Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

தமிழகத்தில் மாதம் ரூ.199-ல் அதிவேக இன்டர்நெட் வசதியை பெறுவது எப்படி? லிங்க் இதோ..!

BharatNet in Tamil Nadu:தமிழ்நாட்டில் பாரத் நெட் திட்டத்தின் கீழ் 55,000 கி.மீ. ஒளியிழை கேபிள் அமைக்கும் பணி முடிவடைந்து வருகிறது. 11,800 கிராமங்களில் பணிகள் முடிந்துள்ளன. 2025 ஜூன் முன் அனைத்துப் பணிகளும் முடியும் என எதிர்பார்க்கப்படுகிறது. 20 Mbps வரம்பில்லா இணையம் ரூ.199 முதல் கிடைக்கும்.

தமிழகத்தில் மாதம் ரூ.199-ல் அதிவேக இன்டர்நெட் வசதியை பெறுவது எப்படி? லிங்க் இதோ..!
மாதம் ரூ.199-ல் அதிவேக இன்டர்நெட் வசதிImage Source: x
sivasankari-bose
Sivasankari Bose | Published: 25 May 2025 07:40 AM

தமிழ்நாடு மே 25: மத்திய அரசு (Central Government) முன்னெடுப்பில் கிராமப்புறங்களில் அதிவேக இணைய சேவை (High-speed internet service in rural areas)  வழங்கும் பாரத் நெட் திட்டம் (Bharat Net Project) செயல்படுத்தப்படுகிறது. தமிழ்நாட்டில் 55,000 கிலோமீட்டர் கேபிள் போட்டு 11,800 கிராமங்களில் பணிகள் முடிந்த நிலையில், 2025 ஜூன் மாத இறுதிக்குள் பணிகள் நிறைவடையும். 12,525 கிராம பஞ்சாயத்துகளுக்கு இந்த சேவை கிடைக்கும் வாய்ப்பு உள்ளது. 20 Mbps வரம்பில்லா இணையம் மாதம் ரூ.199 முதல் கிடைக்கும். மாணவர்கள், தொழிலாளர்கள், வணிகர்கள் அனைவரும் இதன் மூலம் பயன் பெறுவார்கள். இணையதளம் மூலம் மேலும் தகவல் பெறலாம்.

மத்திய அரசு முன்னெடுப்பு: கிராமப்புறங்களில் பாரத் நெட் திட்டம் விரிவாக்கம்

மோடி தலைமையிலான மத்திய அரசு, தேசிய அளவில் பல நலத்திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அதில் முக்கியமான ஒன்றாக இருக்கும் “பாரத் நெட்” திட்டம், நாட்டின் எல்லா கிராமங்களிலும் அதிவேக இணைய சேவையை கொண்டு சேர்ப்பதே அதன் நோக்கம். குறிப்பாக, மலைப்பகுதிகளிலும், வனப்பகுதிகளிலும் உள்ள தொலைவான கிராமங்களிலும் இணைய வசதியை வழங்க திட்டமிடப்பட்டுள்ளது. இந்த திட்டத்தை மாநில அரசுகளுடன் இணைந்து செயல்படுத்தும் பணிகள் பல்வேறு கட்டங்களில் நடைபெற்று வருகின்றன.

தமிழ்நாட்டில் பாரத் நெட் பணிகள் முன்னேற்றம்

தமிழக அரசு மற்றும் தமிழ்நாடு ஃபைபர் ஆப்டிக் நெட்வொர்க் கார்ப்பரேஷன் இணைந்து, முழு மாநிலத்திலும் அதிவேக இணைய கேபிள்களை நிறுவுவதில் முன்னணி வகிக்கிறது. 2018-இல் தொடங்கிய இந்த பணிகள் இப்போது இறுதி கட்டத்தில் உள்ளன. தற்போது தமிழகத்தின் 11,800 கிராமங்களில் 55,000 கிலோமீட்டர் கேபிள் பிணைப்பு அமைக்கப்பட்டு உள்ளது. சில பகுதிகளில் அனுமதி சிக்கல்கள் உள்ளன என்றாலும், அவற்றைத் தீர்த்து 2025 ஜூன் மாத இறுதிக்குள் அனைத்து பணிகளும் முடிவடையும் என கூறப்படுகிறது. அடுத்த மாதத்திலேயே கிராமப்புறங்களில் அதிவேக இணைய சேவை கிடைக்க தொடங்கும்.

