ஆம்ஸ்ட்ராங்கின் முதலாம் ஆண்டு நினைவேந்தல்.. புதிய கட்சியை தொடங்கிய மனைவி பொற்கொடி..
New Party By Porkodi: ஆம்ஸ்ட்ராங்கின் முதலாம் ஆண்டு நினைவேந்தல் ஜூலை 5, 2025 அன்று பொத்தூரில் நடைபெற்றது, இதில் ஆம்ஸ்ட்ராங் மனைவி பொற்கொடி தமிழ் மாநில பகுஜன் சமாஜ் என்ற புதிய கட்சியை அறிவித்து கட்சி கொடியை அறிமுகம் செய்து வைத்தார்.

ஆம்ஸ்ட்ராங் நினைவேந்தல்
ஆம்ஸ்ட்ராங் நினைவேந்தல், ஜூலை 5, 2025: மறைந்த பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில செயலாளர் ஆம்ஸ்ட்ராங்கின் முதலாம் ஆண்டு நினைவேந்தல் இன்று அதாவது ஜூலை 5 2025 அன்று பொத்தூரில் நடைபெற்றது. வள்ளலார் கோயில் வளாகத்தில் இருந்து ஆம்ஸ்ட்ராங் நினைவிடம் வரை பேரணி நடைபெற்றது. ஆம்ஸ்ட்ராங்கின் மனைவி பொற்கொடி தலைமையில் இந்த பேரணியானது நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து ஆம்ஸ்ட்ராங்கின் மனைவி பொற்கொடி புதிய கட்சியை அறிவித்தார் அதாவது தமிழ் மாநில பகுஜன் சமாஜ் என்ற கட்சியை அறிவித்து கொடியை வெளியிட்டார்.
பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில செயலாளர் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு:
பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில செயலாளராக இருந்த ஆம்ஸ்ட்ராங் கடந்த ஆண்டு அதாவது 2024 ஆம் ஆண்டு கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்டார். ஆம்ஸ்ட்ராங்கின் கொலை வழக்கு இந்தியா முழுவதும் அதிர்வலையை ஏற்படுத்தியது. ஆம்ஸ்ட்ராங் சம்பவம் நடந்த அன்று இரவு வீட்டு வாசலில் எப்போதும் போல வந்திருந்த பொழுது, அடையாளம் தெரியாத மர்ம நபர்கள் அவரை சரமாரியாக வெட்டி உள்ளனர். இதனைத் தொடர்ந்து அவர் அருகில் இருக்கக்கூடிய மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.
ஆனால் அவர் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லும் வழியிலேயே உயிரிழந்து விட்டதாக தெரிவிக்கப்பட்டது. இந்த சம்பவம் தமிழகத்தையே உலுக்கியது அதனை தொடர்ந்து காவல்துறையினர் தீவிரமாக விசாரணை மேற்கொண்டு வந்து, தற்போது வரை இருபதுக்கும் மேற்பட்டோரை கைது செய்துள்ளனர். அதேபோல் மூன்று பேரை இந்த வழக்கு தொடர்பாக என்கவுண்டர் செய்துள்ளனர்.
நினைவேந்தல் கூட்டம்: .
இதனைத் தொடர்ந்து ஆர்ம்ஸ்ட்ராங் மனைவி பொற்கொடி முதலாம் ஆண்டு நினைவேந்தல் நடத்தப்படும் என தெரிவித்த நிலையில் அதற்கான அழைப்பிதழை தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன் பாட்டாளி மக்கள் கட்சியை தலைவர் அன்புமணி ராமதாஸ் உள்ளிட்டோருக்கு நேரில் சென்று கொடுத்தார். அதனைத் தொடர்ந்து இந்த நினைவேந்தலானது பொத்தூரில் ஜூலை 5 2025 அன்று நடைபெற்றது. வள்ளலார் கோயில் முதல் நினைவிடம் வரை ஏராளமானோர் பேரணியாக சென்றனர். பின்பு அங்கு அவரது நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தப்பட்டது.
புதிய கட்சியை தொடங்கிய பொற்கொடி:
தமிழ் மாநில பகுஜன் சமாஜ் கட்சி!!
பொற்கொடி ஆர்ம்ஸ்ட்ராங் தலைமையில் புதிய அரசியல் கட்சி தொடக்கம்.
TAMIL MAANILA BAHUJAN SAMAJ KATCHI”
Under the leadership of Porkodi Armstrong (wife of the late Armstrong, BSP Tamilnadu Leader) a political party is born today in Tamilnadu. pic.twitter.com/04T2X4RCTT
— JAIBHIM PORKO ஜெய்பீம் பொற்கோ (@Porkoelumalai) July 5, 2025
அதனைத் தொடர்ந்து ஆம்ஸ்ட்ராங் சிலை திறப்பு விழா நடைபெற்றது. நினைவேந்தல் மலரும் இதில் வெளியிடப்பட்டது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் ஆம்ஸ்ட்ராங் மனைவி பொற்கொடி தமிழ் மாநில பகுஜன் சமாஜ் என்ற புதிய கட்சியை அறிவித்துள்ளார். கட்சி பெயர் மற்றும் கொடியை அறிமுகம் செய்த பொற்கொடி அங்கு இருந்த 32 அடி உயர கம்பத்தில் கட்சி கொடியை ஏற்றினார்