கோவை நீலகிரிக்கு கனமழை எச்சரிக்கை.. சென்னையில் 100 டிகிரி பாரன்ஹீட் கடந்து பதிவாகும் வெப்பநிலை..

Tamil Nadu Weather Update: சென்னையில், அதிகபட்ச வெப்பநிலையானது 38 டிகிரி செல்சியஸ் ஒட்டி இருக்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சென்னையில் கடந்த சில நாட்களாக பகல் நேரங்களில் வெப்ப நிலை அதிகரித்து காணப்படுகிறது. இதனால் வெப்பத்தின் தாக்கமும் அதிகரித்துள்ளது.

கோவை நீலகிரிக்கு கனமழை எச்சரிக்கை.. சென்னையில் 100 டிகிரி பாரன்ஹீட் கடந்து பதிவாகும் வெப்பநிலை..

கோப்பு புகைப்படம்

Published: 

05 Jul 2025 14:01 PM

வானிலை நிலவரம், ஜூலை 5, 2025: நீலகிரி மற்றும் கோவை மாவட்டத்திற்கு கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள நிலையில் கோவை மாவட்டம் சின்னக்கல்லாரில் அதிகபட்சமாக நான்கு சென்டிமீட்டர் மழை பதிவாகியுள்ளது. நீலகிரி மாவட்டம் பந்தலூர், கோவை மாவட்டம் சோலையார். நீலகிரி மாவட்டம் விண்ட் வொர்த் எஸ்டேட் உள்ளிட்ட பகுதிகளில் 3 சென்டிமீட்டர் மழை பதிவாகியுள்ளது. கோவை மற்றும் நீலகிரி மாவட்டத்தில் மட்டுமல்லாமல். சென்னையிலும் ஜூலை 4, 2025 தேதியான நேற்று மாலை நேரத்தில் பலத்த காற்றுடன் கூடிய மழை பதிவானது. ஒரு சில இடங்களில் கனமழையும் பதிவானது. இது ஒரு பக்கம் இருக்க தமிழகத்தில் மேற்கு திசை காற்று வேகமாறுபாடு காரணமாக ஜூலை 5 2025 தேதியான இன்று நீலகிரி மற்றும் கோவை மாவட்டத்தில் ஒரு சில பகுதிகளில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

அடுத்த 7 நாட்களுக்கு மிதமான மழைக்கு வாய்ப்பு:

அதேபோல் ஜூலை 6 2025 தேதியான நாளை தமிழகத்தில் ஒரு சில இடங்களில் மிதமான மழை பெய்யக்கூடும் எனவும் ஒரு சில இடங்களில் பலத்த தரைக்காற்று மணிக்கு அதிகபட்சமாக 50 கிலோமீட்டர் வேகத்தில் வீசப்படும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த நிலை ஜூலை 11 2025 வரை நீடிக்கும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

சென்னையில் 100 டிகிரி பாரன்ஹீட் கடந்து பதிவாகும் வெப்பநிலை:

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளை பொறுத்தவரையில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்பட்டாலும் நகரின் ஒரு சில பகுதிகளில் மிதமான மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதேபோல் அதிகபட்ச வெப்பநிலையானது 38 டிகிரி செல்சியஸ் ஒட்டி இருக்கும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது. சென்னையில் கடந்த சில நாட்களாக பகல் நேரங்களில் வெப்ப நிலை அதிகரித்து காணப்படுகிறது. இதனால் வெப்பத்தின் தாக்கமும் அதிகரித்துள்ளது.

ஆனால் மாலை மற்றும் இரவு நேரங்களில் வெப்ப சலனம் காரணமாக நகரின் ஒரு சில பகுதிகளில் கனமழை பதிவாகி வருகிறது. இதனால் உஷ்ணம் சற்று தணிந்து காணப்படுகிறது. இருப்பினும் பகல் நேரங்களில் 100 டிகிரி பாரன்ஹீட் கடந்து வெப்பநிலை பதிவாகி வருவதால் மக்கள் கடும் அவதிக்கு ஆளாகியுள்ளனர்.

3000 மி.மீ கடந்து மழை பதிவு – பிரதீப் ஜான்:


அதேபோல் இந்தப் பருவ மழை தொடங்கியது முதல் தற்போது வரை தமினி பகுதியில் 3 ஆயிரம் மில்லி மீட்டர் கடந்து மழை பதிவாகியுள்ளதாக தனியார் வானிலை ஆய்வாளர் பிரதீப் ஜான் தெரிவித்துள்ளார். தென்மேற்கு பருவ மழை தொடங்கி முதல் 35 நாட்களில் தமினி பகுதி சுமார் 3,140 மில்லி மீட்டர் அளவு மழை பெற்றுள்ளது. 2025 ஆம் ஆண்டு தென்மேற்கு பருவமழை ஆனது மே மாதம் தொடங்கியது குறிப்பிடத்தக்கது