100 டிகிரி பாரன்ஹீட்டை கடந்து பதிவாகும் வெப்பநிலை.. அடுத்த 7 நாட்களுக்கு எப்படி இருக்கும்?
Tamil Nadu Weather Update: தமிழகத்தில் தென் மேற்கு பருவ மழை குறையும் நிலையில் அனேக மாவட்டங்களில் வறண்ட வானிலையே நிலவுகிறது. இந்த சூழலில் அடுத்த 7 நாட்களுக்கு தமிழகத்தில் மிதமான மழை மட்டுமே இருக்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

கோப்பு புகைப்படம்
வானிலை நிலவரம், ஆகஸ்ட் 21, 2025: தமிழகத்தில் தீவிரம் படிப்படியாக குறைந்து வருகிறது. இந்த நிலையில் பல்வேறு மாவட்டங்களில் வெப்பநிலையும் 100 டிகிரி பாரன்ஹீட்டை கடந்து பதிவாகி வருகிறது. அந்த வகையில் கடந்த 24 மணி நேரத்தில் மதுரையில் அதிகபட்சமாக 39 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவானது. அதனை தொடர்ந்து தூத்துக்குடியில் 38 டிகிரி செல்சியஸ், தஞ்சாவூரில் 37 டிகிரி செல்சியஸ், திருச்சியில் 37.5 டிகிரி செல்சியஸ், ஈரோட்டில் 37.6 டிகிரி செல்சியஸ், கடலூரில் 37.2 டிகிரி டிகிரி செல்சியஸ், வெப்பநிலை பதிவானது. சென்னை பொறுத்தவரையில் அதிகபட்சமாக மீனம்பாக்கத்தில் 36.4 டிகிரி செல்சியசும் நுங்கம்பாக்கத்தில் 36.1 டிகிரி செல்சியசும் வெப்பநிலை பதிவாகியுள்ளது.
மழைக்கு வாய்ப்பு உள்ளதா?
தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளுக்கான
தினசரி வானிலை அறிக்கைhttps://t.co/467dVuUdtd pic.twitter.com/ehqmLkHL4W— IMD-Tamilnadu Weather (@ChennaiRmc) August 21, 2025
மேற்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக ஆகஸ்ட் 21 2025 தேதியான இன்று தமிழகத்தில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசான முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல் நாளை அதாவது ஆகஸ்ட் 22 2025 முதல் 27 ஆகஸ்ட் 2025 வரை தமிழகத்தில் மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் படிக்க: காலை உணவுத் திட்டம் விரிவாக்கம்… எங்கெங்கு தெரியுமா? முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளை பொறுத்தவரையில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்பட்டாலும் நகரின் ஒரு சில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் சென்னையில் கடந்த ஒரு சில நாட்களாக வெப்பநிலையின் தாக்கம் படிப்படியாக அதிகரித்து வருகிறது. அந்த வகையில் அதிகபட்ச வெப்பநிலை என்பது 37 டிகிரி செல்சியஸ் வரை இருக்கக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் படிக்க: தவெக மாநாடு.. வெளியாகும் புதிய பாடல்.. மதுரையில் கடும் போக்குவரத்து நெரிசல்
அதிகரிக்கும் வெப்பநிலை:
கடந்த சில தினங்களுக்கு முன்பு அதிகபட்ச வெப்பநிலை என்பது 32 டிகிரி செல்சியஸ் வரை பதிவானது. இந்த நிலையில் தற்போது வெப்பநிலையின் தாக்கம் அதிகரித்துள்ளது. மழையின் தீவிரம் என்பது படிப்படியாக குறைந்து வருகிறது. அந்த வகையில் அதிகபட்சமாக கடந்த 24 மணி நேரத்தில் நீலகிரி மற்றும் கோவை மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் மட்டுமே மிதமான மழை பதிவானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.