IND vs ZIM T20 WC: இந்திய அணியில் அதிரடி மாற்றம்?.. சேப்பாக்கத்தில் அமைத்த புதிய வியூகம்?..
India vs Zimbabwe T20 World Cup: இந்திய அணியில் சில முக்கிய மாற்றங்கள் நிகழக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. குறிப்பாக, தனது தந்தை உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டிருப்பதால், அவருக்குத் துணையாக இருக்க ரிங்கு சிங் உலகக்கோப்பை தொடரில் இருந்து வெளியேறியுள்ளார். இதனால் அவர் ஜிம்பாப்வேக்கு எதிரான போட்டியில் விளையாட மாட்டார் எனக் கூறப்படுகிறது.

பயிற்சியில் இந்திய அணி
2026 டி20 உலகக்கோப்பை (T20 World Cup 2026) தொடரின் ‘சூப்பர் 8’ சுற்றில் (குரூப் 1), இந்திய அணி தனது இரண்டாவது போட்டியில் ஜிம்பாப்வேயை (India vs Zimbabwe) எதிர்கொள்ளத் தயாராகி வருகிறது. தென்னாப்பிரிக்காவிடம் சந்தித்த படுதோல்விக்குப் பிறகு, அரையிறுதி வாய்ப்பைத் தக்கவைக்க இந்தியாவுக்கு இந்தப் போட்டி மிக முக்கியமானது. இந்தப் பரபரப்பான சூழலில், போட்டிக்கு முன்னதாக சென்னையில் நடைபெற்ற பயிற்சி முகாமில் இந்திய வீரர்களின் செயல்பாடுகள் மற்றும் அணியில் ஏற்படப்போகும் மாற்றங்கள் குறித்த பல சுவாரசியமான தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதையும் படிக்க: ஐசியூ-வில் தந்தை.. இந்திய அணியிலிருந்து வெளியேறிய முக்கிய வீரர்.. அதிர்ச்சியில் ரசிகர்கள்!!
பயிற்சியில் தீவிரம் காட்டிய அபிஷேக் சர்மா:
இந்திய அணியின் அதிரடி தொடக்க ஆட்டக்காரரான அபிஷேக் சர்மா, தற்போதைய தொடரில் தொடர்ச்சியான பின்னடைவைச் சந்தித்து வருகிறார். முதல் மூன்று போட்டிகளிலும் ரன் ஏதும் எடுக்காமல் ‘டக் அவுட்’ ஆகி அதிர்ச்சியளித்த அவர், அகமதாபாத்தில் நடைபெற்ற போட்டியிலும் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தார். எனினும், தற்போது சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்ற பயிற்சியில் அவர் மிகுந்த அர்ப்பணிப்பைக் காட்டி வருகிறார்.
சுமார் 100 நிமிடங்கள் வரை தீவிர பயிற்சியில் ஈடுபட்ட அவர், ஆஃப்-ஸ்பின் பந்துகளுக்கு எதிராகத் தனது ஆட்டத்தை மெருகேற்றிக் கொண்டார். பயிற்சியின் இறுதியில் அவர் அடித்த சில ‘சிக்ஸர்கள்’ சேப்பாக்கத்தின் கேலரி வரை சென்று விழுந்தன, இது அவர் மீண்டும் ஃபார்முக்கு வருவதற்கான அறிகுறியாகப் பார்க்கப்படுகிறது. மோசமான ஃபார்மில் இருந்தாலும், அணி நிர்வாகம் அவருக்கு மீண்டும் ஒரு வாய்ப்பு வழங்கவே விரும்புகிறது.
அணியில் ஏற்படப்போகும் மாற்றங்கள்:
இந்திய அணியில் சில முக்கிய மாற்றங்கள் நிகழக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. குறிப்பாக, தனது தந்தை உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டிருப்பதால், அவருக்குத் துணையாக இருக்க ரிங்கு சிங் உலகக்கோப்பை தொடரில் இருந்து வெளியேறியுள்ளார். இதனால் அவர் ஜிம்பாப்வேக்கு எதிரான போட்டியில் விளையாட மாட்டார் எனக் கூறப்படுகிறது.
சஞ்சு சாம்சனுக்கு வாய்ப்பு?: ரிங்கு சிங் இல்லாத நிலையில், மிடில் ஆர்டரில் சஞ்சு சாம்சன் களமிறக்கப்பட வாய்ப்புள்ளதாக தெரிகிறது.
வாஷிங்டன் சுந்தர் vs அக்ஷர் படேல்: தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான ஆட்டத்தில் வாஷிங்டன் சுந்தரின் செயல்பாடு சிறப்பாக இல்லாததால், அவருக்குப் பதிலாக அக்ஷர் படேல் அணிக்குள் வரக்கூடும் என்றும் கூறப்படுகிறது.
இதையும் படிக்க: கவுதம் காம்பீர் செய்யும் அரசியல் தான் காரணம்…. பாகிஸ்தான் அணி வீரர் பரபரப்பு குற்றச்சாட்டு
சூர்யகுமார் யாதவின் அதிரடி முயற்சி:
உலகின் ‘நம்பர் 1’ டி20 வீரரான சூர்யகுமார் யாதவ், கடந்த போட்டிகளில் சற்று நிதானமாகவே விளையாடி வருகிறார். தனது இயல்பான அதிரடி ஆட்டத்திற்குத் திரும்ப வேண்டும் என்ற நோக்கில், சேப்பாக்கத்தில் நடந்த பயிற்சியின் போது இரண்டு மணி நேரம் இடைவிடாமல் பந்துகளைச் சிதறடித்தார். ஜிம்பாப்வே போன்ற அணிகளுக்கு எதிராக ஒரு பெரிய இன்னிங்ஸை விளையாடி, தனது தன்னம்பிக்கையை மீட்டெடுக்க அவர் திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.