IPL 2026: சிதைந்த கொல்கத்தா பேட்டிங் லைன் அப்.. சீறி பாய்ந்த ஹைதராபாத் அசத்தல் வெற்றி!

KKR vs SRH Highlights: முதலில் பேட்டிங் செய்த சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட்டுகள் இழப்பிற்கு 226 ரன்கள் எடுத்தது. இலக்கை துரத்திய கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி 16 ஓவர்களில் 161 ரன்களுக்குள் ஆல் அவுட்டானது. இதன்மூலம், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி 65 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது. 

IPL 2026: சிதைந்த கொல்கத்தா பேட்டிங் லைன் அப்.. சீறி பாய்ந்த ஹைதராபாத் அசத்தல் வெற்றி!

Kkr Vs Srh Match

Updated On: 

02 Apr 2026 23:22 PM

 IST

ஐபிஎல் 2026 சீசனின் (IPL 2026) 6வது போட்டியில் இன்று அதாவது 2026 ஏப்ரல் 2ம் தேதி கொல்கத்தாவில் உள்ள ஈடன் கார்டன் ஸ்டேடியத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியும் மோதியது. டாஸ் வென்ற கேகேஆர் அணி பந்துவீச்சைத் தீர்மானித்தது. அபிஷேக் ஷர்மா (Abhishek Sharma) மற்றும் டிராவிஸ் ஹெட் ஆகியோர் 82 ரன்கள் தொடக்க பார்ட்னர்ஷிப் அமைத்து எஸ்ஆர்ஹெச் அணிக்கு வலுவான தொடக்கத்தை அளித்தனர். தொடர்ந்து உள்ளே வந்த ஹென்ரிச் கிளாசென் 52 ரன்கள் எடுக்க, சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட்டுகள் இழப்பிற்கு 226 ரன்கள் எடுத்தது. இலக்கை துரத்திய கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி 16 ஓவர்களில் 161 ரன்களுக்குள் ஆல் அவுட்டானது. இதன்மூலம், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி 65 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது. ஐபிஎல் 2026 சீசனில் இது ஹைதராபாத்தின் முதல் வெற்றியாகும்.

ALSO READ: டி20யில் 300க்கு மேற்பட்ட சிக்ஸர்கள்.. அட்டகாசம் செய்த அபிஷேக் சர்மா!

சொந்த மண்ணில் தடுமாறிய கொல்கத்தா:


தங்களது சொந்த ஸ்டேடியமான கொல்கத்தாவில் உள்ள ஈடன் கார்டன் ஸ்டேடியத்தில் விளையாடிய கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு மோசமான தொடக்கம் அமைந்தது. 227 ரன்கள் என்ற இலக்கைத் துரத்திய கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி, சிறப்பான தொடக்கத்தைப் பெற்றது. டி20 உலகக் கோப்பையில் 33 பந்துகளில் சதம் அடித்திருந்த ஃபின் ஆலன், முதல் ஓவரிலேயே 3 பவுண்டரிகள் மற்றும் 2 சிக்ஸர்களை விளாசி ஆக்ரோஷமாக பேட் செய்தார். இருப்பினும், 7 பந்துகளில் 28 ரன்கள் எடுத்திருந்த ஆலன், பந்து வீசிய ஹர்ஷ் துபேயிடமே கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார்.

3வதாக களமிறங்கிய அங்ககிரிஷ் ரகுவன்ஷி 52 ரன்கள் எடுத்திருந்தபோதிலும் ரன் அவுட்டாக, ரிங்கு சிங்கும் தன் பங்கிற்கு 35 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். இதன்பிறக்ய் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் பந்துவீச்சாளர்கள் கட்டுக்கோப்பாகப் பந்துவீசினர்.  இதற்கிடையில், 25.2 கோடி ரூபாய்க்கு வாங்கப்பட்ட கேமரூன் கிரீன், தொடர்ந்து இரண்டாவது போட்டியிலும் வெறும் 2 ரன்கள் மட்டுமே எடுத்துத் தோல்வியுற்றார். இதன் விளைவாக, கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி 161 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து, 65 ரன்கள் வித்தியாசத்தில் போட்டியில் தோல்வியடைந்தது.

ALSO READ: பயிற்சியைத் தொடங்கிய எம்.எஸ்.தோனி.. சேப்பாக்கத்தில் நாளை விளையாடுவாரா..?

சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்காக வேகப்பந்து வீச்சாளர் ஜெய்தேவ் உனத்கட் அதிக விக்கெட்டுகளை வீழ்த்தினார். உனத்கட் 3 ஓவர்களில் 21 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளை எடுத்தார். எஹ்சான் மலிங்கா மற்றும் நிதிஷ் குமார் ரெட்டி தலா 2 விக்கெட்டுகளை எடுத்தனர். ஹர்ஷ் துபேவும் 1 விக்கெட்டை எடுத்தார்.

Follow Us
தன்னை கடித்த பாம்பை தைரியமாக பிடித்த முதியவர்
கேர்ள் ஃபிரெண்டுடன் லூட்டி அடிக்கும் குரங்கு - வைரல் வீடியோ
தன் உயிரையும் பொருட்படுத்தாமல் நாயை காப்பாற்றிய பெண்.. இணையத்தில் வைரல்..
தாயின் பக்கெட் லிஸ்டை நிறைவேற்றிய மகன்... இணையத்தில் வைரல்..