சென்னை மக்களே.. 11 மின்சார ரயில்கள் இன்று ரத்து.. எந்தெந்த ரூட் தெரியுமா?

Chennai EMU Train Cancelled : சென்னையில் 2025 செப்டம்பர் 7ஆம் தேதியான இன்று சென்ட்ரல் - கூடூர் வழித்தடத்தில் இயக்கப்படும் மின்சார ரயில்கள் ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. பராமரிப்பு பணிகள் காரணமாக, 8 மணி நேரத்திற்கு 11 மின்சார ரயில்கள் ரத்து செய்யப்படுகிறது.

சென்னை மக்களே.. 11 மின்சார ரயில்கள் இன்று ரத்து.. எந்தெந்த ரூட் தெரியுமா?

சென்னை மின்சார ரயில்கள்

Updated On: 

07 Sep 2025 07:26 AM

 IST

சென்னை, செப்டம்பர் 07 :  சென்னையில் 2025 செப்டம்பர் 7ஆம் தேதியான இன்று இரவு முதல்  11 மின்சார ரயில்கள் ரத்து (Chennai EMU Train Cancelled) செய்யப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. சென்னை சென்ட்ரல்  – கூடூர் இடையே 11 மின்சார ரயில்கள் ரத்து செய்யப்படுகிறது. பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால், ரயில்கள் ரத்து செய்யப்படுகிறது.  சென்னையில் முக்கிய போக்குவரத்து வசதிகளில் ஒன்றாக இருப்பது மின்சார ரயில் சேவை. இந்த மின்சார ரயில்களில் தினமும் ஆயிரக்கணக்கான  பயணிகள் சென்று வருகின்றனர். குறிப்பாக, வேலை செல்பவர்கள், கல்லூரி  மாணவர்கள் என தினமும் சென்று வருகின்றனர்.  தற்போது சென்னை கடற்கரை – செங்கல்பட்டு – தாம்பரம், கடற்கரை – கும்மிடிப்பூண்டி உள்ளிட்ட வழித்தடங்களில் ரயில்கள் இயக்கப்பட்டு வருகிறது.

பயணிகளுக்கு சீரான பயணத்தை வழங்குவதற்கு, அவ்வப்போது பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுவது வழக்கம்.  பராமரிப்பு பணிகள் காரணமாக, மின்சார ரயில்களும் ரத்து செய்யப்பட்டு வருகிறது. அந்த வகையில், 2025 செப்டம்பர் 7ஆம் தேதியான இன்று சென்னை சென்ட்ரல் – கூடூர் இடையே, 11 மின்சார ரயில்கள் ரத்து செய்யப்படுகிறது. அதாவது, சென்னை சென்ட்ரல் – கூடூர் வழித்தடத்தில் பொன்னேரி பணிமனையில் 2025 செப்டம்பர் 7ஆம் தேதியான இன்று இரவு 8 மணி முதல் மறுநாள் செப்டம்பர் 8ஆம் தேதி அதிகாலை 4 மணி வரை பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளது.

Also Read : யூட்யூப் பார்த்து சம்பவம்.. கள்ள நோட்டுகள் அச்சடித்த இளைஞர்!

11 மின்சார ரயில்கள் ரத்து


இதனால், அவ்வழித்தடத்தில் இயக்கப்படும் 11 மின்சார ரயில்கள் ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. சென்னை கடற்கரையில் இருந்து மாலை 6.45, இரவு 8.00, 9.20 மணிக்கு கும்மிடிப்பூண்டிக்கு இயக்கப்படும் மின்சார ரயில்கள் ரத்து செய்யப்படுகிறது. மறுமார்க்கத்தில் இரவு 7.35, 8.35 மணிக்கு இயக்கப்படும் மின்சார ரயில்களும் ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

மேலும், சென்ட்ரலில் இருந்து இரவு 7.35, 11.20 மணிக்கு கும்மிடிப்பூண்டி செல்லும் மின்சார ரயில்களும், கும்மிடிப்பூண்டியில் இருந்து இரவு 8.15, 9.25, 10.30 மணிக்கு சென்னை கடற்கரைக்கு செல்லும் மின்சார ரயில்களும் ரத்து செய்யப்படுகிறது. சூலூர்பேட்டையில் இருந்து இன்று இரவு 8.35 மணிக்கு சென்ட்ரல் செல்லும் மின்சார ரயில்களும் ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Also Read : தண்டவாள பராமரிப்பு பணிகள்.. சென்னை மெட்ரோ ரயில் சேவையில் மாற்றம்..

கூட்ட நெரிசலை சமாளிக்க, சிறப்பு ரயில்களையும் தெற்கு ரயில்வே இயக்குகிறது. அதன்படி, சென்னை கடற்கரை – மீஞ்சூர் இடையே மாலை 6.45 மணிக்கும், இரவு 9.20 மணிக்கும் சிறப்பு ரயில்கள் இயக்கப்படும். சென்ட்ரல் – மீஞ்சூர் இடையே இரவு 7.35 மணிக்கு சிறப்பு ரயில்கள் இயக்கப்படும். மீஞ்சூர் – சென்னை கடற்கரை இரவு 8.04 மணிக்கும், மீஞ்சூர் – மூர் மார்க்கெட் வளாகம் இரவு 8:44 மணிக்கும், இரவு 9.56 மணிக்கும் இயக்கப்படும். சூலூர்பேட்டை – கும்மிடிப்பூண்டி இடையே, இரவு 8.35 மணிக்கு சிறப்பு ரயில் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.