AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்பொழுதுபோக்குவெப் ஸ்டோரிஸ்லைஃப்ஸ்டைல்வணிகம்டெக்னாலஜிஇந்தியாஆன்மீகம்உலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரி

IND vs WI: அபிஷேக்கின் ஆக்ரோஷ அரைசதம்.. வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு 224 ரன்கள் இலக்கு!

IND vs WI 3rd T20: இந்தியா - வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையிலான 3வது டி20 போட்டி இந்தூரில் தற்போது நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 20 ஓவர்கள் முடிவில் அனைத்து விக்கெட்டை இழந்து 223 ரன்கள் எடுத்தது. அபிஷேக் சர்மா 30 பந்துகளில் 5 சிக்ஸர்கள் மற்றும் 6 பவுண்டரிகளின் உதவியுடன் 69 ரன்கள் எடுத்து இந்தியாவுக்காக அதிகபட்ச ரன்களை எடுத்தார்.

IND vs WI: அபிஷேக்கின் ஆக்ரோஷ அரைசதம்.. வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு 224 ரன்கள் இலக்கு!
அபிஷேக் சர்மா - திலக் வர்மாImage Source: BCCI/ Twitter
Mukesh Kannan
Mukesh Kannan | Updated On: 11 Oct 2026 21:20 PM IST

இந்தியா – வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு (IND vs WI) இடையிலான 3வது டி20 போட்டி இந்தூரில் தற்போது நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி (Indian Cricket Team) 20 ஓவர்கள் முடிவில் அனைத்து விக்கெட்டை இழந்து 223 ரன்கள் எடுத்தது. இதையடுத்து, வெஸ்ட் இண்டீஸ் அணியின் வெற்றிக்கு 224 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டது. அபிஷேக் சர்மா 30 பந்துகளில் 5 சிக்ஸர்கள் மற்றும் 6 பவுண்டரிகளின் உதவியுடன் 69 ரன்கள் எடுத்து இந்தியாவுக்காக அதிகபட்ச ரன்களை எடுத்தார். இஷான் கிஷன் 37 ரன்களும், திலக் வர்மா 28 ரன்களும் எடுத்தனர். நிதிஷ் குமார் ரெட்டி 21 ரன்களும், அக்சர் படேல் 20 ரன்களும் எடுத்தனர். கடைசி ஓவரில் 3 பவுண்டரிகளை அடித்த பிரின்ஸ் யாதவ், இந்தியாவின் ஸ்கோர் 223-ஐ எட்டுவதில் முக்கியப் பங்காற்றினார்.

ALSO READ: திரும்பிய ஃபின் ஆலன், லாக்கி ஃபெர்குசன்.. இந்தியாவிற்கு எதிரான NZ ஒருநாள் அணி அறிவிப்பு!

அபிஷேக் சர்மா அரைசதம்:


இந்திய அணி பேட்டிங் செய்த ஆரம்பம் முதலே அதிரடியை தொடர்ந்தது. தொடக்க ஆட்டக்காரர் அபிஷேக் சர்மா வேகமாக அரைசதம் அடித்தார். அவரது ஆக்ரோஷமான ஆட்டம், பவர்பிளேயில் இந்தியா ஒரு 80 ரன்களை தொட்டது. ஒரு கட்டத்தில், இந்திய அணியின் ஸ்கோர் 250 ரன்களைத் தாண்டிவிடும் போலத் தோன்றியது. இருப்பினும், இறுதிக்கட்டத்தில் வெஸ்ட் இண்டீஸ் அணியின் பந்துவீச்சாளர்கள் சிறப்பாக பந்துவீசினர். அவர்கள் அடுத்தடுத்து விக்கெட்டுகளை வீழ்த்தி, இந்திய பேட்ஸ்மேன்களைக் கட்டுப்படுத்தி, இறுதியில் அந்த இன்னிங்ஸை 223 ரன்களில் முடிவுக்குக் கொண்டுவந்தனர்.

வெஸ்ட் இண்டீஸ் அணியின் பந்துவீச்சாளர்களில், எஸ். ஜோசப் சிறப்பாகப் பந்துவீசினார். அவர் 4 ஓவர்களில் 54 ரன்கள் மட்டுமே கொடுத்து 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார். இந்தி்ய ஆட்டத்தின் இறுதியில் விக்கெட்டுகள் அடுத்தடுத்து வீழ்ந்ததால், இந்தியா ஒரு பெரிய ஸ்கோர் எடுக்கும் வாய்ப்பைத் தவறவிட்டது.

ALSO READ: 3வது டி20யிலும் சேஸிங்தான் வேணும்.. இந்தியாவை பேட் செய்ய அழைத்த வெஸ்ட் இண்டீஸ்!

224 ரன்கள் இலக்கு:

வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு இப்போது 224 ரன்கள் இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்தூர் ஆடுகளம் பேட்டிங்கிற்கு சாதகமாக இருப்பதால், இந்த இலக்கைத் துரத்துவதற்கு வெஸ்ட் இண்டீஸ் பேட்ஸ்மேன்கள் தொடக்கத்திலிருந்தே விரைவாக ரன்களைக் குவிக்க வேண்டும். மறுபுறம், இந்திய பந்துவீச்சாளர்கள் பவர்பிளேயில் விக்கெட்டுகளை வீழ்த்தினால், அவர்களால் ஆட்டத்தின் கட்டுப்பாட்டைத் தங்கள் பக்கம் கொண்டுவர ஒரு வாய்ப்பு கிடைக்கும்.

Follow Us