IND vs SA ODI Series: கேப்டனாக கே.எல்.ராகுல்.. தென்னாப்பிரிக்கா ஒருநாள் தொடருக்கான இந்திய அணி அறிவிப்பு!

Indian Cricket Team: தென்னாப்பிரிக்காவிற்கு எதிரான 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடருக்கான 15 பேர் கொண்ட அணியை பிசிசிஐ அறிவித்துள்ளது. அதேநேரத்தில், ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒருநாள் தொடரைத் தவறவிட்ட ரவீந்திர ஜடேஜாவும், நீண்ட நாட்களுக்கு பிறகு ருதுராஜ் கெய்க்வாட்டும் இந்திய ஒருநாள் அணிக்கு திரும்பியுள்ளார்.

IND vs SA ODI Series: கேப்டனாக கே.எல்.ராகுல்.. தென்னாப்பிரிக்கா ஒருநாள் தொடருக்கான இந்திய அணி அறிவிப்பு!

கே.எல்.ராகுல்

Updated On: 

23 Nov 2025 18:38 PM

 IST

தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான ஒருநாள் தொடரில் (IND vs SA ODI Series) சுப்மன் கில் மற்றும் ஷ்ரேயாஸ் ஐயர் இல்லாத நிலையில், இந்திய அணிக்கு (Indian Cricket Team) கே.எல். ராகுல் கேப்டனாக செயல்படுவார் என்று பிசிசிஐ தெரிவித்துள்ளது. இதையடுத்து, தென்னாப்பிரிக்காவிற்கு எதிரான 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடருக்கான 15 பேர் கொண்ட அணியை பிசிசிஐ அறிவித்துள்ளது. அதேநேரத்தில், ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒருநாள் தொடரைத் தவறவிட்ட ரவீந்திர ஜடேஜாவும், நீண்ட நாட்களுக்கு பிறகு ருதுராஜ் கெய்க்வாட்டும் இந்திய ஒருநாள் அணிக்கு திரும்பியுள்ளார்.

இந்தியா – தென்னாப்பிரிக்கா இடையிலான ஒருநாள் தொடர்:

இந்தியாவுக்கும் தென்னாப்பிரிக்காவுக்கும் இடையிலான 3 போட்டிகள் கொண்ட தொடர் வருகின்ற 2025 நவம்பர் 30ம் தேதி ராஞ்சியில் தொடங்குகிறது. விக்கெட் கீப்பர்-பேட்ஸ்மேன் கே.எல்.ராகுல் இரண்டு வருட இடைவெளிக்குப் பிறகு மீண்டும் இந்திய அணிக்கு தலைமை தாங்கவுள்ளார். முன்னதாக, கே.எல்.ராகுல் கடைசி கேப்டன்சி கடந்த 2023ம் ஆண்டு தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான ஒருநாள் தொடருக்கான இந்திய அணிக்கு தலைமை தாங்கினார்.

இந்திய கிரிக்கெட் ரசிகர்கள் எதிர்பார்த்தபடி, விராட் கோலி மற்றும் ரோஹித் சர்மா ஆகியோர் அணியில் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். தொடர்ந்து, 2025சாம்பியன்ஸ் டிராபிக்கான இந்திய அணியில் இடம் பிடித்திருந்த நட்சத்திர ஆல்ரவுண்டர் ரவீந்திர ஜடேஜா சமீபத்தில் நடைபெற்ற ஆஸ்திரேலிய சுற்றுப்பயணத்திற்கு தேர்வு செய்யப்படவில்லை. தற்போது, தென்னாப்பிரிக்காவிற்கு எதிரான ஒருநாள் தொடருக்கான இந்திய அணியில் இடம் பிடித்துள்ளார்.

மீண்டும் அணியில் ரிஷப் பண்ட்:


2025 சாம்பியன்ஸ் டிராபிக்குப் பிறகு முதல் முறையாக ரிஷப் பண்ட் இந்திய அணிக்குத் திரும்பியுள்ளார். இருப்பினும், சாம்பியன்ஸ் டிராபியில் பண்ட் ஒரு போட்டியில் கூட விளையாடவில்லை. இந்தத் தொடரில் ரிஷப் பண்ட்டுக்கு வாய்ப்பு கிடைக்குமா என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். 2023க்குப் பிறகு முதல் முறையாக ருதுராஜ் கெய்க்வாட் ஒருநாள் அணியில் மீண்டும் இடம் பெற்றுள்ளது. அதே நேரத்தில் மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன் திலக் வர்மாவுக்கும் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

இந்த தொடரில் இருந்து நட்சத்திர வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரித் பும்ராவுக்கு ஓய்வு வழங்கப்பட்டுள்ளது. அதே நேரத்தில், வேகப்பந்து வீச்சாளர் முகமது சிராஜுக்கும் இந்த தொடரில் இருந்து ஓய்வு வழங்கப்பட்டுள்ளது. ஜடேஜா திரும்பியதால் சுழற்பந்து வீச்சாளர் அக்சர் படேல் அணியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார். இந்தியா – தென்னாப்பிரிக்கா இடையிலான ஒருநாள் தொடரின் முதல் போட்டி வருகின்ற 2025 நவம்பர் 30ம் தேதி ராஞ்சியிலும், இரண்டாவது போட்டி வருகின்ற 2025 டிசம்பர் 3ம் தேதி ராய்ப்பூரிலும், 3வது மற்றும் கடைசி போட்டி வருகின்ற 2025 டிசம்பர் 6ம் தேதி விசாகப்பட்டினத்திலும் நடைபெறும்.

இந்திய அணி:

ரோஹித் சர்மா, விராட் கோலி , யஷஸ்வி ஜெய்ஸ்வால், திலக் வர்மா, கே.எல்.ராகுல் (கேப்டன்), ரிஷப் பண்ட், வாஷிங்டன் சுந்தர், ரவீந்திர ஜடேஜா, குல்தீப் யாதவ், நிதிஷ் குமார் ரெட்டி, ருதுராஜ் கெய்க்வாட், ஹர்ஷித் ராணா, துருவ் ஜூரல், அர்ஷ்தீப் சிங், பிரசித் கிருஷ்ணா.

TRAI இன் புதிய 160 எண்.. இதன் சாராம்சம் என்ன?
திரிஷ்யம் 3 படம் இப்படி தான் இருக்கும்.. மனம் திறந்த ஜித்து ஜோசப்..
15,000 கி.மீ பயணித்த மாரிச் கழுகு
திறமையான வெளிநாட்டு தொழிலாளர்கள் தேவை... டிரம்ப்பின் முரணான பேச்சால் அமெரிக்கர்கள் அதிர்ச்சி