தொடர் மழையால் ஸ்தம்பித்த சென்னை.. பல்வேறு பகுதிகளில் பெருக்கெடுத்து ஓடும் மழைநீர்..

Chennai Water Stagnation: சென்னையில் இடைவிடாது பெய்யும் கனமழையின் காரணமாக பல்வேறு இடங்களில் தண்ணீர் தேங்கி நிற்கும் அவல நிலை ஏற்பட்டுள்ளது. சில பகுதிகளில் முட்டி அளவுக்கு தண்ணீர் தேங்கியுள்ளது. இதனால் பொதுமக்கள் கடும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். அவர்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.

தொடர் மழையால் ஸ்தம்பித்த சென்னை.. பல்வேறு பகுதிகளில் பெருக்கெடுத்து ஓடும் மழைநீர்..

கோப்பு புகைப்படம்

Published: 

02 Dec 2025 06:40 AM

 IST

சென்னை, டிசம்பர் 2, 2025: டிசம்பர் 1, 2025 தேதியான நேற்று அதிகாலை முதல் சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் உள்ளிட்ட மாவட்டங்களில் இடைவிடாது மிதமான மழை பெய்து வருகிறது. அவ்வப்போது கனமழையும், சில நேரங்களில் அதிக கனமழையும் பதிவாகி வருகிறது. டித்வா புயல் வலுவிழந்து ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வங்கக் கடலில் நிலைகொண்டுள்ளது. இது சென்னையிலிருந்து சுமார் 50 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது. இந்த புயல் எங்கும் நகராமல் அதே இடத்தில் நிலைகொண்டிருப்பதால், சென்னை உள்ளிட்ட மாவட்டங்களில் தொடர்ந்து மழை பதிவாகி வருகிறது. மேலும் புதிய மழை மேகங்கள் உருவாகியுள்ளதாலும், மழையின் அளவு அதிகரித்து வருகிறது.

4 மாவட்டங்களில் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை:

கடந்த 24 மணி நேரமாக சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் தொடர்ச்சியாக மழை பெய்து வரும் சூழலில், சென்னை தத்தளிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் உள்ளிட்ட மாவட்டங்களில் மழை தொடரும் என கணிக்கப்பட்டுள்ளதால், இந்த நான்கு மாவட்டங்களிலும் பள்ளிகளுக்கும் கல்லூரிகளுக்கும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. நேற்றைய தினம் விடுமுறை அறிவிக்கப்படாததால் பொதுமக்கள் தரப்பில் கடுமையான விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க: இடைவிடாமல் பெய்யும் மழை.. 4 மாவட்டங்களில் நாளை பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை..

மழைநீரில் தத்தளிக்கும் சென்னை:

சென்னையில் இடைவிடாது பெய்யும் கனமழையின் காரணமாக பல்வேறு இடங்களில் தண்ணீர் தேங்கி நிற்கும் அவல நிலை ஏற்பட்டுள்ளது. சில பகுதிகளில் முட்டி அளவுக்கு தண்ணீர் தேங்கியுள்ளது. இதனால் பொதுமக்கள் கடும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர்.

பசுமை வழிச் சாலையில் காற்றின் காரணமாக மரங்கள் முறிந்து விழுந்ததால் இரண்டு கார்கள் சேதமடைந்துள்ளன. அதே சமயத்தில் பூந்தமல்லியில் கடுமையான பாதிப்புகள் ஏற்பட்டுள்ளதால் வாகனங்கள் இயக்க முடியாத நிலை உருவாகியுள்ளது. பூந்தமல்லி பசுமை வழிச் சாலை மட்டுமன்றி, அண்ணாநகர், மயிலாப்பூர், ராயப்பேட்டை, மந்தவெளி, திருவல்லிக்கேணி, வியாசர்பாடி, பட்டாளம் உள்ளிட்ட வடசென்னை பகுதிகளிலும், மடிப்பாக்கம், வேளச்சேரி, பள்ளிக்கரணை, தாம்பரம், முடிச்சூர், வரதராஜபுரம், பல்லாவரம் உள்ளிட்ட பகுதிகளிலும் சாலைகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடுகிறது.

மேலும் படிக்க: 11 நாட்கள் காட்சி தரும் திருவண்ணாமலை கார்த்திகை தீபம்!

அரசு தரப்பில் மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகள்:

எங்கு பார்த்தாலும் மழை நீர் சூழ்ந்திருப்பதால், பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது. சென்னையில் 95% மழை நீர் வடிகால் பணிகள் முடிவடைந்துவிட்டதாக தமிழக அரசு தரப்பில் கூறப்பட்டாலும், பல பகுதிகளில் தண்ணீர் தேங்கியிருக்கும் நிலை தொடர்ந்து வருகிறது. இது ஒரு பக்கம் இருக்க, தமிழக அரசு தரப்பில் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

குறிப்பாக தாழ்வான பகுதிகளில் மழைநீர் தேங்கி இருந்தால், அதை உடனடியாக வெளியேற்றும் வகையில் மோட்டார் பம்புகள் மூலம் தண்ணீர் அப்புறப்படுத்தப்படுகிறது. முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ள மக்களுக்கு தேவையான வசதிகளும் செய்யப்பட்டுள்ளன. சென்னையில் மழை தொடரும் என்பதால், பல்வேறு பகுதிகளில் மழைநீர் மேலும் தேங்கும் அபாயம் இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆயுஷ்மான் பாரத் பிரதான் மந்திரி ஜன் ஆரோக்ய யோஜனா.. பலருக்கும் தெரியாத அட்டகாசமான அம்சங்கள்...
இனி சபரிமலையில் புலாவ், சாம்பார் இல்லை... அன்னதானத்தில் அதிரடி மாற்றம்!
AI மூலம் எடிட் செய்யப்பட்ட புகைப்படம்.. முழு பணத்தையும் ரீஃபண்ட் செய்த ஸ்விக்கி இன்ஸ்டாமார்ட்..
ராமர் கோயிலில் ஏற்றப்பட்ட கொடி.. அதன் சிறப்பம்சங்கள் என்ன?