Forum on Faith 2025 : சர்வதேச மாநாட்டில் மகாந்த் சுவாமி மகாராஜ் கொரவிப்பு
உலக அளவிலான BAPS சுவாமிநாராயண சன்ப்தாவின் ஆன்மிகத் தலைவரான பரமபூஜ்ய மகாந்த் சுவாமி மகாராஜ், சமூக ஒற்றுமையையும் நல்லிணக்கத்தையும் கட்டியெழுப்பியதற்காக, நியூயார்க் நகரில் நடைபெற்ற Forum on Faith 2025 என்ற சர்வதேச மாநாட்டில் சிறந்த சமுதாயத்தை உருவாக்கிய சாதனையாளர் என்ற விருதை பெற்றுள்ளார்.
மும்பை, அக்டோபர் 25, 2025 : உலக அளவிலான BAPS சுவாமிநாராயண சன்ப்தாவின் ஆன்மிகத் தலைவரான பரமபூஜ்ய மகாந்த் சுவாமி மகாராஜ், சமூக ஒற்றுமையையும் நல்லிணக்கத்தையும் கட்டியெழுப்பியதற்காக, நியூயார்க் நகரில் நடைபெற்ற Forum on Faith 2025 என்ற சர்வதேச மாநாட்டில் சிறந்த சமுதாயத்தை உருவாக்கிய சாதனையாளர் என்ற விருதை பெற்றுள்ளார். இந்த விருது, உலக நாடுகளைச் சேர்ந்த ஆன்மிகத் தலைவர்கள், தூதர்கள், நிர்வாக அதிகாரிகள், தொழில் முனைவோர்கள் மற்றும் பன்னாட்டு ஊடகங்கள் முன்னிலையில் வழங்கப்பட்டது. உலக அளவிலான மனிதநேயம், சமூக சேவை மற்றும் மத நல்லிணக்கத்திற்காக மேற்கொண்ட முயற்சிகளுக்காக BAPS சன்ப்தா பெற்றுள்ள மிகப்பெரிய அங்கீகாரங்களில் இதுவும் ஒன்று.
உலக அளவில் மனித நேயத்தை பரப்பும் BAPS அமைப்பு
மகாந்த் சுவாமி மகாராஜ் தலைமையில், BAPS அமைப்பு உலகம் முழுவதும் 1800-க்கும் மேற்பட்ட கோவில்கள் மற்றும் கலாசார மையங்களை நிறுவி வளர்த்துள்ளது. இவ்வமைப்பின் கோவில்கள் வழிபாட்டு தலங்களாக மட்டுமல்லாமல், லட்சக்கணக்கான மக்களின் வாழ்க்கையை வளப்படுத்தும் சமூக மையங்களாகவும் செயல்பட்டு வருகின்றன.
இந்த மையங்கள் மூலம் நடைபெறும் முக்கியமான சேவைகள்
-
இளைஞர் நலன் மற்றும் தலைமைத்துவ பயிற்சி திட்டங்கள்
-
பெண்கள் முன்னேற்றம் மற்றும் சமூக பங்களிப்பு செயல்முறைகள்
-
மருத்துவ முகாம்கள் மற்றும் சுகாதார உதவி
-
போதை தடுப்பு விழிப்புணர்வு மற்றும் மனநலம் பாதுகாப்பு இயக்கங்கள்
-
கல்வி மற்றும் தொழில் வழிகாட்டுதல்
-
சுற்றுச்சூழல் பாதுகாப்பு மற்றும் மரம் நடும் திட்டங்கள்
-
இயற்கை பேரிடர்களின் போது அவசர உதவி மற்றும் மீட்பு சேவை
சமய நல்லிணக்கத்திற்கு பாலமாய் நிற்கும் BAPS
பிரபலமான பாப்ஸ் அக்ஷர்தாம் கோவில்கள் புதுடெல்லி, நியூ ஜெர்சி, அபு தாபி போன்றவை உலக மத நல்லிணக்கத்தின் சின்னங்களாக கருதப்படுகின்றன. இவை மதம், மொழி, தேசம் என்பவற்றைத் தாண்டி உலக மக்களை ஒன்றிணைக்கும் அமைதியின் தலங்களாக உலகம் முழுவதும் போற்றப்படுகின்றன.
மகாந்த் சுவாமி மகாராஜின் முக்கிய ஆன்மிக வழிகாட்டும் கோட்பாடு, அடுத்தவர்களின் சந்தோஷமே நமது உண்மையான மகிழ்ச்சி என்பது தான். இந்த ஒரே தத்துவத்தை நம்பி, 10 லட்சத்திற்கும் மேற்பட்ட தன்னார்வலர்கள் இன்று உலகெங்கும் சேவை செய்கின்றனர்.