IPL 2026: படிதார் போராட்டம் வீண்.. ஆர்சிபியை வீழ்த்தி அசத்திய ஹைதராபாத்!
SRH vs RCB Highlights: ஐபிஎல் 2026 சீசனில் இன்று அதாவது 2026 மே 22ம் தேதி சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியும், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும் மோதியது. இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி 20 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட்டுகள் இழப்பிற்கு 255 ரன்கள் எடுத்தது. 256 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியின் தொடக்க வீரராக களமிறங்கிய விராட் கோலி வெறும் 15 ரன்களில் ஆட்டமிழந்து ரசிகர்களுக்கு அதிர்ச்சி கொடுத்தார்.
ஐபிஎல் 2026 சீசனில் (IPL 2026) இன்று அதாவது 2026 மே 22ம் தேதி சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியும், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும் மோதியது. இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி (Sunrisers Hyderabad) 20 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட்டுகள் இழப்பிற்கு 255 ரன்கள் எடுத்தது. 256 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியின் தொடக்க வீரராக களமிறங்கிய விராட் கோலி வெறும் 15 ரன்களில் ஆட்டமிழந்து ரசிகர்களுக்கு அதிர்ச்சி கொடுத்தார். இருப்பினும், மற்றொரு தொடக்க வீரரான வெங்கடேஷ் ஐயர் வெறும் 19 பந்துகளில் 44 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.
ALSO READ: கொடுத்த வாய்ப்பு வீண்.. சிஎஸ்கே அணியில் இருந்து வெளியேற்றப்படும் 4 வீரர்கள்..!
தொடர்ந்து உள்ளே வந்த ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி கேப்டன் ரஜத் படிதார் அரைசதம் அடித்த போதிலும், பெங்களூரு அணி 20 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட்டுகள் இழப்பிற்கு 200 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதன்மூலம், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி 55 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு எதிராக ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு தோல்வியடைந்தாலும், முதல் 2 இடங்களில் தனது நிலையைத் தக்க வைத்துக் கொண்டுள்ளது. இதற்கிடையில், வெற்றி பெற்ற ஹைதராபாத் அணி புள்ளிப் பட்டியலில் பின்னடைவைச் சந்தித்துள்ளது.




டாப் 3ல் சன்ரைசர்ஸ் ஹைதராபாத்:
சன்ரைசர்ஸ் ஹைதராபாத் முதல் மூன்று இடங்களுக்குள் நீடித்தது. முதல் இரண்டு இடங்களில் உள்ள அணிகளுக்கு ஐபிஎல் தொடருக்குத் தகுதிபெற இரண்டு வாய்ப்புகள் கிடைக்கும். குவாலிஃபையர் 1-ல் தோற்ற பிறகு, குவாலிஃபையர் 2-ல் வெற்றி பெறுவதன் மூலம் அணிகள் இறுதிப் போட்டியில் இடத்தைப் பிடிக்கும் வாய்ப்பைப் பெறுகின்றன. இப்போது, பெங்களூரு அணிக்கு இறுதிப் போட்டிக்குச் செல்ல இரண்டு வாய்ப்புகள் உள்ளன.
இறுதிப் போட்டிக்கு முன்னேற, 3வது மற்றும் 4வது இடங்களைப் பிடித்த அணிகள் இரண்டு போட்டிகளில் (எலிமினேட்டர் மற்றும் குவாலிஃபையர் 2) விளையாடி இரண்டிலும் வெற்றி பெற வேண்டும். இந்த இரண்டு போட்டிகளில் ஏதேனும் ஒன்றில் தோற்றால், போட்டித்தொடர் முடிவுக்கு வரும். இறுதிப் போட்டிக்கு முன்னேற, ஹைதராபாத் அணி இப்போது எலிமினேட்டர் மற்றும் குவாலிஃபையர் 2 ஆகிய இரண்டிலும் வெற்றி பெற வேண்டும்.
ALSO READ: ஒரு போட்டியில் கூட இல்லாத ’தல’ தரிசனம்.. 18 ஆண்டுகால ஐபிஎல் வரலாற்றில் இதுவே முதல் முறை!
ஹைதராபாத் அணிக்காக கலக்கிய வீரர்கள்:
ஹைதராபாத் அணிக்காக இஷான் கிஷன் 46 பந்துகளில் 8 பவுண்டரிகள் மற்றும் 3 சிக்ஸர்களின் உதவியுடன் 79 ரன்கள் எடுத்து அதிகபட்ச ரன்களைக் குவித்தார். அபிஷேக் ஷர்மா 22 பந்துகளில் 4 பவுண்டரிகள் மற்றும் 5 சிக்ஸர்களின் உதவியுடன் 56 ரன்கள் எடுத்தார். கிளாசென் 24 பந்துகளில் 2 பவுண்டரிகள் மற்றும் 5 சிக்ஸர்கள் உட்பட 51 ரன்கள் எடுத்தார். டிராவிஸ் ஹெட் 16 பந்துகளில் 26 ரன்களும், நிதிஷ் குமார் ரெட்டி 12 பந்துகளில் 29* ரன்களும் எடுத்தனர்.