AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்ஐபிஎல் 2026இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

IPL 2026: யார் முதலிடம்..? கௌரவத்திற்காக மோதும் ஹைதராபாத் – பெங்களூரு.. பிட்ச் எப்படி?

SRH vs RCB: ராஜீவ் காந்தி சர்வதேச மைதானத்தின் பிட்ச் பேட்டிங்கிற்கு சாதகமானதாகக் கருதப்படுகிறது. நல்ல பவுன்ஸ் காரணமாக பந்து பேட்டிற்கு எளிதாக வருகிறது. இருப்பினும், இந்த ஸ்டேடியத்தில் சுழற்பந்து வீச்சாளர்களும் திறம்பட செயல்பட முடியும். ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகள் பெரும்பாலும் சமநிலையில் உள்ளன.

IPL 2026: யார் முதலிடம்..? கௌரவத்திற்காக மோதும் ஹைதராபாத் – பெங்களூரு.. பிட்ச் எப்படி?
ஹைதராபாத் Vs பெங்களூரு
Mukesh Kannan
Mukesh Kannan | Published: 22 May 2026 08:00 AM IST

ஐபிஎல் 2026 சீசனின் (IPL 2026) 67வது போட்டியில் இன்று அதாவது 2026 மே 22ம் தேதி சன்ரைசர்ஸ் ஹைதராபாத் (SRH) அணியை ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு (Royal Challengers Bengaluru) அணியை எதிர்கொள்கிறது. இந்தப் போட்டி ராஜீவ் காந்தி கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறும். ஹைதராபாத் மற்றும் பெங்களூரு அணிகளுக்கு இடையேயான இந்தப் போட்டி, புள்ளிப் பட்டியலில் முதலிடத்திற்கான ஒரு கடுமையான போராட்டமாக அமையும். பெங்களூரு அணி தனது முதலிடத்தைத் தக்கவைக்க முயற்சிக்கும் அதே வேளையில், ஹைதராபாத் அணி ஒரு மகத்தான வெற்றியின் மூலம் முதலிடத்தை அடைய முனையும்.

ALSO READ: குஜராத் எதிராக சிஎஸ்கே தோற்றால் என்ன நடக்கும்..? பிளே ஆஃப் வாய்ப்பு உள்ளதா?

ஐபிஎல் 2026ல் இரு அணிகளின் செயல்திறன்:

ரஜத் படிதார் தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி ஏற்கனவே பிளேஆஃப் சுற்றுக்குத் தகுதி பெற்றுவிட்டது. பெங்களூரு அணி தற்போது 18 புள்ளிகளுடன் புள்ளிப் பட்டியலில் முதலிடத்தில் உள்ளது. ஹைதராபாத் அணிக்கு எதிராக பெங்களூரு வெற்றி பெற்றால், முதல் தகுதிச் சுற்றில் தங்களின் இடம் உறுதியாகிவிடும்.

மறுபுறம், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி 13 போட்டிகளில் 16 புள்ளிகளுடன் புள்ளி அட்டவணையில் மூன்றாவது இடத்தில் உள்ளது. இருப்பினும், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்கு எதிரான ஒரு பெரிய வெற்றி, சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியை முதலிடத்திற்கு முன்னேற்றக்கூடும். ஹைதராபாத் அணியின் பேட்டிங் வரிசை சிறப்பான ஃபார்மில் இருப்பதாகத் தெரிகிறது. அபிஷேக் ஷர்மா, இஷான் கிஷன் மற்றும் ஹென்ரிச் கிளாசென் ஆகியோர் தொடர்ந்து சிறப்பாகச் செயல்பட்டு வருகின்றனர்.

ஹைதராபாத் ஸ்டேடியத்தின் பிட்ச் ரிப்போர்ட்:

ராஜீவ் காந்தி சர்வதேச மைதானத்தின் பிட்ச் பேட்டிங்கிற்கு சாதகமானதாகக் கருதப்படுகிறது. நல்ல பவுன்ஸ் காரணமாக பந்து பேட்டிற்கு எளிதாக வருகிறது. இருப்பினும், இந்த ஸ்டேடியத்தில் சுழற்பந்து வீச்சாளர்களும் திறம்பட செயல்பட முடியும். ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகள் பெரும்பாலும் சமநிலையில் உள்ளன. இரு அணிகளுக்கும் இடையே மொத்தம் 27 போட்டிகள் விளையாடப்பட்டுள்ளன, அவற்றில் எஸ்ஆர்ஹெச் 14 போட்டிகளிலும், ஆர்சிபி 12 போட்டிகளிலும் வெற்றி பெற்றுள்ளன. இந்த சீசனின் முந்தைய மோதலில், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியை 6 விக்கெட் வித்தியாசத்தில் தோற்கடித்தது.

வானிலை எப்படி..?

அக்யூவெதர் தகவலின்படி, 2026 மே 22ம் தேதியான இன்று ஹைதராபாத்தில் வானிலை தெளிவாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதிகபட்ச வெப்பநிலை 40 டிகிரி செல்சியஸ் ஆகவும், குறைந்தபட்ச வெப்பநிலை 28 டிகிரி செல்சியஸ் ஆகவும் இருக்கும் என கணிக்கப்பட்டுள்ளது.

ALSO READ: கோபத்தில் ஹர்திக் பாண்ட்யா செய்த செயல்.. பிசிசிஐ அபராதம் விதிப்பு..!

கணிக்கப்பட்ட இரு அணிகளின் விவரம்:

சன்ரைசர்ஸ் ஹைதராபாத்

அபிஷேக் சர்மா, இஷான் கிஷன் (விக்கெட் கீப்பர்), ஹென்ரிச் கிளாசென், சலில் அரோரா, ஆர் ஸ்மரன், நிதிஷ் குமார் ரெட்டி, பாட் கம்மின்ஸ் (கேப்டன்), ஷிவாங் குமார், இஷான் மலிங்கா, சாகிப் ஹுசைன், பிரபுல் ஹிங்கே

இம்பாக்ட் வீரர் – டிராவிஸ் ஹெட்

ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு

ஜேக்கப் பெத்தேல், விராட் கோலி, தேவ்தத் படிக்கல், ரஜத் படிதார் (கேப்டன்), வெங்கடேஷ் ஐயர், டிம் டேவிட், ஜிதேஷ் ஷர்மா (விக்கெட் கீப்பர்), க்ருனால் பாண்டியா, புவனேஷ்வர் குமார், சுயாஷ் சர்மா, ஜோஷ் ஹேசில்வுட்

இம்பாக்ட் வீரர்: – ரசிக் சலாம்

Follow Us