Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

On This Day in 2017: ஆர்சிபி வரலாற்றில் மோசமான நாள்! 2017ம் ஆண்டு இதே நாளில் 49 ரன்களில் ஆல் அவுட்!

RCB 49 All Out: 2017 ஏப்ரல் 23 அன்று, ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு (RCB) அணி ஐபிஎல் வரலாற்றில் மிகக் குறைந்த 49 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு எதிரான இந்த போட்டியில், விராட் கோலி உள்ளிட்ட முன்னணி வீரர்கள் தோல்வி கண்டனர். இந்த தோல்வி RCB அணியின் மிக மோசமான தோல்விகளில் ஒன்றாகும். இந்தப் போட்டி பல ஆண்டுகளாக ரசிகர்களின் மனதில் ஒரு நினைவுச்சின்னமாக இருக்கிறது.

On This Day in 2017: ஆர்சிபி வரலாற்றில் மோசமான நாள்! 2017ம் ஆண்டு இதே நாளில் 49 ரன்களில் ஆல் அவுட்!
ஆர்சிபி 49 ரன்களில் ஆல் அவுட்Image Source: ESPN
mukesh-kannan
Mukesh Kannan | Published: 23 Apr 2025 16:33 PM

ஐபிஎல் (IPL) வரலாற்றில் சென்னை சூப்பர் கிங்ஸ் (Chennai Super Kings), மும்பை இந்தியன்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு (Royal Challengers Bengaluru) அணிகள் அதிக ரசிகர் பட்டாளங்களை கொண்டுள்ளது. சென்னை மற்றும் மும்பை அணிகள் ஐபிஎல்லில் தலா 5 முறை சாம்பியன் பட்டத்தை வென்றிருந்தாலும், கடந்த 2009ம் ஆண்டு களமிறங்கியது முதல் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி கிட்டத்தட்ட 18 ஆண்டுகளாக சாம்பியன் பட்டத்தை வெல்ல போராடி வருகிறது. ஒவ்வொரு ஆண்டும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி கோப்பையை வெல்லும் என ரசிகர்கள் காத்திருக்கின்றனர். இருப்பினும், அது ஏமாற்றத்தை கொடுக்கிறது. இந்த ஏமாற்றத்துடன் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி இதே நாளில் ஒரு மோசமான சாதனையை படைத்தது. அது வரலாற்றில் அழியாத சாதனையாக உள்ளது.

ஆர்சிபி 49 ரன்களுக்கு ஆல் அவுட்:

கடந்த 2017ம் ஆண்டு ஏப்ரல் 23ம் தேதி அதாவது இதே நாளில் விராட் கோலி தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி 49 ரன்களுக்குள் ஆல் அவுட்டாகி ஐபிஎல் வரலாற்றில் அவமானகரமான சாதனையை பதிவு செய்தது. இதன்மூலம், கவுதம் கம்பீர் தலைமையிலான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி 82 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

என்ன நடந்தது..?

ஈடன் கார்டன்ஸில் 2017ம் ஆண்டு ஏப்ரல் 23ம் தேதி கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும் மோதியது. இந்த போட்டியில், முதலில் பேட்டிங் செய்த கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி 131 ரன்களுக்குள் ஆல் அவுட் ஆனது. இதனால், இந்த போட்டியில் விராட் கோலி தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி எளிதாக வெறி பெறும் என்று ரசிகர்கள் உள்பட அனைவரும் நினைத்தனர். 132 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியின் தொடக்க வீரர்களாக கிறிஸ் கெயிலும், விராட் கோலியும் இன்னிங்ஸை தொடங்கினர். கொல்கத்தா அணிக்காக முதல் ஓவர் வீசிய நாதன் கூல்டன் நைல், நட்சத்திர வீரர் விராட் கோலியை முதல் பந்திலேயே ஆட்டமிழக்க செய்தார்.

உமேஷ் யாதவ் வீசிய அடுத்த ஓவரிலேயே இளம் வீரர் மன்தீப் சிங் (1) ஆட்டமிழந்தார். பின்னர் ஏபி டிவில்லியர்ஸ் உள்ளே வந்து 2 பவுண்டரிகள் அடித்தார். ஆனால், அவரும் 8 ரன்கள் எடுத்த பிறகு நாதன் கூல்டர்-நைல் பந்தில் ஆட்டமிழந்தார். தொடர்ந்து, உள்ளே வந்த கேதர் ஜாதவ் 24 ரன்களுடனும், அழுத்தத்தில் இருந்த கிறிஸ் கெயில் 7 ரன்களிலும் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர். இதன் காரணமாக, பெங்களூரு அணி 40 ரன்களுக்குள் 5 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது.

