மதுரவாயலில் கோரம்.. கார்கள் நேருக்கு நேர் மோதி விபத்து.. கர்ப்பிணி உட்பட 2 பேர் பலி!

Chennai Car Accident : சென்னையில் மதுரவாயல் பைபாஸ் சாலையில் இருகார்கள் நேருக்கு நேர் மோதிய விபத்தில் கர்ப்பிணி உட்பட இருவர் உயிரிழந்துள்ளனர். மதுபோதையில் காரை ஒட்டி வந்து விபத்தை ஏற்படுத்திய மணிகண்டனை போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர். அவரது காரையும் போலீசார் பறிமுதல் செய்துள்ளனர்.

மதுரவாயலில் கோரம்.. கார்கள் நேருக்கு நேர் மோதி விபத்து.. கர்ப்பிணி உட்பட 2 பேர் பலி!

மாதிரிப்படம்

Updated On: 

24 Jun 2025 11:04 AM

 IST

சென்னை, ஜூன் 24 : சென்னையில் அனகாபுத்தூர் அருகே மதுரவாயல் பைபாஸ் சாலையில் கார்கள் மோதியில் கர்ப்பிணி உட்பட இரண்டு பேர் உயிரிழந்தது (Chennai Car Accident) பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும், இந்த விபத்தில் காரில் பயணித்த இரண்டு பேர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். தமிழகம் உட்பட பல்வேறு மாநிலங்களில் சாலை விபத்துகள் தொடர்ந்து நடந்து வருகிறது. இந்த விபத்தில் நாள்தோறும் நூற்றுக்கணக்கான மக்கள் உயிரிழந்து வருகின்றனர். சாலை விபத்துகளை தடுக்க மத்திய, மாநில அரசு பல்வேறு நடவடிக்கைகளையும், விதிமுறைகளை கொண்டு வருகிறது. மேலும், சாலை விதிகளை பின்பற்றாத நபர்கள் மீது கடும் நடவடிக்கையும் எடுத்து வருகிறது. இருப்பினும், விபத்துகள் நடந்து வருகிறது. இந்த நிலையில் தான், சென்னையில் கோர விபத்து நடந்துள்ளது.

கார்கள் நேருக்கு நேர் மோதி விபத்து

அதாவது, மதுரவாயல் பைபாஸ் சாலையில் கார்கள் மோதியில் கர்ப்பிணி உட்பட இரண்டு பேர் உயிரிழந்துள்ளனர்.  சென்னை அனகாபுத்தூர் மதுரவாயல் பைபாஸ் சாலையில் போரூரில் இருந்து தாம்பரம் நோக்கி வாடகை கார் மூலம் பத்நாதன் என்பவர் அவருடைய குடும்பத்தினருடன் பயணித்துள்ளனர்.

அதே சாலையில் மணிகண்டன் என்பவர் மதுபோதையில் காரை ஒட்டி இருக்கிறார். அப்போது, மதுரவாயல் பைபாஸ் சாலையில் எதிர்திசையில் தவறான பாதையில் காரை ஓட்டி வந்துள்ளார். இதனால், இரு கார்கள் நேருக்கு நேர் மோதி உள்ளது. இந்த விபத்தில் அனைவரும் காயம் அடைந்துள்ளனர்.

இந்த விபத்து அறிந்த அக்கம் பக்கத்தினர் உடனே போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். தகவ்ல அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், படுகாயம் அடைந்தவர்களை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு மருத்துவர்கள் பரிசோதனை செய்ததில் இதில் இரண்டு பேர் உயிரழந்தனர்.

கர்ப்பிணி உட்பட இருவர் பலி

அதாவது, மூன்று மாத கர்ப்பிணி தீபிகா (23), பத்மநாபன் ஆகியோர் உயிரிழந்தனர். மேலும், இந்துராணி (51), கார் ஓட்டுநர் புவனேஷ் (21) படுகாயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்ச பெற்று வருகின்றனர். விபத்தை ஏற்படுத்திய மணிகண்டனை (27) போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், காரையும் பறிமுதல் செய்துள்ளனர். இந்த விபத்தில் கர்ப்பிணி உட்பட  இருவர் உயிரிழந்தது பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

முன்னதாக, சென்னை பெரம்பர் பகுதியில் தாயுடன் இருசக்கர வாகனத்தில் சென்றுக் கொண்டிருந்த தவறி விழுந்ததில் அவர் மீது லாரி ஏறிய விபத்தில் சம்பவ இடத்திலேயே உயிரழந்தார். பள்ளிக்கு பைக்கில் அழைத்து சென்று கொண்டிருக்கும் போது, முன்னால் சென்றுக் கொண்டிருந்த வாகனம் திடீரென பிரேக் பிடித்ததால், அதன் மீது மோதி விடாமல் இருக்க அந்த பெண்ணும் சட்டென பிரேக் பிடித்துள்ளார். இதில், பின்னால் அமர்ந்திருந்த சிறுமி தவறி விழுந்துள்ளார். அப்போது, பின்னால் வந்துக் கொண்டிருந்த தண்ணீர் லாரி சிறுமி மீது ஏறி இருக்கிறது. இதில் சிறுமி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

அதிகரித்து வரும் தங்க குத்தகை.. என்ன காரணம்?
மக்களை காக்கும் வவ்வால்கள் - கிராம மக்களின் விசித்திர நம்பிக்கை
உங்கள் அறையின் ஓரத்தில் நிற்பது பேயல்ல. அது ஸ்லீப் பேரலிசிஸ்!
ஏலியனுடன் தொடர்பில் இருந்த ஜார்ஜ் புஷ்? அமேசான் பிரைம் ஆவண படத்தால் சர்ச்சை