தைப்பூச திருவிழா…முருகன் கோயில்களில் அரோகரா கோஷத்துடன் சிறப்பு வழிபாடு! | TV9 Tamil News

தைப்பூச திருவிழா…முருகன் கோயில்களில் அரோகரா கோஷத்துடன் சிறப்பு வழிபாடு!

Updated On: 

01 Feb 2026 15:50 PM

 IST

தைப்பூசத்தையொட்டி, தமிழகத்தில் உள்ள ஆறுபடை முருகன் கோயில்கள் உள்ளிட்ட பல்வேறு கோயில்களில் அதிகாலை முதல் சுவாமிக்கு சிறப்பு அபிஷேகங்கள், சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன. இந்த விழாவில் திரளான பக்தர்கள் பங்கேற்று முருகனை தரிசனம் செய்தனர். முருகன் பல்வேறு அலங்காரத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சி அளித்தார் .

1 / 5தைப்பூசத்தையொட்டி,  ஆறுபடை வீடுகளில்  முதல் வீடான திருப்பரங்குன்றம்  முருகன் கோவிலில்  நேற்று இரவு முதலே  ஏராளமான பக்தர்கள் கோவிலில் குவிந்து  சுவாமி தரிசனம் செய்து வருகின்றனர்.  இதற்காக  அதிகாலையில்  சுவாமிக்கு  சிறப்பு அபிஷேகம்,  சிறப்பு ஆராதனைகள் செய்யப்பட்டு,  சிறப்பு அலங்காரம்  செய்யப்பட்டது.  இதைத் தொடர்ந்து,  சுவாமிக்கு தீபாராதனை  காண்பிக்கப்பட்டு  பக்தர்கள்  வழிபாடு செய்தனர். மேலும், இன்று பெளர்ணமி என்பதால், கோவில் வளாகத்தில்  ஏராளமான பக்தர்கள் குவிந்திருந்தனர். கிரிவலப் பாதையிலும் பக்தர்கள் காவடி எடுத்து நேர்த்திக் கடனை செலுத்தி வருகின்றனர்.

தைப்பூசத்தையொட்டி, ஆறுபடை வீடுகளில் முதல் வீடான திருப்பரங்குன்றம் முருகன் கோவிலில் நேற்று இரவு முதலே ஏராளமான பக்தர்கள் கோவிலில் குவிந்து சுவாமி தரிசனம் செய்து வருகின்றனர். இதற்காக அதிகாலையில் சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம், சிறப்பு ஆராதனைகள் செய்யப்பட்டு, சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது. இதைத் தொடர்ந்து, சுவாமிக்கு தீபாராதனை காண்பிக்கப்பட்டு பக்தர்கள் வழிபாடு செய்தனர். மேலும், இன்று பெளர்ணமி என்பதால், கோவில் வளாகத்தில் ஏராளமான பக்தர்கள் குவிந்திருந்தனர். கிரிவலப் பாதையிலும் பக்தர்கள் காவடி எடுத்து நேர்த்திக் கடனை செலுத்தி வருகின்றனர்.

2 / 5

3 / 5

ஆறுபடை வீடுகளில் 3- ஆம் படை வீடான பழனி

4 / 5

சென்னை வடபழனி ஆண்டவர் முருகன் கோவிலில் இன்று தைப்பூச திருவிழா கோலாகலமாக கொண்டாடப்பட்டது. அதிகாலையில் கோயில் நடை திறக்கப்பட்டு வடபழனி ஆண்டவருக்கு சிறப்பு அபிஷேகங்கள், சிறப்பு பூஜைகள் மேற்கொள்ளப்பட்டன. இதில், ஏராளமான பக்தர்கள் பால் காவடி, மயில் காவடி எடுத்து தங்களது நேர்த்திக்கடனை செலுத்தினர். விழாவில், திரளான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.

5 / 5

கடலூர் மாவட்டம், வடலூரில் அருட்பிரகாச வள்ளலார் சத்தியஞான சபையில் 155- ஆவது தைப்பூச விழா வெகு விமர்சையாக நடைபெற்றது. விழாவில், (ஞாயிற்றுக்கிழமை) காலை 6 மணி, 10 மணி, பிற்பகல் 1 மணி, இரவு 7 மணி, 10 மணி மற்றும் திங்கள்கிழமை காலை 5:30 மணி என 6 காலம் 7 திரை நீக்கி ஜோதி தரிசனம் நடைபெற்றது. இந்த விழாவை காண்பதற்காக தமிழகம் மற்றும் இன்றி பல்வேறு பகுதிகளில் இருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் வருகை தந்திருந்தனர். இன்று நடைபெற்ற ஜோதி தரிசன விழாவில் பக்தர்கள் கடும் குளிரையும் பொருட்படுத்தாமல் ஜோதி தரிசனம் செய்தனர்.

Follow Us