திருப்பத்தூர் மாவட்டத்துக்கு தனி பறவையா? என்ன அது.. தெரிஞ்சா ஷாக் ஆகிடுவீங்க!

Tirupattur District Bird : ஒவ்வொரு மாநிலத்துக்கும் தனி பறவை அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், திருப்பத்தூர் மாவட்டத்துக்கு தனித்துவமான பறவை அறிவிக்கப்பட்டுள்ளது. அது என்ன பறவை, அதற்கான பெயர் காரணம் என்பன உள்ளிட்ட விவரங்களை இந்தப் பதிவில் சற்று விரிவாக பார்க்கலாம் .

திருப்பத்தூர் மாவட்டத்துக்கு தனி பறவையா? என்ன அது.. தெரிஞ்சா ஷாக் ஆகிடுவீங்க!

திருப்பத்தூர் மாவட்ட பறவையாக சாம்பல் நிற இருவாச்சி தேர்வு

Published: 

19 Feb 2026 07:19 AM

 IST

இந்தியாவில் ஒவ்வொரு மாநிலங்களுக்கும் ஒவ்வொரு பறவை அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, இந்தியாவுக்கு தேசிய பறவையாக மையிலும், தமிழகத்துக்கான பறவையாக மரகத புறாவும் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், தமிழகத்தில் உள்ள திருப்பூர் மாவட்ட பறவையாக இந்திய சாம்பல் நிற இருவாச்சி பறவை அறிவிக்கப்பட்டுள்ளது. திருப்பத்தூர் மாவட்ட நிர்வாகம் மற்றும் மாவட்ட வனத்துறை, சுழலியல் ஆர்வலர்கள் ஆகியோர் சார்பில் திருப்பத்தூர் மாவட்டத்திற்கு ஒரு தனிப்பட்ட பறவையை அறிவிக்க முடிவு செய்யப்பட்டது. அதன்படி, திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள நிலப்பரப்புகளில் அரிதாகவும், பிரத்தியேகமாகவும் காணப்படும் பறவைகள் குறித்த கணக்கெடுப்பு மேற்கொள்ளப்பட்டன. இதில், இந்திய சாம்பல் நிற இருவாச்சி, கார்வெண் மீன் கொத்தி, சிறிய சீழ்க்கை சிறகி, நெடுங்கால் உள்ளான், சிவப்பு சில்கை, கருந்தோள் பருந்து, பாறை கழுகு ஆந்தை ஆகிய 7 பறவைகள் தேர்வு செய்யப்பட்டு பட்டியலிடப்பட்டன.

பொது மக்களிடம் கியூ ஆர் குறியீடு மூலம் வாக்குப்பதிவு

இந்த 7 பறவைகளில் இருந்து ஒரு பறவையை திருப்பூர் மாவட்ட பறவையாக தேர்வு செய்வதற்கு மாவட்ட மக்கள் மற்றும் மாணவ, மாணவிகளிடம் இருந்து கியூ ஆர் குறியீடு மூலம் வாக்குகள் பெறப்பட்டன. சுமார் ஒரு மாதம் நடைபெற்ற வாக்கெடுப்பில் மொத்தமாக 1 லட்சத்து 53 ஆயிரத்து 386 வாக்குகள் பதிவாகி இருந்தன. இதில், இந்திய சாம்பல் நிற இருவாச்சி பறவைக்கு அதிகபட்சமாக 45 ஆயிரத்து 333 வாக்குகள் பதிவாகி இருந்தது. மற்ற 6 பறவைகளுக்கு குறைந்த அளவிலான வாக்குகளே கிடைத்திருந்தது. அதன்படி, திருப்பத்தூர் மாவட்ட பறவையாக இந்திய சாம்பல் நிற இருவாச்சி பறவை தேர்வு செய்யப்பட்டது.

மேலும் படிக்க: சென்னை மெரினாவில் ரோப் கார் சேவை – வெளியான அறவிப்பு – மீனவர்களின் வாழ்வாதாரம் பாதிக்குமா?

திருப்பத்தூர் மாவட்ட பறவையாக சாம்பல் நிற இருவாச்சி தேர்வு

இதற்கான மாவட்ட பறவை அறிவிக்கும் நிகழ்ச்சி திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள தூய நெஞ்ச கல்லூரியில் அண்மையில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில், மாவட்ட வருவாய் அலுவலர் நாராயணன் தலைமை வகித்து திருப்பத்தூர் மாவட்ட பறவையாக இந்திய சாம்பல் நிற இருவாச்சி பறவையை அதிகாரப்பூர்வமாக அறிவித்தார். அதன்படி, திருப்பத்தூர் மாவட்ட பறவையாக இந்திய சாம்பல் நிற இருவாச்சி பறவை இருந்து வருகிறது.

சாம்பல் நிற இருவாச்சி பெயர் காரணம்

இந்தப் பறவையானது இந்திய துணை கண்டத்தில் காணப்படும் ஓர் இருவாச்சி இன பறவை ஆகும். இது மரவாழ் பறவையாகும். இதன் உடல் முழுவதும் உள்ள சிறகுகள் சாம்பல் நிறத்திலும், வயிற்றுப் பகுதியில் வெளியில் சாம்பல் நிறத்திலோ அல்லது வெண்மை நிறத்திலோ காணப்படும். இதன் காரணமாகவே சாம்பல் நிற இருவாச்சி பறவை என பெயர் பெற்றது இதே போல, கடந்த ஆண்டு சேலம் மாவட்டத்திற்கு தனித்துவமான பறவையை தேர்வு செய்வதற்கான தேர்வு நடைபெற்றது. சுமார் 20 ஆயிரம் வாக்குகள் பெற்று இந்திய பாம்புத்தாரா என்ற பறவை சேலம் மாவட்ட பறவையாக தேர்வு செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க: வலுப்பெறும் காற்றழுத்த தாழ்வு பகுதி.. அடுத்த 4 நாட்களுக்கு கொட்டப்போகும் மழை.. வானிலை நிலவரம்!!

Follow Us
2 அணுகுண்டு தாக்குதல்களுக்கு பிறகும் உயிர் பிழைத்த மனிதர் - எதிர்கொண்ட கசப்பான அனுபவங்கள்
காசாவில் போர் எதிரொலி - பொம்மைக்கு இறுதி ஊர்வலம் நடத்தும் குழந்தைகள் - மனதை உலுக்கும் காட்சி
ஆயிரத்தில் ஒருவன் 2 படத்தில் நான் நடிக்க மாட்டேன் - ஆண்ட்ரியா அதிர்ச்சி தகவல்
நண்பரை கொலை செய்த நபர் - பேய் பயம் காரணமாக போலீசில் சரண்