அதிர்ஷ்டம் நிறைந்த ஆகஸ்ட் 8.. இன்று இரவு இதை செய்தால் போதும்!
Lion's Gate Portal: ஆகஸ்ட் 8 ஆம் தேதி லயன்ஸ் கேட் போர்டல் திறப்பு என்பது ஜோதிடத்தில் மிகவும் சக்திவாய்ந்த நாளாகக் கருதப்படுகிறது. சூரியன் மற்றும் சந்திரன் சிம்ம ராசியில் இணையும் இந்த நாளில், நம் ஆசைகளை வெளிப்படுத்தி நிறைவேற்றிக் கொள்ளலாம். எண் கணிதத்தின் படி 8 என்ற எண்ணின் சக்தியும் இதில் முக்கிய பங்கு வகிக்கிறது.

ஜோதிடத்தில் பல்வேறு விதமான முக்கிய நிகழ்வுகள் நாள்தோறும் நடைபெற்றுக் கொண்டுதான் இருக்கிறது. ஒவ்வொரு முறையும் ஜோதிடத்தில் ஏதேனும் மாற்றங்கள் நிகழும் போது அது 12 ராசிகளிலும் பல்வேறு விதமான தாக்கத்தை ஏற்படுத்தும் என சாஸ்திரத்தில் சொல்லப்பட்டுள்ளது. இப்படியான நிலையில் ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்ட் 8ஆம் தேதி லயன்ஸ் கேட் போர்டல் திறப்பு எனப்படும் முக்கிய நிகழ்வு நடைபெறுகிறது. இது என் கணித ஜோதிடத்திலும் மேற்கத்திய ஜோதிடத்திலும் மிகவும் சக்தி வாய்ந்த நாளாக பார்க்கப்படுகிறது. அதாவது சந்திரன் சிம்ம ராசியில் சூரியனுடன் இணையும் போது இந்த லயன் கேட் நுழைவு வாயில் திறக்கும் என சொல்லப்படுகிறது.
லயன்ஸ் கேட் திறப்பு
வாழ்க்கையில் மிகவும் அற்புதமான விஷயங்களை ஏற்படுத்துவதற்கு அதிர்ஷ்டமாக கருதப்படும் நேரத்தை இந்த லயன்ஸ் கேட் நுழைவாயில் திறக்கும் காலம் அளிக்கிறது என நம்பப்படுகிறது. இதன் மூலம் வாழ்க்கையின் அனைத்து சிரமங்களில் இருந்தும் நாம் விடுபடலாம் என நம்பப்படுகிறது.
ஜோதிட சாஸ்திரத்தில் சந்திரன் ஒரு நட்சத்திரத்தில் இருந்து மற்றொரு நட்சத்திரத்திற்கு இடம் பெயர்வது என்ன மாதிரியான தாக்கம் ஏற்படுத்தும் என்பதை ஜோதிடம் மற்றும் பஞ்சாங்கம் கணிக்கிறது. அதேசமயம் எண் கணிதத்தில் ஒவ்வொரு கிரகத்திற்கும் ஒரு எண் உள்ளது. அதன்படி 8 என்ற எண் சனி பகவானுடன் தொடர்புடையதாக கூறப்படுகிறது. சனிபகவான் ஒரு சக்தி வாய்ந்த கிரகமாக கருதப்படுகிறார். அதேபோல் எண் கணிதத்தில் 8 என்ற எண் மிகவும் ஆளுமை நிறைந்த வலிமையானதாக பார்க்கப்படுகிறது.
Also Read: Deepam: நன்மைகள் அளிக்கும் தீப வழிபாடு.. கவனிக்க வேண்டிய விஷயங்கள்!
நம்பிக்கையின் வெளிப்பாடு
பண்டைய எகிப்தியர்களின் நம்பிக்கையின்படி மனதை ஒருநிலைப்படுத்தி தெளிவாக வாழ்க்கையில் நேர்மறையான விஷயங்களை வெளிப்படுத்துவதன் மூலமாக இந்த லயன்ஸ் கேட் போர்டல் பயன்பாட்டை ஒருவர் பயன்படுத்திக் கொள்ள முடியும் என நம்பப்படுகிறது. பண்டைய எகிப்தில் மிகப்பெரிய அளவு மதிக்கப்பட்ட சீரியஸ் என்ற நட்சத்திரம் சோப் டெட் என்ற தெய்வத்தின் அடையாளமாகவும் பல நிகழ்வுகளின் எச்சரிக்கையாகவும் பார்க்கப்பட்டது.
எட்டாவது மாதத்தின் எட்டாவது நாளில் நீங்கள் உங்கள் ஆசைகளை இந்த பிரபஞ்சத்திடம் வெளிப்படுத்தினால் அதனை விரைவில் நீங்கள் அடைவீர்கள் என்பது விதியாகும். பிரபஞ்ச விதிகளின் அடிப்படையில் சில எண்கள் மற்றும் தேதிகள் மிகவும் சக்தி வாய்ந்த வருவாயாக பார்க்கப்படுகிறது.
Also Read: Evil Eye: கண் திருஷ்டி நீக்கும் ஊமத்தங்காய் தீப வழிபாடு!
இந்நாளில் நம்முடைய ஆசைகள் நிறைவேற ஆகஸ்ட் எட்டாம் தேதி காலை 8 மணி அல்லது இரவு 8 மணி 8 நிமிடங்களுக்கு உங்கள் விருப்பத்தை ஒரு காகிதத்தில் எட்டு முறை எழுதி அதனை எட்டு முறை சத்தமாக சொல்ல வேண்டும் என ஜோதிட சாஸ்திரத்தில் கூறப்படுகிறது. அதன் பிறகு அந்த காகிதத்தை எரித்து அதன் சாம்பலை காற்றில் ஊதவும். இதன்மூலம் உங்கள் விருப்பம் நிறைவேறும் என நம்பப்படுகிறது.
(சாஸ்திர நம்பிக்கை அடிப்படையில் இக்கட்டுரையில் எழுதப்பட்டிருக்கும் தகவல்கள் இடம் பெற்றுள்ளது. இதற்கு அறிவியல்பூர்வ விளக்கம் இல்லை)