IPL 2026: கேகேஆரின் விக்கெட்டுகளை கீறிவிட்ட நூர்.. சென்னை அபார வெற்றி!

CSK vs KKR Highlights: முதலில் பேட்டிங் செய்த சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட்டுகள் இழப்பிற்கு 192 ரன்கள் எடுத்தது. இலக்கை துரத்திய கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுகள் இழப்பிற்கு 160 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதன்மூலம், சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 32 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. 

IPL 2026: கேகேஆரின் விக்கெட்டுகளை கீறிவிட்ட நூர்.. சென்னை அபார வெற்றி!

Csk Vs Kkr Highlights

Updated On: 

14 Apr 2026 23:37 PM

 IST

ஐபிஎல் 2026 சீசனின் (IPL 2026) 22வது போட்டியில் இன்று அதாவது 2026 ஏப்ரல் 14ம் தேதி சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும் சென்னை சேப்பாக்கம் ஸ்டேடியத்தில் மோதியது. இந்த போட்டியில் டாஸ் வென்ற கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி சென்னை சூப்பர் கிங்ஸ் (Chennai Super Kings) அணியை பேட்டிங் செய்ய அழைந்தது. இதன் அடிப்படையில் முதலில் பேட்டிங் செய்த சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட்டுகள் இழப்பிற்கு 192 ரன்கள் எடுத்தது. இலக்கை துரத்திய கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுகள் இழப்பிற்கு 160 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதன்மூலம், சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 32 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

ALSO READ: தமிழ் புத்தாண்டு ஸ்பெஷல்.. தமிழில் பெயர் எழுதி மகிழ்ந்த சிஎஸ்கே வீரர்கள்.. வைரலாகும் வீடியோ!

அரைசதத்தை தவறவிட்ட சாம்சன்:


சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் தொடக்க வீரர்களாக சஞ்சு சாம்சனும் ருதுராஜ் கெய்க்வாடும் களமிறங்கினர். ஆனால் கேப்டன் கெய்க்வாடின் மோசமான ஃபார்ம் இந்த போட்டியிலும் தொடர்ந்தது. ரன்கள் அடிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட கெய்க்வாட் வெறும் 7 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். சஞ்சு சாம்சனும் ஆயுஷ் மத்ரேயும் இணைந்து 47 ரன்கள் சேர்த்தனர். மத்ரே 17 பந்துகளில் 38 ரன்கள் எடுத்து, ஒரு சிறிய ஆனால் அதிரடியான இன்னிங்ஸை விளையாடினார். மேலும், சஞ்சு சாம்சன் அரைசதம் அடிக்கும் வாய்ப்பைத் தவறவிட்டு 48 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். டிவால்ட் பிரெவிஸ் 29 பந்துகளில் 41 ரன்கள் எடுத்தார். சர்பராஸ் கான் கிட்டத்தட்ட ஒவ்வொரு போட்டியிலும் நல்ல ஆட்டத்தை வெளிப்படுத்தினாலும், இந்த பெரிய ஸ்கோர்களாக எடுக்க தவறிவிட்டார். அதன்படி, கொல்கத்தாவுக்கு எதிராக சர்பராஸ் கான் 18 பந்துகளில் 23 ரன்கள் எடுத்தார்.  இறுதியாக பிரேவிஸ் தன் பங்கிற்கு 21 பந்துகளில் 41 ரன்கள் சேர்க்க, சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 192 ரன்கள் சேர்த்தது.

ALSO READ: அறிமுக போட்டி.. முதல் ஓவரில் 3 விக்கெட்.. ஐபிஎல்லை அதிர வைத்த இளம் வீரர்.. யார் இந்த பிரஃபுல் ஹிஞ்சின்?

கொல்கத்தா தொடர் தோல்வி:

கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு இந்த ஐபிஎல் 2026 சீசன் மிகவும் மோசமாக அமைந்துள்ளது. சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு எதிரான இந்தத் தோல்வி, அவர்களின் தொடர்ச்சியான நான்காவது தோல்வியாகும். இதற்கிடையில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தங்களது சொந்த மண்ணில் இரண்டாவது தொடர்ச்சியான வெற்றியைப் பதிவு செய்துள்ளது. பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு எதிரான போட்டி கைவிடப்பட்ட காரணத்தினால் ஒரு புள்ளி மட்டுமே கேகேஆர் அணியிடம் உள்ளது. அதன்படி, கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி இன்னும் ஒரு வெற்றியை கூட பதிவு செய்யவில்லை.

 

Follow Us
வரலாறு படைத்துள்ளீர்கள் - ஆர்தமிஸ் விண்வெளி பயணக்குழுவை பாராட்டிய டிரம்ப்
ஹோர்முஸ் நீரிணை வழியாக செல்லும் கப்பல்களுக்கு கட்டணம் விதிக்கத் திட்டம்!!
நடுவானில் விமானத்தின் 2 எஞ்சின்களும் செயலிழப்பு.. துரிதமாக செயல்பட்டு 69 பேரை காப்பாற்றிய பைலட்!
நடிகை ஹன்சிகா தனது மைத்துனி மீது கொடுத்த புகார்