இதன்பிறகு, நிலைமை சரியாகும் என்று எதிர்பார்க்கப்பட்டபோது பெங்களூரு அணியின் கடைசி 5 பேட்ஸ்மேன்கள் 9 ரன்களுக்குள் அடுத்தடுத்து ஆட்டமிழக்க, ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி 49 ரன்களுக்குள் ஆல் அவுட் ஆனது. நட்சத்திர வீரர் விராட் கோலி உள்பட 3 பேட்ஸ்மேன்களை ஆட்டமிழக்க செய்த கொல்கத்தா வேகப்பந்து வீச்சாளர் நாதன் கூல்டர் நைல் ஆட்ட நாயகனாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி 49 ரன்களுக்கு அவுட்டானது, ஐபிஎல் வரலாற்றில் இன்னும் குறைந்தபட்ச ஸ்கோராக பதிவாகியுள்ளது. 2வது குறைந்தபட்ச ஸ்கோர் என்பது கடந்த 2009ம் ஆண்டு ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 58 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனதுதான்.

இறைச்சியை ஃப்ரிட்ஜில் வைக்கிறீர்களா? இந்த பிரச்னைகள் வரலாம்!
இறைச்சியை ஃப்ரிட்ஜில் வைக்கிறீர்களா? இந்த பிரச்னைகள் வரலாம்!...
தமிழகத்தில் 24 மணி நேரமும் கடை திறக்க அனுமதி..? முக்கிய அறிவிப்பு
தமிழகத்தில் 24 மணி நேரமும் கடை திறக்க அனுமதி..? முக்கிய அறிவிப்பு...
வறண்ட சருமத்திற்கு முல்தானி மட்டி நன்மை தருமா..? நிபுணர் ஆலோசனை.!
வறண்ட சருமத்திற்கு முல்தானி மட்டி நன்மை தருமா..? நிபுணர் ஆலோசனை.!...
எனது மகன்களுக்காகப் பேசுகிறேன்.. ரவி மோகனை சாடிய ஆர்த்தி!
எனது மகன்களுக்காகப் பேசுகிறேன்.. ரவி மோகனை சாடிய ஆர்த்தி!...
தனுஷூக்கு ஜோடியாகும் மலையாள ஹீரோயின்.. யார் தெரியுமா?
தனுஷூக்கு ஜோடியாகும் மலையாள ஹீரோயின்.. யார் தெரியுமா?...
நியூஸ்9 பேட்மிண்டன் சாம்பியன்ஷிப்.. டிவி9 எம்.டி. தொடங்கி வைப்பு
நியூஸ்9 பேட்மிண்டன் சாம்பியன்ஷிப்.. டிவி9 எம்.டி. தொடங்கி வைப்பு...
பொய்யான தகவல்களால் உலகை ஏமாற்றும் பாகிஸ்தான்: விக்ரம் மிஸ்ரி
பொய்யான தகவல்களால் உலகை ஏமாற்றும் பாகிஸ்தான்: விக்ரம் மிஸ்ரி...
தயாரிப்பாளர் மகள் திருமணம்.. தோழியுடன் கைகோர்த்து வந்த ரவி மோகன்!
தயாரிப்பாளர் மகள் திருமணம்.. தோழியுடன் கைகோர்த்து வந்த ரவி மோகன்!...
பயனர்களின் மொத்த தகவல்களையும் சேகரிக்கும் கூகுள் குரோம்!
பயனர்களின் மொத்த தகவல்களையும் சேகரிக்கும் கூகுள் குரோம்!...
நான் சிங்கிள் கிடையாது.. காதலை ஒப்புக்கொண்ட விஜய் தேவரகொண்டா?
நான் சிங்கிள் கிடையாது.. காதலை ஒப்புக்கொண்ட விஜய் தேவரகொண்டா?...
இபிஎஃப் அக்கவுண்டில் இந்த தவறை மட்டும் செய்துவிடாதீர்கள்!
இபிஎஃப் அக்கவுண்டில் இந்த தவறை மட்டும் செய்துவிடாதீர்கள்!...