IPL 2026: ஐபிஎல் 2026 இறுதிப் போட்டியின் இடம் ஏன் மாற்றப்பட்டது? காரணம் இதுதான்!

IPL 2026 Final: ஐபிஎல் 2026 (IPL 2026) சாம்பியன் பட்டத்திற்கான இந்த மோதல் பெங்களூருவில் உள்ள எம். சின்னசாமி மைதானத்தில் தான் நடைபெற்றிருக்க வேண்டும். ஆனால், போட்டி நடைபெறும் இடத்தை பெங்களூருவிலிருந்து அகமதாபாத்திற்கு மாற்ற பிசிசிஐ-யை நிர்பந்தித்தது என்ன என்பதை தெரிந்து கொள்வோம். 

IPL 2026: ஐபிஎல் 2026 இறுதிப் போட்டியின் இடம் ஏன் மாற்றப்பட்டது? காரணம் இதுதான்!

ஐபிஎல் 2026 இறுதிப்போட்டி

Published: 

07 May 2026 16:12 PM

 IST

இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (BCCI), ஐபிஎல் 2026 இறுதிப் போட்டிக்கான இடத்தை நேற்று அதாவது 2026 மே 6ம் தேதி வெளியிட்டது. அதன்படி, ஐபிஎல் 2026 சீசனுக்கான இறுதிப்போட்டியானது வழக்கம்போல் பெங்களூருவில் உள்ள எம்.சின்னசாமி ஸ்டேடியத்தில் நடத்தப்பட வேண்டும். ஆனால், அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் நடத்தப்படும் என அறிவித்தது. அதன்படி, இந்த இறுதிப் போட்டி 2026 மே 31ம் தேதி நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெறும். இருப்பினும், இறுதிப் போட்டியானது நடப்பு சாம்பியன் அணியின் சொந்த ஸ்டேடியத்தில் தான் நடத்தப்பட வேண்டும் என்று விதிகள் கூறுகின்றன. இதன் பொருள், ஐபிஎல் 2026 (IPL 2026) சாம்பியன் பட்டத்திற்கான இந்த மோதல் பெங்களூருவில் உள்ள எம். சின்னசாமி மைதானத்தில் தான் நடைபெற்றிருக்க வேண்டும். ஆனால், போட்டி நடைபெறும் இடத்தை பெங்களூருவிலிருந்து அகமதாபாத்திற்கு மாற்ற பிசிசிஐ-யை நிர்பந்தித்தது என்ன என்பதை தெரிந்து கொள்வோம்.

ALSO READ: பஞ்சாப் கிங்ஸை வீழ்த்திய சன்ரைசர்ஸ்.. ஐபிஎல் புள்ளி பட்டியல் மாற்றம் என்ன?

பிசிசிஐ என்ன கூறியது?

செயல்பாட்டு மற்றும் தளவாடக் காரணங்களால், ஐபிஎல் 2026 பிளேஆஃப் சுற்று ஒரு சிறப்பு நிகழ்வாகக் கருதப்படுவதாக பிசிசிஐ ஓர் அதிகாரப்பூர்வ அறிக்கையில் தெரிவித்துள்ளது. அதன்படி, பிளேஆஃப் போட்டிகள் 3 வெவ்வேறு மைதானங்களில் நடத்தப்படுகின்றன.

இறுதிப் போட்டியை பெங்களூருதான் நடத்தியிருக்க வேண்டும் என்பதை பிசிசிஐ ஒப்புக்கொண்டது. ஆனால் சில அதிகாரிகளின் கோரிக்கைகளின்படி, பிசிசிஐ வேறு இடத்திற்கு மாற்ற ஒத்துகொண்டது. எனவே, போட்டி நடைபெறும் இடம் மாற்றப்பட்டுள்ளது.

உண்மையான காரணம் வேறு ஏதேனும் ஒன்றா?

எம். சின்னசாமி ஸ்டேடியத்தில் நடைபெறும் ஐபிஎல் போட்டிகளுக்கு, தங்களை விஐபி மற்றும் விவிஐபி என வகைப்படுத்தி டிக்கெட்டுகள் ஒதுக்க வேண்டும் என கர்நாடகாவில் உள்ள சில சட்டமன்ற உறுப்பினர்கள் கோரிக்கை விடுத்திருந்ததாக ஏஎன்ஐ செய்தி நிறுவனம் சமீபத்தில் வெளியிட்ட அறிக்கை ஒன்று வெளிப்படுத்தியுள்ளது. அந்த அறிக்கையின்படி, இந்தக் கோரிக்கை இறுதிப் போட்டி நடைபெறும் இடம் தொடர்பாக சிக்கல்களை ஏற்படுத்தி வந்தது. இந்தப் பிரச்சினை தீர்க்கப்படாவிட்டால், இறுதிப் போட்டி வேறு ஒரு நகரத்தில் நடத்தப்படும் என்று ஒரு தரப்பு பரிந்துரைத்ததாகவும் கூறப்படுகிறது. இதன் காரணமாகவே, இறுதிப் போட்டி அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெற உள்ளது. இதுமட்டுமின்றி, கடந்த 2025ம் ஆண்டு ஆர்சிபி சாம்பியன் பட்டத்தை வென்றபோது, அதன் வெற்றி கொண்டாட்டம் எம். சின்னசாமி ஸ்டேடியத்தில் நடைபெற்றது. இதன்போது, எதிர்பாராதவிதமாக 11 பேர் கூட்ட நெரிசல் காரணமாக உயிரிழந்தனர். இதனையும் பிசிசிஐ மனதில் கொண்டதாக கூறப்படுகிறது.

ALSO READ: பெங்களூருவில் இல்லை.. ஐபிஎல் 2026 பைனல் இங்குதான்.. இறுதிப்போட்டி இடத்தை உறுதி செய்த பிசிசிஐ!

ஐபிஎல் 2026 பிளேஆஃப் அட்டவணை:

  • 2026 மே 26 – தகுதிச்சுற்று 1 – தர்மசாலா
  • 2026 மே 27 – எலிமினேட்டர் – புது சண்டிகர்
  • 2026 மே 29 – தகுதிச்சுற்று 2 – புது சண்டிகர்
  • 2026 மே 31 – இறுதிப் போட்டி – அகமதாபாத்
Follow Us
புற்றுநோயால் பாதிக்கப்பட்ட மனைவிக்காக பைக்கையே ஆம்புலன்ஸாக மாற்றிய கணவர் - நெகிழ்ச்சி சம்பவம்
560 நாட்களாக செல்போன் டவர் மீது ஏறி போராட்டம் நடத்திய விவசாயி
ஹிமாச்சல் பிரதேசத்தின் மலைப்பகுதிகளை பாதுகாக்கும் உள்ளூர் தெய்வம்..
காலநிலை மாற்றத்தால் பாதிக்கப்படும் நாடுகளில் இந்தியா 9வது இடம்..