வாகன ஓட்டிகளுக்கு அலர்ட்.. சென்னையில் முக்கிய ரூட்டில் போக்குவரத்து மாற்றம்.. வெளியான அறிவிப்பு

Chennai Traffic Changes : சென்னையில் வண்ணாரப்பேட்டை பகுதியில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது. மழைநீர் வடிகால் அமைக்கும் பணிகள் நடைபெற உள்ளதால், 2025 ஜூலை 7ஆம் தேதியான இன்று முதல் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது. வண்ணாரப்பேட்டை சர் தியாகராய கல்லூரி முதல் டி.எச்.சாலை கல்லறை சாலை வரை சில நாட்களுக்கு போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

வாகன ஓட்டிகளுக்கு அலர்ட்.. சென்னையில் முக்கிய ரூட்டில் போக்குவரத்து மாற்றம்.. வெளியான அறிவிப்பு

போக்குவரத்து மாற்றம்

Published: 

07 Jul 2025 07:00 AM

சென்னை, ஜூலை 07 : சென்னையில் 2025 ஜூலை 7ஆம் தேதியான இன்று முதல் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது (Chennai Traffic Diversion). மழைநீர் வடிகால் பணிகள் நடைபெறுவதால் சில நாட்களுக்கு வண்ணாரப்பேட்டை பகுதியில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக மாநகர போக்குவரத்து கழகம் அறிவித்துள்ளது.  சென்னையில் போக்குவரத்து நெரிசல் என்பது மிகப்பெரும் பிரச்னையாக உள்ளது. குறிப்பாக பீக் ஹவரில்  வாகனங்கள் ஊர்ந்து செல்லும் அளவில் போக்குவரத்து நெரிசல் இருக்கும்.  இதனிடையே, மெட்ரோ பணிகள், சாலை விரிவாக்கம் போன்ற  பணிகள் பல்வேறு இடங்களில் நடைபெறுகிறது. இதனால்,  போக்குவரத்து நெரிசல் கூடுதலாக இருக்கிறது. இதனால், வாகன ஓட்டிகள் கடும் சிரமத்திற்கு ஆளாகுகின்றனர். இதற்கிடையில், அவ்வப்போது  போக்குவரத்து மாற்றமும் செய்யப்படுகிறது.

சென்னையில் போக்குவரத்து மாற்றம்

அந்த வகையில், தற்போது சென்னை மாநகர போக்குவரத்து கழகம் முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதன்படி, அதாவது, வண்ணாரப்பேட்டை பகுதியில் மழைநீர் வடிகால்களை சீரமைக்கும் பணிகள் நடைபெறுகிறது. இதனால், அந்த இடங்களில் போக்குவரத்து மாற்றம் செய்யப்படுகிறது.

இதுகுறித்து வெளியிட்டுள்ள அறிவிப்பில், வண்ணாரப்பேட்டை சர் தியாகராய கல்லூரி முதல் டி.எச்.சாலை கல்லறை சாலை சந்திப்பு வரை மழை நீர் வடிக்கால்களை சீரமைக்கும் பணி நடைபெற இருப்பதால், 2025 ஜூலை 7ஆம்  தேதி முதல் போக்குவரத்து மாற்றம் செய்யப்படுகிறது.

அதன்படி, மின்ட் பகுதியிலிருந்து வரும் பேருந்துகள் மற்றும் கனரக வாகனங்கள் டி.எச். சாலை- கல்லறை சாலை சந்திப்பில் திருப்பி விடப்படுகிறது. இந்த வாகனங்கள் கல்லறை சாலை, எம்.எஸ். கோயில் தெரு, எஸ்.என். செட்டி சாலை, ஜீவரத்தினம் சாலை வழியாக டி.எச். சாலை-அப்பல்லோ மருத்துவமனை சந்திப்பை அடைய வேண்டும்.

எங்கெங்கு தெரியுமா?


மின்ட் பகுதியிலிருந்து வரும் இரு சக்கர வாகனங்கள் மற்றும் இலகுரக மோட்டார் வாகனங்கள் அப்பல்லோ மருத்துவமனை சந்திப்பை அடைய டிஎச் சாலையில் வழக்கமான பாதையில் செல்ல அனுமதிக்கப்படும். அப்பல்லோ மருத்துவமனை சந்திப்பிலிருந்து மின்ட் பகுதிக்கு எதிர் திசையில் பயணிக்கும் வாகனங்கள் வழக்கமான வழியைப் பயன்படுத்தலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

போக்குவரத்து சீராக செல்வதையும், வடிகால் கட்டுமானத் திட்டத்தை சரியான நேரத்தில் முடிப்பதையும் உறுதி செய்வதற்காக, தற்காலிக மாற்றுப்பாதைகளை வாகன ஓட்டிகள் பின்பற்ற வேண்டும் என்று சென்னை போக்குவரத்து காவல்துறை வலியுறுத்தியுள்ளது.