பிரதமர் மோடியுடன் முக்கிய சந்திப்பு.. முதல்வர் ஸ்டாலின் முன்வைத்த கோரிக்கைகள் என்ன?
MK Stalin Meet PM Modi Delhi : டெல்லியில் தமிழக முதல்வர் ஸ்டாலின், பிரதமர் மோடியை தனியாக சந்தித்து பேசியுள்ளார். அப்போது, தமிழகத்திற்கான வளர்ச்சி திட்டங்கள் குறித்து பிரதமர் மோடியிடம் எடுத்துரைத்துள்ளார். அதோடு, மாநிலத்திற்கு தர வேண்டிய கல்வி நிதியை விரைவாக வழங்கவும் வலியுறுத்தி உள்ளார்.

டெல்லி, மே 25 : நிதி ஆயோக் கூட்டத்தை (Niti Aayog Meeting) முடித்துக் கொண்டு, பிரதமர் மோடியை முதல்வர் ஸ்டாலின் தனியாக சந்தித்து (CM MK Stalin Meet PM Modi) பேசியுள்ளார். பிரதமர் மோடியுடன் சந்திப்பில் மாநிலத்தின் வளர்ச்சி தொடர்பான முக்கிய கோரிக்கைகளை முதல்வர் ஸ்டாலின் முன்வைத்துள்ளார். டெல்லியில் 2025 மே 25ஆம் தேதி நிதி ஆயோக் கூட்டம் நடைபெற்றது. பிரதமர் மோடி தலைமையில் நடந்த நிதி ஆயோக் கூட்டத்தில் தமிழக முதல்வர் ஸ்டாலின், ஆந்திரா முதல்வர் சந்திரபாபு நாயுடு, உத்தர பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் உள்ளிட்ட பல்வேறு மாநில முதல்வர்கள் கலந்து கொண்டனர். கேரளா, தெலங்கானா உள்ளிட்ட ஒருசில மாநில முதல்வர்கள் கலந்து கொள்ளவில்லை. இந்த கூட்டத்தில் மாநில வளர்சச், அதன் மூலம் நாட்டின் வளர்ச்சி என்ற அடிப்படையில் பிரதமர் மோடி சில அறிவுரைகளை வழங்கியிருக்கறார்.
பிரதமர் மோடியுடன் முக்கிய சந்திப்பு
மேலும், இந்த கூட்டத்தில் மாநில முதல்வர்கள் தங்களது கோரிக்கைகளை வலியுறுதத்தி உள்ளனர். அந்த வகையில், தமிழக திட்டங்கள் குறித்தும் முத்ல்வர் ஸ்டாலின் எடுத்துரைத்தார். அதோடு, தமிழகத்துக்கு தர வேண்டிய நிதியை வழங்க வேண்டும் எனவும் கேட்டுக் கொண்டார்.
நிதி ஆயோக் கூடடத்தை தொடர்ந்து, பிரதமர் மோடியை முதல்வர் ஸ்டாலின் தனியாக சந்தித்து பேசியுள்ளார். அப்போது அவர், மாநிலத்திற்கான நிதி பகிர்வில் 50 சதவீதம் தமிழகத்திற்கு தர வேண்டும் என பிரதமர் மோடியிடம் வலியுறுத்தியுள்ளார். மேலும், கல்வி நிதி ரூ,2,200 கோடியை விரைவாக விடுவிக்க வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளது.
இதன்பின் செய்தியாளர்களை சந்தித்த முதல்வர் ஸ்டாலின், பிரதமர் மோடியுடன் முன்வைத்த கோரிக்கைகள் குறித்து விளக்கம் அளித்தார். சமக்ர சிக்ஷா திட்டத்திற்கான நிதியை விடுவிக்க கோரிக்கை விடுத்துள்ளேன். மத்திய வரி வருவாயில் மாநிலத்தின் பங்கை 50 சதவீதம் ஆக உயர்த்த வேண்டும் எனவும் வலியுறுத்தினேன்.
முதல்வர் ஸ்டாலின் முன்வைத்த கோரிக்கைகள் என்ன?
மேலும், கோவை, மதுரை மெட்ரோ ரயில் திட்டஙகளுக்கு ஒப்புதல் அளிக்கவும், செங்கல்பட்டு-திண்டிவனம் தேசிய நெடுஞ்சாலையை எட்டு வழிச் சாலையாக விரிவுப்படுத்தவும், கோவை, மதுரை விமான நிலையங்களை விரிவுப்படுத்தவும் கோரிக்கை விடுத்தேன். இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட தமிழக மீனவர்களை உடனடியாக விடுவிக்க வேண்டும் எனவும் வலியுறுத்தினேன்.
கோவையில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்க வேண்டும். ஆதிதிராவிடர், பழங்குடியினர் சாதிப் பெயர் விடுதிகளை மாற்றுவது குறித்தும், கிறிஸ்தவராக மாறிய ஆதிதிராவிடர்களை பட்டியலினப் பிரிவில் சேர்ப்பது குறித்து கோரிக்கை வைக்கப்பட்டது” என்றார். நிதி ஆயோக் கூட்டத்தில் பங்கேற்பது குறித்து எதிர்க்கட்சிகளின் விமர்சனங்கள் குறித்த கேள்விக்கு பதிலளித்த முதல்வர் ஸ்டாலின், “அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி நான் வெள்ளைக் கொடி அசைப்பதாக கூறினார்.
என்னிடம் வெள்ளைக் கொடி இல்லை. அவரிடம் இருக்கும காவி கொடியும் தன்னிடம் இல்லை” என்றார். காங்கிரஸ் தலைவர்களான சோனியா காந்தி மற்றும் ராகுல் காந்தியுடனான சந்திப்பு குறித்து கேட்டதற்கு பதில் அளித்த அவர், “இது ஒரு மரியாதை நிமித்தமான சந்திப்பு. நான் டெல்லிக்கு செல்லும்போதெல்லாம் அவர்களைச் சந்திப்பேன். நாங்கள் அரசியலும் பேசினோம். இல்லை என மறுக்கவில்லை” என்றார்.