Latest Newsவீடியோதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

இனி பொறுக்க மாட்டோம்… கீழடி விவகாரத்தில் மத்திய அரசை கண்டித்து திமுக ஆர்ப்பாட்டம்..

DMK Protest: கீழடி அகழாய்வு ஆராய்ச்சி அறிக்கையை வெளியிட மறுக்கும் மத்திய பாஜக அரசை கண்டித்து வரும் ஜூன் 18 ஆம் தேதி மதுரையில் திமுக மாணவர் அணி சார்பில் போராட்டம் நடத்தப்படும் என திமுக மாணவர் அணி செயலாளர் ராஜீவ் காந்தி தெரிவித்துள்ளார்.

இனி பொறுக்க மாட்டோம்… கீழடி விவகாரத்தில் மத்திய அரசை கண்டித்து திமுக ஆர்ப்பாட்டம்..
கோப்பு புகைப்படம் (pic courtesy: x)
Aarthi Govindaraman
Aarthi Govindaraman | Updated On: 15 Jun 2025 07:59 AM

Keezhadi Issue: கீழடி அகழாய்வு ஆராய்ச்சி (Keezhadi Research) குறித்து அறிக்கையை வெளியிட மறுக்கும் மத்திய அரசை கண்டித்து வரும் 2025, ஜூன் 18ஆம் தேதி திராவிட முன்னேற்றக் கழகத்தின் (Dravida Munnetra Kazhagam) மாணவர் அணி சார்பில் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என திமுக மாணவர் அணி செயலாளர் ராஜீவ் காந்தி தெரிவித்துள்ளார். கீழடியில் 2015 ஆம் ஆண்டு முதல் அகழாய்வு ஆராய்ச்சிகள் நடத்தப்பட்டு அதற்கான அறிக்கையை தொல்லியல் கண்காணிப்பாளர் அமர்நாத் ராமகிருஷ்ணன் சமர்ப்பித்துள்ளார். முதல் மூன்று கட்ட பணிகளை மேற்கொண்ட மத்திய அரசு அதனை தொடர்ந்து அந்த பணிகளை கைவிட்டது. பின்னர் தமிழ்நாடு அரசு தொல்லியல் துறை ஒன்பது கட்டங்களாக இந்த அகழ்வாய்வு பணிகளை மேற்கொண்டது. இதில் ஏராளமான பழங்கால பொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் அகழாய்வு செய்து சமர்ப்பித்த அறிக்கை மத்திய அரசு வெளியிடாமல் இருப்பதை பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். அதாவது இந்த அறிக்கையை ஏற்க கூடுதல் ஆய்வுகள் தேவை என்றும் ஒரே ஒரு கண்டுபிடிப்பு மட்டும் எல்லாவற்றையும் மாற்றி விடாது என மத்திய அமைச்சர் கஜேந்திர சிங் ஷெகாவத் கூறியுள்ளார்.

இதற்கு பதில் அளித்த தமிழ்நாடு தொல்லியல் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு ” முதலில் அவர்கள் கீழடி இல்லை என்றார்கள், அடுத்தது ஆய்வ அதிகாரியை மாற்றினார்கள் பின்னர் நிதியை ஒதுக்க மாட்டோம் என்றார்கள் அதனை தொடர்ந்து தற்போது ஆதாரம் இருந்தும் அதனை வெளியிட மறுக்கிறார்கள் ” என குறிப்பிட்டுள்ளார். மேலும் தமிழர்களின் தொன்மை பற்றி உலக அறிவியல் ஆய்வுகள் ஏற்றுக் கொண்டாலும் ஒரே நாட்டில் இருக்கும் மத்திய அரசு ஒப்புக் கொள்வதில் என்ன தயக்கம் என கேள்வி எழுப்பியுள்ளார்.

மத்திய அமைச்சரின் பதில்:


இந்த விவகாரம் பூதாகரமாக வெடிக்கத் தொடங்கிய நிலையில் மத்திய அமைச்சர்கள் கஜேந்திர சிங் செகாவத், “ உண்மையில் இது போன்ற ஆராய்ச்சிகள் அறிவியல் பூர்வமாக நிரூபிக்கப்பட்டால் நாங்களும் தங்களுடன் சேர்ந்து பெருமை கொள்வோம். ஆனால் இன்று அறிவியல் உலகின் ஏற்றுக்கொள்ளலுக்கு எங்களுக்கு இன்னும் அறிவியல் பூர்வமான வலுவான ஆதாரங்கள் தேவை. அதனால் தான் தரவுகளை அரசியலாக்குவதற்கு பதிலாக அறிவியல் பூர்வமான கூடுதல் தரவுகள் கிடைக்கும் அளவிற்கு ஆராய்ச்சியினை தொடர விரும்பும் மத்திய அரசுக்கு ஆதரவு அளிக்க வேண்டும்” என குறிப்பிட்டுள்ளார்.

திமுக தரப்பில் ஆர்ப்பாட்டம்:


இது போன்ற சூழலில் தமிழ்நாட்டின் தொன்மையை மத்திய அரசு ஏற்றுக்கொள்ளாமல் அகழாய்வு ஆராய்ச்சியை வெளியிடாமல் இருக்கும் மத்திய அரசை கண்டித்து ஜூன் 18 2025 அன்று மதுரையில் திமுக மாணவர் அணி சார்பாக ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.