கிராமப்புற மக்களுக்கு சிறந்த நன்மைகள்

பாரத் நெட் திட்டத்தின் மூலம் நடப்பு ஆண்டுக்குள் ஒரு கோடி கிராமப்புற வீடுகள் அதிவேக இணைய வசதியை பெறவுள்ளதாக அமைச்சரால் அறிவிக்கப்பட்டுள்ளது. இது 12,525 கிராம பஞ்சாயத்துக்களையும், அதில் வசிக்கும் ஏழை, எளிய மற்றும் நடுத்தர குடும்பங்களையும் நேரடியாக நன்மை பெற செய்யும். மாணவர்கள் உயர்கல்வி, ஆன்லைன் பயிற்சி, போட்டித் தேர்வுக்கான தயார் மற்றும் பல்வேறு அரசு மற்றும் தனியார் சேவைகளை எளிதில் பயன்படுத்த முடியும்.

இணைய சேவையின் கட்டண விவரங்கள்

இந்த அதிவேக இணைய சேவையின் கட்டணம் மிகவும் குறைவாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. பொதுமக்களுக்கு 20 Mbps வேகத்துடன் வரம்பில்லாத சேவை மாதம் ரூ.199 இலிருந்து ஆரம்பமாகிறது. கூடுதலான திட்டங்களில் ரூ.399, ரூ.499, வணிக பயன்பாட்டிற்கு ரூ.899 மற்றும் ரூ.1,199 என பல விருப்பங்கள் உள்ளன. மத்திய மற்றும் மாநில அரசுகள் இதை மேலும் விரிவுபடுத்த புதிய திட்டங்களை அறிமுகம் செய்ய திட்டமிடுகின்றனர்.

மேலும் விவரங்களை எப்படி அறிவது?

தமிழக அரசின் tanfinet.tn.gov.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தில் திட்டம் பற்றிய மேலும் தகவல்களைப் பெறலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அயோத்தி ராமர் கோயிலில் அனுஷ்கா சர்மா - விராட் கோலி தரிசனம்!
அயோத்தி ராமர் கோயிலில் அனுஷ்கா சர்மா - விராட் கோலி தரிசனம்!...
மம்முட்டியா இல்ல மோகன்லாலா... மாளவிகா மோகனனின் சூப்பர் பதில்
மம்முட்டியா இல்ல மோகன்லாலா... மாளவிகா மோகனனின் சூப்பர் பதில்...
”பெண்களுக்கு தைரியம் இல்லை” பாஜக எம்.பி. சர்ச்சை பேச்சு!
”பெண்களுக்கு தைரியம் இல்லை” பாஜக எம்.பி. சர்ச்சை பேச்சு!...
தக் லைஃப் தொடர்பான சர்ச்சைகளுக்கு முற்றுப்புள்ளி வைத்த த்ரிஷா
தக் லைஃப் தொடர்பான சர்ச்சைகளுக்கு முற்றுப்புள்ளி வைத்த த்ரிஷா...
ஆபரேஷன் சிந்தூர்.. பிரதமர் மோடி சொன்ன முக்கிய விஷயம்!
ஆபரேஷன் சிந்தூர்.. பிரதமர் மோடி சொன்ன முக்கிய விஷயம்!...
வீட்டில் எந்த திசையில் விளக்கேற்றினால் என்ன பலன்?
வீட்டில் எந்த திசையில் விளக்கேற்றினால் என்ன பலன்?...
மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கு.. தீர்ப்பு தேதி அறிவிப்பு
மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கு.. தீர்ப்பு தேதி அறிவிப்பு...
பருத்திவீரன் டூ மெய்யழகன்... ஹேப்பி பர்த்டே கார்த்தி!
பருத்திவீரன் டூ மெய்யழகன்... ஹேப்பி பர்த்டே கார்த்தி!...
ஜூன் 2025 ராசிபலன்.. இந்த 4 ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டம் அள்ளும்
ஜூன் 2025 ராசிபலன்.. இந்த 4 ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டம் அள்ளும்...
"ரெய்டுக்கு பயந்து தான் டெல்லி சென்றார்" இபிஎஸ் விமர்சனம்
”இனி அமைதியாக இருக்க மாட்டோம்" கனிமொழி எம்.பி பேச்சு
”இனி அமைதியாக இருக்க மாட்டோம்