IPL 2026: ஐபிஎல் 2026ல் மீண்டும் அதிர்ச்சி.. புகை பிடித்த சர்ச்சையில் சிக்கிய சஹால்.. வைரலாகும் வீடியோ!

Yuzvendra Chahal Vaping Video Viral: பஞ்சாப் அணி அகமதாபாத்திலிருந்து ஹைதராபாத்திற்கு விமானத்தில் பயணம் செய்துகொண்டிருந்தபோது, ​​அர்ஷ்தீப் சிங் ஒரு வ்லாக் எடுத்துக்கொண்டிருந்தார். இந்தப் பயணத்தின்போது சஹால் வேப்பிங் செய்தது போன்ற காட்சிகள் இடம் பெற்றிருந்தது. அர்ஷ்தீப் பகிர்ந்த வீடியோவை ஒருவர் ஸ்கிரீன்ஷாட் எடுத்து, சஹால் இ-சிகரெட் புகைத்ததாகக் கூறி சமூக வலைதளங்களில் பதிவேற்றியுள்ளார்.

IPL 2026: ஐபிஎல் 2026ல் மீண்டும் அதிர்ச்சி.. புகை பிடித்த சர்ச்சையில் சிக்கிய சஹால்.. வைரலாகும் வீடியோ!

யுஸ்வேந்திர சஹால்

Published: 

07 May 2026 16:49 PM

 IST

ஐபிஎல் 2026 சீசன் (IPL 2026) பல காரணங்களுக்காகவும் சர்ச்சையில் சிக்கி வருகிறது. முன்னதாக, ககிசோ ரபாடா மற்றும் ரியான் பராக் சிகரெட் பிடித்ததற்காக சர்ச்சையில் சிக்கினர். அதனை தொடர்ந்து தற்போது இந்திய கிரிக்கெட் வீரர் யுஸ்வேந்திர சஹால் ல் விமானத்திற்குள் அமர்ந்தபடி, சிகரெட் பிடித்த காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. சில நாட்களுக்கு முன்பு நடந்த பஞ்சாப் அணிக்கு (Punjab Kings) எதிரான போட்டியில் ரியான் பராக் வேப்பிங் செய்ததற்காகக் கடும் விமர்சனத்திற்கு உள்ளானார். இதனால், அவருக்கு அபராதம் விதிக்கப்பட்டது. தற்போது, ​​பஞ்சாப் கிங்ஸ் அணியின் நட்சத்திர சுழற்பந்து வீச்சாளர் யுஸ்வேந்திர சஹால் மின்னணு சிகரெட் புகைப்பது போன்ற ஒரு வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

ALSO READ: சிஎஸ்கேவின் பிளே ஆஃப் கனவு நிறைவேறுமா..? சமன்பாடு சொல்வது என்ன?

என்ன நடந்தது..?

பஞ்சாப் அணி அகமதாபாத்திலிருந்து ஹைதராபாத்திற்கு விமானத்தில் பயணம் செய்துகொண்டிருந்தபோது, ​​அர்ஷ்தீப் சிங் ஒரு வ்லாக் எடுத்துக்கொண்டிருந்தார். இந்தப் பயணத்தின்போது சஹால் வேப்பிங் செய்தது போன்ற காட்சிகள் இடம் பெற்றிருந்தது. அர்ஷ்தீப் பகிர்ந்த வீடியோவை ஒருவர் ஸ்கிரீன்ஷாட் எடுத்து, சஹால் இ-சிகரெட் புகைத்ததாகக் கூறி சமூக வலைதளங்களில் பதிவேற்றியுள்ளார். விமானப் பயணத்தின்போது புகைப்பிடிப்பது கடுமையாகத் தடைசெய்யப்பட்டுள்ளது. மேலும், விமானங்களில் மின்னணு சிகரெட்டுகளை எடுத்துச் செல்வது தீ விபத்து அபாயத்தை ஏற்படுத்துகிறது. அந்த வீடியோ கிளிப் வைரலான பிறகு, சஹால் விமர்சனங்கள் எழுந்து வருகிறது. பலர் அவர் மீது சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளனர். வைரலான அந்த வீடியோவில், சஹாலுக்கு அடுத்த இருக்கையில் ஷஷாங்க் சிங் அமர்ந்திருக்கிறார்.

வைரலாகும் வீடியோ:


சஹால் மின்னணு சிகரெட் புகைப்பது போன்ற வீடியோ ஏஐ வீடியோவாக கூட இருக்கலாம் என்றும் பலரும் கூறிவருகின்றனர். இருப்பினும், அர்ஷ்தீப் சிங்கின் யூடியூப் சேனலில் முதலில் பகிரப்பட்ட அந்த வ்லாக், 16 நிமிடங்கள் 56 வினாடிகள் நீளமாக இருந்ததாகவும், ஆனால் பின்னர் அது 16 நிமிடங்களாகத் திருத்தப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

ALSO READ: ஐபிஎல் 2026 இறுதிப் போட்டியின் இடம் ஏன் மாற்றப்பட்டது? காரணம் இதுதான்!

முன்னதாக, ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் கேப்டன் ரியான் பராக், பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு எதிரான போட்டியின்போது டிரெஸ்ஸிங் ரூமில் வேப்பிங் செய்துகொண்டிருந்தது காணப்பட்டது. இதுகுறித்த புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் வெளியான பிறகு, பிசிசி நடவடிக்கை எடுத்து பராக்கிற்கு அவரது போட்டி ஊதியத்தில் 25 சதவீதத்தை அபராதமாக விதித்தது.

Follow Us
புற்றுநோயால் பாதிக்கப்பட்ட மனைவிக்காக பைக்கையே ஆம்புலன்ஸாக மாற்றிய கணவர் - நெகிழ்ச்சி சம்பவம்
560 நாட்களாக செல்போன் டவர் மீது ஏறி போராட்டம் நடத்திய விவசாயி
ஹிமாச்சல் பிரதேசத்தின் மலைப்பகுதிகளை பாதுகாக்கும் உள்ளூர் தெய்வம்..
காலநிலை மாற்றத்தால் பாதிக்கப்படும் நாடுகளில் இந்தியா 9வது இடம்..