிக்காவிற்கு சென்ற ஏர் இந்தியா விமான கருப்பு பெட்டி.. ஏன்?
அமெரிக்காவிற்கு சென்ற ஏர் இந்தியா விமான கருப்பு பெட்டி.. ஏன்?...
சஷ்டி விரதம் இருப்பவர்கள் கவனிக்க வேண்டிய விஷயம்!
சஷ்டி விரதம் இருப்பவர்கள் கவனிக்க வேண்டிய விஷயம்!...
விராட் கோலி இடத்தில் யார் இறங்குவார்கள்..? ஓபனாக சொன்ன பண்ட்!
விராட் கோலி இடத்தில் யார் இறங்குவார்கள்..? ஓபனாக சொன்ன பண்ட்!...
தமிழக மீனவர் வலையில் சிக்கிய டூம்ஸ்டே மீன்..
தமிழக மீனவர் வலையில் சிக்கிய டூம்ஸ்டே மீன்.....
இனி ஏடிஎம் மையங்களில் ரூ.100, ரூ.200 தான் அதிகம் இருக்கும்!
இனி ஏடிஎம் மையங்களில் ரூ.100, ரூ.200 தான் அதிகம் இருக்கும்!...
ரஜினிகாந்தின் ஜெயிலர் 2 படத்தில் கேமியோ பண்ணும் பாலிவுட் நடிகர்?
ரஜினிகாந்தின் ஜெயிலர் 2 படத்தில் கேமியோ பண்ணும் பாலிவுட் நடிகர்?...
கோவை வெடி விபத்து.. என்.ஐ.ஏ நடத்திய விசாரணையில் 4 பேர் கைது..
கோவை வெடி விபத்து.. என்.ஐ.ஏ நடத்திய விசாரணையில் 4 பேர் கைது.....
கார்போஹைட்ரேட்டுகள் அதிகம் சாப்பிட்டால் என்ன ஆகும்? எச்சரிக்கை..!
கார்போஹைட்ரேட்டுகள் அதிகம் சாப்பிட்டால் என்ன ஆகும்? எச்சரிக்கை..!...
கீழடி அகழ்வாராய்ச்சி - தொண்டர்களுக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்
கீழடி அகழ்வாராய்ச்சி - தொண்டர்களுக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்...
சுறாவிடம் சிக்கும் 5 பேர்... ஓடிடியில் காண வேண்டிய படம்!
சுறாவிடம் சிக்கும் 5 பேர்... ஓடிடியில் காண வேண்டிய படம்!...
இந்தோனேசியாவில் வெடித்து சிதறிய எரிமலை - பொதுமக்கள் பாதிப்பு!
இந்தோனேசியாவில் வெடித்து சிதறிய எரிமலை - பொதுமக்கள் பாதிப்பு!...